Wednesday, September 9, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 40

 

ஸ்லோகம் 40

 

தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்தி-ஸ்புரணயா

ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணத்தேந்த்ர தனுஷம்

தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம்

நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் ||

 

மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல் கொடி போன்றவள்

(நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மீ கடாக்ஷம்)

 

(தவ) உன்னுடைய (மணிபூர-ஏக சரணம்) மணிபூரக சக்கரத்தை முக்கியமான உறைவிடமாகக் கொண்டதும், (திமிர-பரிபந்தி-ஸ்புரணயா) இருட்டுக்குச் சத்துரு போல் பிரகாசிக்கும் (சக்த்யா) பராசக்தியாகிற (தடித்வந்தம்) மின்னல் கொடியுடன் கூடியதும், (ஸ்புரன் நரனா ரத்ன-ஆபரண-பரிணத்த-இந்த்ரதனுஷம்) ஜ்வலிக்கும் நானாவிதமான ரத்ன ஆபரணங்களாகிய இந்திர வில்லுடன் கூடியதும், (ச்யாமம்) கருத்ததும் (ஹர-மிஹிர-தப்தம்) ருத்ரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட (த்ரிபுவனம்) மூவுலகையும் (வர்ஷந்தம்) மழைபொழிந்து குளிரச் செய்வதும் ஆகிய, (கம்பி மேகம்) அதிசயமான மேகம் போன்ற உனது ஸதாசிவ தத்துவத்தை (நிஷேவே) சேவிக்கின்றேன்.

 

குறிப்பு:

 

“ஸ்மரமிஹிரதப்தம்’ என்ற பாடத்தில் ஆசை என்கிற சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்ட உலகம் எனக் கருத்து. “தம:ச்யாமம்” என்ற பாடத்தில் இருட்டுப் போல் கறுத்தது என்று அர்த்தம்.

(அக்னேராப:) அக்கினியில் இருந்து ஜலம் தோன்றுகிறது. ஜலத்திற்கு இருப்பிடம் மணிபூரக சக்கரம். இது பத்து தள கமலம். இங்கு மகேஸ்வரன்-ஸ்திரஸௌதாமினீ என்று சிவனையும் சக்தியையும் உபாசிக்க வேண்டும். இவர்களுக்கு அம்ருதேஸ்வரன்-அமிருதேஸ்வரி என்ற பெயரும் பொருந்தும். இவர்களை ஸத்யோஜாதம் வாமதேவம் முதலிய 52 ஜலமயூகங்களால் சூழப் பெற்றவர்களாய் தியானிக்க வேண்டும்.

 

பாரத பூமியில் இதற்கேற்பட்ட ஸ்தானம் திருவானைக்காவல்



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 39

 

ஸ்லோகம் 39

 

தவ ஸ்வாதிஷ்டானே ஹுதவஹ-மதிஷ்டாய நிரதம்

தமீடே ஸம்வர்த்தம் ஜனனீ மஹதீம் தாஞ்ச ஸமயாம் !

யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோத-கலிதே

தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிர-முபசாரம் ரசயதி

 

ஸ்வாதிஷ்டானத்தில் காமேசுவரீ

(நினைத்ததைக் கனவில் காண)

 

(ஜனனி) தாயே (தவ) உன்னுடைய (ஸ்வாதிஷ்டானே) ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் (ஹுதவஹம்) அக்கினி தத்துவத்தை (அதிஷ்டாய) சிந்தித்து – அதில் (நிரதம்) இடைவிடாது பிரகாசிக்கும் (தாம் மஹதீம்) மகிமை வாய்ந்த அந்த (ஸமயாம் ச) ஸமயா அல்லது சந்திரகலா சக்தி என்னும் உன்னையும் (ஈடே) போற்றுகிறேன். (யத் ஆலோகே) ருத்திரருடைய எந்தப் பார்வையான (மஹஸி) அக்னி (க்ரோதகலிதே) கோபத்தால் வளர்ந்து (லோகான்) உலகங்களை (தஹதி) எரிக்கின்றதோ அப்போது (யா தயார்த்ரா த்ருஷ்டி:) கருணையால் நனைந்த உன்னுடைய பார்வை எதுவோ அது (சிசிரம் உபசாரம்) குளிர்ச்சியான உபசாரத்தை (ரசயதி) செய்கிறது.

