Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 72

 

ஸ்லோகம் 72

 

ஸமம் தேவி ஸ்கந்த-த்விபவதன-பீதம் ஸ்தனயுகம்

தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம்

யதாலோக்யாசங்காகுலித-ஹ்ருதயோ ஹாஸஜனக:

ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி

 

கணபதியும் ஸ்கந்தனும் பால்பருகும் நகில்கள்

(தேவியருள் சுரத்தல், யக்ஷிணீவச்யம், இரவில் பயமின்மை)

 

(தேவி) பரதேவதையே! (ப்ரஸ்னுத-முகம்) பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதாயும் (ஸமம்) ஸமகாலத்தில் (ஸ்கந்த-) ஸ்கந்தனும் (த்விபவதன-) யானைமுகத்தோனும் (பீதம்) பால் குடிப்பதுமான (இதம்) இந்த (தவ) உன்னுடைய (ஸ்தனயுகம்) நகில்கள் இரண்டும் (ந:) எங்களுடைய (கேதம்) துன்பத்தை  (ஸததம்) எப்போதும் (ஹரது)  போக்கடிக்கட்டும். (யத்) அந்த நகிலை (ஆலோக்ய) பார்த்து (ஆசங்கா-ஆகுலித-ஹ்ருதய:) சந்தேகத்தால் கலங்கிய உள்ளமுடைய (ஹேரம்ப) கணபதி (ஹாஸ்ஜனக:) சிரிப்புண்டாகும்படி (ஸ்வகும்பௌ)  தன் தலையிலுள்ள இரு கும்பங்களையும் (பரிம்ருசதி) அவசரமாக கையினால் இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொள்கிறார்.

 

பரதேவதையை தியானம் செய்யும் போது மகா கணபதியையும் குமாரஸ்வாமியையும் கூடவே தியானிக்கிறோம். தேவியின் ஸ்தன்யபானத்தால் இவ்விருவரும் அடைந்துள்ள பெருமைக்கு அளவில்லை.


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...