Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 59

 

ஸ்லோகம் 59

 

ஸ்புரத்கண்டாபோக-ப்ரதிபலித-தாடங்க-யுகளம்

சதுச்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே

 

மன்மதனுடைய ரதம் போன்ற முகம் (ஸர்வஜன வச்யம்)

 

(ஸ்புரத்) கண்ணாடி போல் பிரகாசிக்கின்ற (கண்டாபோக) கன்னப் பிரதேசத்தில் (ப்ரதிபலித-) பிரதிபலிக்கின்ற (தாடங்க-யுகளம்) இரண்டு தாடகங்களுடன் கூடின (தவ) உன்னுடைய (இதம்) இந்த (முகம்) முகமானது (சது:சக்ரம்) நாலு சக்கரங்களுடன் கூடின (மன்மதரதம்) மன்மதனின் தேர் என்று (மன்யே) கருதுகிறேன். (யம் ஆருஹ்ய) அதில் ஏறிக் கொண்டு (மார:) மன்மதன் (மஹாவீர:) மகாவீரனாக விளங்குபவனாய் (அர்க்க-இந்து-சரணம்) சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட (அவனிரதம்) பூமியாகிய தேரில் (ஸஜ்ஜிதவதே) போருக்குச் செல்லும் (ப்ரமதபதயே) பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேஸ்வரனையே (த்ருஹ்யதி) வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான்.

 

மன்மதன் ஒருவனாக இருந்தும் பிரமத கணங்களால் சூழப்பெற்ற பரமசிவனுடன் போர் புரியத் துணிச்சலுக்குக் காரணம் அம்பாளுடைய முகத்தின் அழகேயாகும். பரமசிவனுடைய தேருக்கு இரண்டு சக்கரங்கள், மன்மதனுடைய தேருக்கு நான்கு சக்கரங்கள்.

 

இங்கு கண்ணாடி போல் பிரகாசிக்கும் தேவியின் கன்னங்கள் தியானிக்கப்படுகின்றன.

 


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...