 

குறிப்பு

 

(வாயோரக்னி) வாயுவில் இருந்து அக்னி தோன்றுகிறது. அக்னிக்கு இருப்பிடம் ஸ்வாதிஷ்டான சக்கரம் இது ஆறுதன கமலம். இங்கு ஸமவர்த்தேசுவரர்-ஸமயாம்பாள் என்று சிவனையும், சக்தியையும் 62 தைஜஸ மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். பாரத பூமியில் இதற்கு ஏற்பட்ட ஸ்தானம் அருணாசலம் என்னும் திருவண்ணாமலை. அங்குள்ளது தேஜோலிங்கம்



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 38

 

ஸ்லோகம் 38

 

ஸமுன்மீலத் ஸம்வித் கமல-மகரந்தைக-ரஸிகம்

பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் |

யதாலாபா-தஷ்டாதச-குணித-வித்யாபரிணதி:

யதாதத்தே தோஷாத் குணமகில-மத்ப்ய: பய இவ ||

 

அனாஹதசக்கரத்தில் ஜீவப்ரஹ்ம ஐக்கியம்

(பாலாரிஷ்ட நிவாரணம்)

 

(ஸமுன்மீலத்- ஸம்வித் – கமல- மகரந்த – ஏக – ரஸிகம்) நன்றாய் மலர்ந்த ஞானத் தாமரையின் ஆனந்தமாகிய மகரந்தம் ஒன்றையே விரும்பி அனுபவிப்பவைகளும் (மஹதாம்) மகான்களுடைய (மானஸசரம்) மனதாகிற மானஸ ஸரஸ்ஸில் நீந்துபவைகளும் (கிமபி) இப்படிப்பட்டவை என்று வர்ணிக்க முடியாதவைகளுமான (ஹம்ஸத்வந்த்வம்) இரண்டு ஹம்ஸங்களை (பஜே) பூஜிக்கிறேன். (யத்- ஆலாபாத்) அவைகளுடைய இன்பப் பேச்சில் இருந்தே (அஷ்டாதச-குணித-வித்யா-பரிணதி:) பதினெட்டு எனக் கணக்கிடப்பட்ட வித்தைகள் பரிணமிக்கின்றன. (யத்) அவை (தோஷாத்) குற்றத்திலிருந்து (அகிலம் குணம்) குணம் அனைத்தையும் (அத்ப்ய:) நீரில் இருந்து (பய இவ) பாலைப் போல (ஆதத்தே) பிரிக்கின்றன.

 


 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 37

 

ஸ்லோகம் 37

 

விசுத்தௌ தே சுத்தஸ்படிக-விசதம் வ்யேம-ஜனகம்

சிவம் ஸேவே தேவீமபி சிவஸமான-வ்யவஸிதாம் |

யயோ: காந்த்யா யாந்த்யா : சசிகிரண – ஸாரூப்யஸரணே:

விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதி ||

 

விசுத்தி சக்கரத்தில் பார்வதீ பரமேஸ்வர த்யானம்

(பிரம்மராக்ஷஸ பூதப்ரேத பிசாச நிவாரணம்)

 

(தே) உன்னுடைய (விசுத்தௌ) விசுத்தி சக்கரத்தில் (சுத்த ஸ்படிக-விசதம்) தெளிவான பளிங்கு போன்ற வடிவினரும் (வ்யோம-ஜனகம்) ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவரும் ஆகிய (சிவம்) சிவனையும் (சிவ-ஸமான வ்யவஸிதாம்) சிவனுடைய ஸங்கல்பத்திற்கு ஒத்த ஸங்கல்பமுடையவனாகிய (தேவிம் அபி) தேவியாகிய உன்னையும் (ஸேவே) சேவிக்கிறேன். (யயோ:) எவர்களிடமிருந்து (சசி-கிரண-ஸாரூப்ய:ஸரணே:) வெண்ணிலா போன்று (யாந்த்யா:) வெளிவரும் (காந்த்யா:) ஒளியினால் (ஜகதீ) உலகம் முழுதும் (விதூத-அந்தர்-த்வாந்தா) அக்ஞானமாகிய அக இருள் ஒழியப் பெற்றதாய் (சகோரீ இவ) நிலவில் களிக்கும் சகோர பக்ஷி போல் (விலஸதி) விளங்குகிறதோ – அப்படிப்பட்ட உங்களை ஸேவிக்கிறேன்.

