ஸ்லோகம் 41
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மானம் மன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம் |
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜனகஜனனீமத் ஜகதிதம்
மூலாதாரத்தில் ஆனந்தத் தாண்டவம்
(தேவியின் ஸாக்ஷாத்காரம், குன்ம நோய் நிவாரணம்)
(தவ) உன்னுடைய (மூலே ஆதாரே) மூலாதார சக்கரத்தில் (ஸாஸ்ய-பரயா) நடனம் செய்வதில்
நோக்கமுள்ளவளும் (ஸமயா) ஸமயா எனப் பெயர் கொண்டவளுமான உன்னுடன் (ஸஹ) கூட (நவரஸ-மஹா-தாண்டவ-நடம்)
நவரஸம் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகிற (நவாத்மானம்) ஆனந்த பைரவரை (மன்யே) தியானம்
செய்கிறேன். (உதயவிதிம்) பிரளயத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை (உத்திச்ய) கருதி (தயயா)
கருணையுடன் (ஸ்நாதாப்யாம்) தம்பதியாகக் கூடியவர்களான (ஏதாப்யாம் உபாப்யாம்) உங்கள்
இருவர்களாலும் (இதம் ஜகத்) இவ்வுலகமானது (ஜனக-ஜனனீ-மத்) தந்தையும் தாயும் உடையதாக
(ஜஜ்ஞே) ஆகிறது.
இதுவரை விளக்கப்பட்டது “ஆனந்தலஹரி” (ஸ்லோகம் 1 முதல் 41 வரை) எனவும் இனி
வரும் ஐம்பத்தொன்பது சுலோகங்கள் கொண்ட (42 முதல் 100 வரை) கொண்ட பகுதி சௌந்தர்யலஹரி
எனவும் பிரித்துக் கூறப்படும். முன் பகுதி கைலாஸத்தில் இருந்து கிடைத்தது. பின்பகுதி
ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளியது.
மஹாபெரியவா சொன்னது
நூறு ஸ்லோகங்களும் கைலாசத்தில் இருந்து வந்திருந்தால் நமக்கு கஷ்டந்தான்.
அப்பொழுது ஸ்ரீ ஆசார்யாளுடைய வாக்கின் மகிமையை நாம் அனுபவிக்க முடியாது. ஆசார்யாள்
செய்தவைகளை விடக் கைலாஸத்தில் இருந்து வந்தவைகள் உயர்வாகத் தோன்றவில்லை. அவையெல்லாம்
மந்திரங்கள் தான்.

No comments:
Post a Comment