Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 84

 

ஸ்லோகம் 84

 

ச்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா

மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ |

யயோ: பாத்யம் பாத: பசுபதி-ஜடாஜுட-தடினீ

யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி

 

உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்

(பரகாயப் பிரவேசம், ஜீவன் முக்தி)

 

(மாத:) தாயே (தவ) உன்னுடைய (யௌ) எந்த (சரணௌ) பாதங்களை (ச்ருதீனாம் மூர்த்தான:)  வேதங்களின் தலை போன்ற உபநிஷதங்கள் (சேகரதயா) சிரோ பூஷணங்களாக (தததி) தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களை (மம) என்னுடைய (சிரஸி அபி) தலையிலும் கூட (தயயா) தயை கூர்ந்து (தேஹி) வைத்தருள்வாயாக. (யயோ:) அவற்றிற்கு (பாத்யம் பாத:) பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் (பசுபதி-) பரமசிவனுடைய (ஜடாஜூட) ஜடையில் இருக்கும் (தடினீ) கங்கையாகிறது. (யயோ:)அவற்றிற்கு (லாக்ஷாலக்ஷ்மீம்:) பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு (அருண-ஹரி-சூடாமணி-ருசி:) சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கிறது.

 

இங்கு ஆச்சார்யாள் கேனோபநிஷத்தை மனசில் வைத்துக் கொண்டு சொல்வதாகத் தெரிகிறது. தேவர்களுடைய அகம்பாவத்தைப் போக்கி அனுக்கிரகம் செய்தது போல, என்னிடம் உள்ள சகல துரிதங்களையும் நிவிருத்தி செய்வாயாக என்கிறார்.

 

அம்பாளுடைய ஊடலைத் தணிக்கப் பரமசிவன் அம்பாளுடைய பாதத்தில் வணங்கும் போது அவருடைய ஜடையில் இருக்கும் கங்கை கீழே பெருகி அம்பாளுக்குப் பாத்யம் மாதிரி ஆகிறது.



 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...