Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 56

 

ஸ்லோகம் 56

 

தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா

நிலீயந்தே தோயே நியத-மநிமேஷா: சபரிகா:

இயஞ்ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம்

ஜஹாத்ஹி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி||

 

மீன்களின் அழகையும் நீலோத்பலத்தின் அழகையும் வெல்லும் கண்கள் (பந்த விமோசனம், நேத்ரதோஷ நிவாரணம்)

 

(அபர்ணே) யாருக்குங் கடன் படாததால் ‘அப-ருணா’ எனப் பெயர் பெற்றவளே! (தவ) உன்னுடைய (கர்ணே-) காதில் (ஜப-நயன) மெதுவாக ஓதுவது போன்று கண்கள் காணப்படுவதால் (பைசுன்ய-சகிதா:) தங்களைப் பற்றிக் கோள் சொல்வதாக அச்சமடைந்து (சபரிகா:) பெண்மீன்கள் (அநிமேஷா) கண்களை மூடாமல் பார்த்துக் கொண்டே (தோயே) நீரில் (நிலீயந்தே) மறைந்து கொண்டிருக்கின்றன என்பது (நியதம்) நிச்சயம். (இயம்) இந்த (ஸ்ரீ:ச) கண்ணின் அழகாகிய தேவதையும் (ப்ரத்யூஷே)

 

காலையில் (பத்தச்சத-புட) இதழ்கள் மூடிக் கொள்வதால் கதவு சாத்தப்பட்டது போன்ற (குவலயம்) கருநெய்தல் பூவை (ஜஹாதி) விட்டுவிடுவது போலும் (நிசி ச) இரவில் (தத்) அதை (விகடய்ய) திறந்து கொண்டு (ப்ரவிசதி) மீண்டும் புகுவது போலும் தோன்றுகிறது.

 

பரதேவதை கண் கொட்டாமல் இருப்பது போல் மீன்களும் கண் கொட்டுவதில்லை. இதனால் தேவியின் கண்கள் மீன்களைத் தங்களுக்குப் போட்டியாகக் கருதிக் காதுகளிடம் சென்று கோள் சொல்வதாக வர்ணிக்கப்படுகிறது. மீன்களைப் போன்ற கண்ணழகு படைத்த மூர்த்த் விசேஷம் மதுரையில் உள்ளது. ஆகையால் அங்கே மீனாக்ஷி கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை எனக் கூறுவர்.

 

அபர்ணே – அம்பாள் பக்தர்கள் பூஜித்துக் கேட்கும் வரன்களை உடனே கொடுத்து அனுக்கிரகிப்பதால் அவர்களிடம் (ருணம்) கடன்படாமல் இருப்பவள். அல்லது அம்பாள் பார்வதியாகத் தவம் செய்யும் போது (பர்ணம்) இலையைக் கூடச் சாப்பிடாமல் இருந்ததால் “அபர்ணா”

 


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...