Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 43

 

ஸ்லோகம் 43

 

துனோது த்வாந்தம் நஸ்-துலித-நலிதேந்தீவர-வனம்

கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர-நிகுரும்பம் தவ சிவே |

யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸுமநஸோ

வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ-விடபினாம்

 

கேசவர்ணனை (ஸர்வ ஜயம்)

 

(சிவே) பரமசிவ பத்னியே! (துலித-தளித-இந்தீவர-வனம்) மலர்ந்த கருநெய்தல் காடு போன்று பிரகாசிப்பதும் (கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம்) அடந்தும் வழவழப்பாகவும் மெதுவாகவும் உள்ளதுமாகிய (தவ) உன்னுடைய (சிகுர-நிகுரும்பம்) கேச பாரம் (ந) எங்களுடைய (த்வாந்தம்) அகவிருளை (துனோது) போக்கடிக்கட்டும். (யதீயம்) அதிலுள்ள (ஸஹஜம்) இயற்கையான (ஸௌரப்யம்) வாசனையை (உபலப்தும்) அடைய விரும்பி (வலமதன) இந்திரனுடைய (வாடீ-விடபினாம்) நந்த வனத்திலுள்ள மரங்களின் (ஸுமனஸ:) புஷ்பங்கள் (அஸ்மின்) அந்தக் கேசபாரத்தில் (வஸந்தி) வசிக்கின்றன என்று (மன்யே) நினைக்கிறேன்.

 

அம்பாளுடைய கரிய கேசம் அதை தியானிக்கும் அடியார்களுடைய உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞான இருட்டையும் மலின வாஸனைகளையும் நீக்கி உள்ளொளியையும் ஸத்வாஸனையையும் வளர்க்கும்.

 

ஸௌரப்யம் ஸஹஜம் – தேவியின் கூந்தலுக்கு இயற்கை வாசனை. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் “சம்பகாசோக-புந்நாக-ஸௌகந்திகலஸத்கசா” என்ற நாமத்திற்குப் பொருள் கூறுகையில் புஷ்பங்களின் வாசனையை விட தேவியின் கூந்தலுக்கு இயற்கையாகவே அதிக வாசனை இருப்பதால் அப் புஷ்பங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டும் தரிக்கப்பட்டிருப்பதாக பாஸ்கர ராயர் கூறுகிறார். தேவி சூடிக் கொண்டதால் புஷ்பங்களுக்குப் பெருமை.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...