Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 60

 ஸ்லோகம் 60

ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருத-லஹரீ கௌசலஹரீ:

பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம்

சமத்கார-ச்லாகாசலித சிரஸ: குண்டலகணோ

ஜணத்காரைஸ்-தாரை: ப்ரதிவசன-மாசஷ்டஇவ தே!!

 

மதுரமான சொல்லோசை

(வாக்குப் பலிதம், ஊமையையும் பேசவைப்பது)

 

(சர்வாணி) பரமசிவபத்தினியே! (அம்ருதலஹரீ-கௌசல-ஹரீ:) அமுதப்பெருக்கின் இனிமையைத் தனதாக்கிக் கொண்ட (தே) உன்னுடைய (ஸூக்தி:) சொல்லமுதத்தை (ச்ரவண-சுலுகாப்யாம்) காதுகளாகிய பாத்திரங்களால் (அவிரலம்) இடைவிடாது (பிபந்த்யா:) பருகுபவரும் (சமத்கார-ச்லாகா) அப்பேச்சின் திறமையைப் போற்றும் வகையில் (சலித-சிரஸ:) தலையை அசைப்பவருமான (ஸரஸ்வத்யா:) ஸரஸ்வதீ தேவியினுடைய (குண்டலகண:) காதணிகள் (ஜணத்காரை:) “ஜணத்ஜணத்” என்ற (தாரை:) உயர்ந்த ஒலியால் (ப்ரதிவசனம்) “ஆம் ஆம்” என்ற ஆமோதிப்பை (ஆசஷ்ட இவ) சொல்லுவனபோல் தோன்றுகின்றன.

 

ஸரஸ்வதியினுடைய பாடல்களைக் கேட்டு தேவி தலையசைத்து மகிழ்கிறாள். அப்போது தேவியின் காதணிகள் செய்யும் இனிமையான ஒலி இங்கு தியானிக்கப்படுகிறது என்று அருணா மோதினீ உரை கூறுகிறது

 


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...