 

குறிப்பு:

 

ஒரு புஷ்பத்திலே எப்படிச் சுகந்தமானது சேர்ந்திருக்கிறதோ, அமிருதத்திலே சுவை எப்படி கலந்திருக்கிறதோ, அந்த மாதிரி ஈசுவரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபம் கலந்திருக்கிறது. அக்னியோடு சேர்ந்திருக்கும் பிரகாசத்தை அக்னி வேறு, பிரகாசம் வேறு, என்று எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படி ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க முடியாது. அந்த மாதிரி இவர்களைச் சேர்த்து செய்யும் தியானம் இதிலும் இனி வரும் சுலோகங்களிலும் விளக்கப்படுகிறது.

 



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 36

 

ஸ்லோகம் 36

 

தவாஜ்ஞா-சக்ரஸ்தம் தபன-சசி-கோடி-த்யுதிதரம்

பரம் சம்பும் வந்தே பரிமிலித-பார்ச்வம் பரசிதா |

யமாராத்யன் பக்த்யா ரவி-சசி-சுசீனா-மவிஷயே

நிராலோகேSலோகே நிவஸதி ஹி பாலோக-புவனே ||

 

ஆஜ்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம் (ஸர்வ வியாதி நிவாரணம்)

 

(தவ) உன்னுடைய (ஆஜ்ஞா சக்ரஸ்தம்) ஆஜ்ஞா சக்கரத்தில் இருப்பவரும் (தபண-சசி-கோடி-த்யுதி-தரம்) கோடி சூரிய சந்திரர்களின் பிரகாசத்தை உடையவரும் (பரசிதா) ஸகுண நிர்க்குண சக்திவடிவான உன்னால் (பரிமிளித-பார்ச்வம்) இரு பக்கத்திலும் அணைக்கப் பெற்றவருமான (பரம் சம்பும்) பரமசிவனை (வந்தே) சேவிக்கின்றேன். (யம்) அம்மாதிரி இருப்பவரை (பக்த்யா) பக்தியுடன் (ஆராத்யன்) ஒருவன் ஆராதித்தால் (ரவி-சசி-சுசீனாம்) சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய மூவருடைய ஒளியாலும் (அவிஷயே) விளங்க வைக்க முடியாததாயும் (நிராலோகே) கண்ணுக்கு எட்டாததாயும் (அலோகே) கண்ணால் காணும் உலகத்தின்று வேறுபட்டதாகவும் உள்ள (பாலோக-புவனே) பரஞ்ஜோதி வடிவான உனது ஸாயுஜ்யப் பதவியில் (நிவஸதி ஹி) வசிப்பான் என்பது நிச்சயம்.

 

ஆக்ஞாசக்கரம் ஏன் அப்பெயர் பெற்றது?

ஜீவனிடம் ஈஸ்வரனுடைய ஆக்ஞை அங்கே பிரகாசிப்பதால் அது ஆக்ஞாசக்கரம் எனப்படுகிறது. அங்கே காமேசுவர மகாலிங்கம் இரு புறங்களிலும் ஸகுணசக்தியாலும் நிர்க்குண சக்தியாலும் அலங்கரிக்கப் பெறுகிறது. பாரதபூமியில் காசி க்ஷேத்ரம் ஆக்ஞாசக்கர ஸ்தானமாகக் கருதப்படும். அங்கே துர்க்கையும் விசாலாக்ஷியும் பிரதான சக்திகள்.



