Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 77

 

ஸ்லோகம் 77

 

யதேதத் காலிந்தீ-தனுதர-தரங்காக்ருதி சிவே

க்ருசே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்

விமார்த்தா-தன்யோன்யம் குசகலசயோ-ரந்தரகதம்

தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்

 

யமுனையின் சிறு அலை நாபியாகிய மடிவில் புகுவது போன்ற ரோமவரிசை (ஸர்வஜனவச்யம் ஸூக்ஷ்ம தர்சனம்)

 

(சிவே!) மங்களஸ்வரூபியே! (ஜனனி) தாயே! (தவ) உன்னுடைய (க்ருசே) மெலிந்த (மத்யே) இடையில் (காளிந்தீ) யமுனா நதியின்(தனுதர-) மிக மெல்லிய (தரங்க-ஆக்ருதி)அலையின் வடிவு போன்ற (யத் ஏதத்) யாதொரு இந்த (கிஞ்சித்) ஒன்றுள்ளதோ – அதாவது ரோம வரிசையின் சிறு பொலிவு உண்டோ (யத்) எது (ஸுதியாம்) ஞானிகளுக்கு (பாதி) தியானத்தில் புலப்படுகிறதோ அது (குசகலசயோ:) கலசங்கள் போன்ற இரு நகில்களின் (அந்தரகதம்) நடுவில் அகப்பட்டுக் கொண்டதும் (அன்யோன்யம் விமர்த்தாத்)  நகில்கள் ஒன்றோடு ஒன்று உறைவதால் (தனூபூதம்) மெலிந்ததுமான (வ்யோம)  நீல நிறமுள்ள ஆகாயம் (குஹரிணீம்) குகை போன்ற(நாபிம்) தொப்புட் குழியில் புகுவது போல் தோன்றுகிறது.

 


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...