Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 42

 

ஸ்லோகம் 42

(இனிமேல் பகவதியின் ஸ்வரூபம் கிரீடத்தில் இருப்பது பாதாரவிந்தம் வரை வர்ணிக்கப்படுகிறது)

 

கதைர்-மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர-கடிதம்

கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:

ஸ நீடேயச்சாயா-ச்சுரண சபலம் சந்த்ர-சகலம்

தனு: சௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம்

 

தலை முதல் கால்வரை தேவியின் அழகு வர்ணனை

கிரீட வர்ணனை

(ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்)

 

(ஹிமகிரிஸுதே) இமயமலையின் பெண்ணே! (மாணிக்யத்வம்) மாணிக்கங்களாக (கதை:) உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள (ககனமணிபி:) பன்னிரெண்டு ஆதித்யர்களால் (ஸாந்த்ரகடிதம்) நெருக்கமாக இழைக்கப்பட்ட (தே) உன்னுடைய (ஹைமம் கிரீடம்) தங்கக் கிரீடத்தை (யா) எவன் (கீர்த்தயதி) வர்ணிக்கப் புகுகிறானோ (ஸ:) அவன் (நீடேய-ச்சாயா-ச்சுரண-சபலம்) கிரீட கோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விசித்திர வர்ணமுள்ளதாகத் தோன்றும் (சந்த்ர-சகலம்) சந்திர கலையை (சௌனாஸீரம்) இந்திரனுடைய (தனு:) வில் (இதி) என்று (திஷணாம்) கருத்தை (ந நிபத்னாதி கிம்) வர்ணனையில் எப்படிப் பொருத்தாமல் இருக்க முடியும்?

 

பன்னிரண்டு ஆதித்யர்களும் அம்பாளுடைய அருகிலிருந்து சேவிக்க ஆசை கொண்டு அம்பாளுடைய கிரீடத்திலுள்ள இரத்தினங்களாக இருக்கிறார்கள் என்றும் சந்திரகலை இந்திரனுடைய வில்லைப் போல் பிரகாசிக்கிறதென்றும் வர்ணிக்கப்படுகிறது.



 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...