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 35

 

ஸ்லோகம் 35

 

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்-ஸாரதி-ரஸி

த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்:!

த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ-வபுஷா

சிதானந்தாகாரம் சிவயுவதி-பாவேன பிப்ருஷே

 

ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி (க்ஷயரோக நிவிருத்தி)

 

(மன:) ஆக்ஞா சக்கரத்தில் மனதாக (த்வம்) நீ விளங்குகிறாய், (வ்யோம) விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாகவும் (த்வம்) நீயே விளங்குகிறாய், (மருத் அஸி) அனாஹதத்தில் வாயுவாக இருக்கிறாய், (மருத் ஸாரதி: அஸி) ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய். (ஆப:) ஜல தத்துவமும் (த்வம்) நீயே, (பூமி:) பிருதிவிதத்துவமும் (த்வம்) நீயே, (த்வயி பரிணதாயாம்) நீயே பிரபஞ்சமாக பரிணமித்திருப்பதால் (பரம்) உனக்கு வேறான பொருள் (ந ஹி) இல்லவே இல்லை. (த்வம் ஏவ) நீயே (ஸ்வாத்மானம்) உனது ஸ்வரூபத்தை (விஷ்வ-வபுஷா) பிரபஞ்ச வடிவாக (பரிணமயிதும்) பரிணமிக்கச் செய்வதற்கு (சிவயுவதி-பாவேனே) பரமசிவனுடைய பத்னீ என்ற பாவனையால் (சிதானந்த ஆகாரம்) ஆனந்த வடிவான சித் ரூபத்தை (பிப்ருஷே) ஏற்றுக் கொள்கிறாய்

 


சௌந்தயலஹரி ஸ்லோகம் 34

 

ஸ்லோகம் 34

 

சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்

தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான-மனகம்!

அத: சேஷ: சேஷீத்ய்ய-முபய-ஸாதாரண தயா

ஸ்தித: ஸ்ம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:!!

 

சேஷசேஷீபாவம் (அன்யோன்ய ஸமரஸ வளர்ச்சி)

 

(பகவதி) பரதேவதையே! (சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்) சந்திர சூரியர்களை நகில்களாக உடைய (த்வம்) நீ (சம்போ:) பரமசிவனுக்கு (சரீரம்) உடல் என்றும் (அனகம்) மாசற்ற (நவாத்மானம்) ஒன்பது வ்யூஹ ஸ்வரூபியான சிவனை (தவ) உன்னுடைய (ஆத்மானம்) உடல் என்றும் (மன்யே) மனக்கண்ணால் காண்கிறேன். (அத:) ஆகையால் (சேஷ:சேஷீ இதி) உடைமை உடையவர் என்ற (அயம்) இந்த (ஸம்பந்த) உறவு (ஸமரஸ-பரானந்த-பரயோ) ஸ்மரஸப்பட்ட ஆனந்த பைரவர் ஆனந்த பைரவி என்ற (வாம்) உங்களில் (உபய-ஸாதாரணதயா) இருவருக்கும் ஸமமாக (ஸ்தித:) நிலை பெற்றுள்ளது.

 

பின்குறிப்பு: (தேதியூர் ஸுப்ரமண்ய சாஸ்திரி)

இந்த ஸ்லோகத்தை ஜபம் செய்து வரும் குடும்பங்களில் ஸ்திரீ புமான்களுக்கு பரஸ்பரம் அன்யோன்ய பாவம் திருடமாகும். வேதோக்த கர்மாக்களைச் செய்யும் காலங்களில் புருஷர்களுக்குப் பிரதான்யமும், குடும்ப விஷயங்களில் ஸ்திரீகளுக்குப் பிராதான்யமும் இருப்பது அவசியம். இப்படி ஸமரஸத்துடன் வாழும் கிருஹஸ்தர்கள் ஈசுவரனுடைய அனுக்கிரஹத்தால் ஞானத்தைப் பெற்று மோக்ஷத்தை அடையலாம்.





சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 33

 

ஸ்லோகம் 33

 

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித மாதௌ தவ மனோர்

நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:|

பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-நிபத்தாக்ஷ-வலயா:

சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:

 

ஸௌபாக்கிய மந்திரம்

(ஸகல ஸௌபாக்கியம்)

 

(நித்யே) ஆதியந்த மற்ற பரதேவதையே! (தவ) உன்னுடைய (௳னோ:) பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் (ஆதௌ) முதலில் (ஸ்மரம்) காம பீஜமான ‘க்லீம்’ என்ற அக்ஷரம் (யோனிம்) புவனேசுவரி பீஜமான ‘ஹ்ரீம்’ என்ற அக்ஷரம் (லக்ஷ்மீம்) லக்ஷ்மீ பீஜமான ‘ஸ்ரீம்’ என்ற அக்ஷரம் (இதம் த்ரிதயம்) ஆகிய இம் மூன்றையும் (நிதாய) சேர்த்து (நிரவதி மஹாபோக-ரஸிகா:) இடைவிடாத ஜபத்திலுள்ள ஆனந்தச் சுவையை அறிந்தவர்களாகிய (ஏகே) சிலர் (சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா:) தொடர்ந்து வரும் சிந்தனையையே ஜபமாலையகக் கொண்டு (சிவாக்னௌ) சக்தி முக்கோணத்திலுள்ள அக்னியில் (ஸுரபிக்ருத-தாராஹுதி-சதை:) காமதேனு அளித்த நெய் போன்ற ஆத்மானந்தத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஆஹுதிகளை (ஜுஹ்வந்த:) செய்பவர்களாய் (த்வாம்) உன்னை (பஜந்தி) ஆராதிக்கிறார்கள்.

 

பஞ்சதசாக்ஷரீ மந்திரத்திற்கு ஸாவித்ரீ மந்திரத்துடன் ஒற்றுமையுண்டு. பஞ்சதசாக்ஷரியில் மூன்று கூடங்களில் இருப்பது போல் ஸாவித்ரீ மந்திரத்தில் மூன்று பாதங்கள். அவற்றுடன் “பூ:புவ”ஸுவ” என்ற மூன்று வியாஹ்ருதிகளைச் சேர்த்தால் அப்போது அது காயத்ரீ மந்திரமாகிறது. அவ்வாறே பஞ்சதசாக்ஷரிக்கு முன் விமர்சப்ரணவங்கள் எனப்படும் ‘ஐம் – ஹ்ரீம் – ஸ்ரீம்- க்லீம் – ஸௌ:’ என்பனவற்றில் மூன்றைச் சேர்த்தால் அது ஸௌபாக்ய பஞ்சதசாக்ஷரீ எனப்படும். இங்கே “ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லீம்’ என்பவற்றை முங்கூட்டி ஜபிப்பது சிறந்த பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஸாதாரணமாக “ஐம்-க்லீம்-ஸௌ:’ என்ற பீஜங்களை முறையே ஒவ்வொருகூடத்தின் முதலிலும் சேர்ப்பதே “ஸௌபாக்கிய வித்தை” என வழக்கத்தில் காணப்படுகிறது.

 



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 32

 

ஸ்லோகம் 32

 

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:

ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய:

ஆமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷூ கடிதா

பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்

 

ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரீ மந்த்ரம் (ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்)

 

(ஜனனி) தாயே! (சிவ) சிவ பீஜாக்ஷரமான ‘க’, (சக்தி:) சக்தி பீஜாக்ஷரமான “ஏ”, (காம:) மன்மத பீஜாக்ஷரமான “ஈ”, (க்ஷிதி:) பிருதிவி பீஜமான “ல” (அத:) அதன் பிறகு (ரவி:) சூரிய பீஜமான ‘ஹ’ (சீத-கிரண:) குளிர்ந்த கிரணங்களுடைய சந்திர பீஜமான “ஸ”, (ஸ்மர:) மன்மத பீஜமான ‘க’, (ஹம்ஸ:) ஹம்ஸமந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான ‘ஹ” (சக்ர:) இந்திரனுடைய பீஜமான ‘ல’ (ததனு ச) அதற்குப் பிறகு (பரா-மார-ஹரய:) பராபீஜமாகிய “ஸ”, மன்மத பீஜமாகிய “க”, ஹரிபீஜமாகிய ‘ல’ (அமீ தே வர்ணா:) உன்னுடைய இவ்வக்ஷரங்கள் (திஸ்ருபி:) மூன்று (ஹ்ருல்லேகாபி:) புவனேசுவரீ பீஜமான ஹ்ரீங்காரங்களுடன் (அவஸானேஷூ) ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் (கடிதா:) சேர்க்கப்பட்டு (தவ) உன்னுடைய (நாம-அவயவதாம்) மந்திரத்தின் அவயவங்களாக (பஜந்தே) அமைகின்றன.

