Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 87

 

ஸ்லோகம் 87

 

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ

நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதௌ |

வரம் லக்ஷ்மீபாத்ரம் சிரிய மதிஸருஜந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத்பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம்

 

இமயத்தின் பனியிலும் இரவு நேரத்திலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்

 

(ஜனனி) தாயே! (ஹிமானீ-ஹந்தவ்யம்) தாமரையோ பனியில் கருகிப் போவது (ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ) உனது திருவடித் தாமரைகளோ- பனிமலையில் இருப்பதில் தேர்ச்சி பெற்றவை. (நிசாயாம் நித்ராணம்) தாமரை இரவில் இதழ்களை மூடிக் கொண்டு உறங்குவது, (நிசி சரமபாகே ச விசதௌ) உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்த போதும் எப்போதும் பிரசன்னமாயிருப்பவை. (வரம் லக்ஷ்மீ-பாத்ரம்) தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது, (ச்ரியம் அதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்) உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை. ஆகையால் (ஸரோஜம்)  தாமரையை (த்வத்பாதௌ) உனது பாத கமலங்கள் (ஜயத:) ஜயிக்கின்றன. (இஹ) இதில் (சித்ரம்) அதிசயம் (கிம்) என்ன இருக்கிறது.



 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...