Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 48

 

ஸ்லோகம் 48

 

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்க்காத்மகதயா

த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீநாயகதயா |

த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித-ஹேமாம்புஜ-ருசி:

ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ-நிசயோ-ரந்தரசரீம் ||

 

கண்களின் அழகு

நவக்ரஹ தோஷ நிவர்த்தி

 

(தவ)உன்னுடைய (ஸவ்யம்) வலது (நயனம்) கண் (அர்க்க-ஆத்மக-தயா) சூரியவடிவானதால்(அஹ:) பகல் பொழுதை(ஸூதே) உண்டாக்குகிறது. (தே) உன்னுடைய (வாமம்) இடது (நயனம்) கண் (ரஜனீ-நாயகதயா) சந்திர வடிவானதால்(த்ரியாமாம்) இரவுப் பொழுதை (ஸ்ருஜதி) உண்டாக்குக்கிறது. (தே) உன்னுடைய (த்ருதீயா) மூன்றாவது(த்ருஷ்டி:) கண்(தர-தலித-ஹேமாம்புஜ-ருசி:) சிறிது மலர்ந்த பொற்றாமரையைப் போல் பிரகாசிப்பதாய்(திவஸ-நிசயோ:) பகலுக்கும் இரவுக்கும்(அந்தரசரீம்) நடுவிலுள்ள (ஸந்த்யாம்) ஸந்தியா காலத்தை(ஸ்மாதத்தே) உண்டாக்குகிறது.

 

அம்பாளுடைய கண்களாலேயே பகல், இரவு, ஸந்தியை முதலியன ஏற்படுவதால் அம்பாள் காலத்தைக் கடந்தவள் என்னும் கருத்து இதில் அடக்கம்.

 


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...