ஸ்லோகம் 78
ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல-ரோமாவலி-லதா
கலாவாலம் குண்டம் குஸுமசர-தேஜோ ஹுதபுஜ:
ரதேர்-லீலாகரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிச-நயனானாம் விஜயதே
நகில்களாகிற தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி (ஸர்வலோகவச்யம்)
(கிரிஸுதே) மலையரசன் பெண்ணே! (தவ) உன்னுடைய (நாபி) நாபியானது (கங்காவர்த்த)
கங்கை நீரின் சுழலா, (ஸ்திர) ஆனால் அசையாமல் இருக்கிறதா? (ஸதன-முகுள) நகில்களாகிற மொட்டுகளுடன்
கூடிய (ரோமரவலி-லதா) ரோமவரிசையாகிற கொடியின் (கலா) கிழங்கிருக்கும் (ஆவாலம்) பாத்தியா?
(குஸுமசர) மன்மதனுடைய (தேஜ) ஒளியாகிற (ஹுதபுஜா) அக்கினியின் (குண்டம்) ஹோமகுண்டமா?
(ரதோ) ரதியினுடைய (லீலாகாரம்) விளையாட்டு வீடா? (கிரிச-நயனானாம் ஸித்தே) பரமசிவனுடைய
கண்கள் செய்த தவம் சித்திக்கும் (பிலத்வாரம்) குகையின் துவாரமா? (கிம்-அபி) இன்னதென்று
கூற முடியாததாக (விஜயதே) அது விளங்குகின்றது.

No comments:
Post a Comment