ஸ்லோகம் 45
அராலை: ஸ்வாபாவ்யா – தலிகலப – ஸ்ச்ரீபி-ரலகை
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ-ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தசனருசி-கிஞ்ஜல்க-ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன- சக்ஷுர்-மதுலிஹ:
முன் நெற்றி மயிர் வர்ணனை
(லக்ஷ்மி கடாக்ஷம், வாக்குப்பலிதம்)
(தர-ஸ்மேரே) புன்சிரிப்பால் சிறிது மலர்ந்தாற் போன்றதும், (தசனருசி-கிஞ்ஜல்க-ருசிரே)
பலவரிசையாகிற கேஸரங்களுடன் பிரகாசிப்பதும் (ஸுகந்தௌ) நன்மணமுள்ளதும் ஆகிய (யஸ்மின்)
எந்த முக கமலத்தில் (ஸ்மரதஹன-சக்ஷுர்-மதுலிஹ:) மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன்
வண்டுகள் (மாத்யந்தி) மயங்குகின்றனவோ (தே) அப்படிப்பட்ட உன்னுடைய (வக்த்ரம்) முகம்
(ஸ்வாபாவ்யாத்) இயற்கையாகவே (அராலை:) சுருட்டையானதும் (அலி-கலபஸஸ்ரீபி:) சிறு வண்டுகள்
சஞ்சரிப்பது போன்ற சோபை உடையதுமான (அலகை:) முன் நெற்றி மயிர்களால் (பரீதம்) சூழப்பெற்று
(பங்கேருஹ-ருசிம்) தாமரையின் அழகை (பரிஹஸதி) பரிகசிப்பது போல் இருக்கிறது.
அலிகலபஸஸ்ரீபி:- சிறுவண்டுகளைப் போல் பிரகாசிக்கும் “கலப” எனும் சொல் சாதாரணமாக
யானைக்குட்டியைத்தான் குறிக்கும். ஆனால் இங்கு அலி எனும் சொல்லுடன் சேர்த்து சிறு வண்டைக்
குறிக்கிறது.

No comments:
Post a Comment