 

ஸ்ரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா

கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணி

சக்தி கூடைசதாபன்ன கட்யதோ-பாக-தாரிணீ (லலிதா சஹஸ்ரநாமம்)

 

வாக்பவ கூடத்தை அம்பாளுடைய முகமாகவும், மத்தியிலுள்ள காமராஜ கூடத்தைக் கழுத்து முதல் இடுப்பு வரையிலுள்ள பாகமாகவும் சக்தி கூடத்தை இடுப்பிற்குக் கீழுள்ள பாகமாகவும் தியானிக்க வேண்டும்.

ஸ்ரீவித்யா – காயத்ரி மந்திரத்தில் ‘பரோ ரஜஸே ஸாலதோம்” எனும் நாலாவது பதத்தைச் சேர்த்து உத்தம ஸாதகர்கள் ஜபிக்க வேண்டுமென்றும் அப்போது தான் காயத்ரீ வித்தை பூர்ணத்துவத்தை அடைகிறதென்றும் கூறுவது போல், பஞ்சதக்ஷாரீ மந்திரத்தின் நாலாவது சந்த்ரகலாகூடம் ரமாபீஜமாகிய “ஸ்ரீம்’ என்றும், அதுவும் சேர்ந்து தான் பதினாறு கலையுடன் இம் மந்திரம் பரிபூர்ணமடைகிறதென்றும் அதனால் தான் இதற்கு ஸ்ரீவித்யா எனப்பெயர் என்றும் அது ரஹஸ்யமானதால் இங்கு மறைத்து வைக்கப்பட்டதாய் உணர வேண்டும் என்றும் லக்ஷ்மீதரர் கூறுகிறார். முதல் கூடம் ஜாக்கிரத்திற்கும் இரண்டாவது ஸ்வப்னத்திற்கும், மூன்றாவது ஸுஷுப்திக்கும் நாலாவது துரியத்திற்கும் ஒப்பிடப்படும்.





சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 31

 

ஸ்லோகம் 31

 

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம்

ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி:

புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா-

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம்

 

அறுபத்து நாலு தந்திரங்களும் ஸ்ரீவித்தையும் (ஸர்வ வசீகரம்)

 

(பசுபதி:) பரமசிவன் (தத்-தத்-ஸித்தி-ப்ரஸவ) அவரவர் நாடும் அந்தந்த சித்தியை மட்டும் அளிக்கும் (பரதந்த்ரை:) வேறு தந்திரங்களாகிய (சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை:) அறுபத்து நாலு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் (ஸகலம்) எல்லா (புவனம்) உலகத்தையும் (அதிஸந்தாய) நிரப்பிவிட்டு (ஸ்தித:) வாளாவிருக்கவே (புன:) மேலும் (த்வத்-நிர்ப்பந்தாத்) உன்னுடைய கட்டாயத்தின் பேரில் (அகில புருஷார்த்த-ஏக-கடனா-) எல்லா விருப்பங்களையும், அறம் பொருள் இன்பம் வீடு என்ற எல்லாப் புருஷார்த்தங்களையும், ஒருங்கே கூட்டி வைக்க (ஸ்வதந்த்ரம்) வல்லதான (தே தந்த்ரம்) உன்னுடைய தந்திரமாகிய (இதம்) இந்த ஸ்ரீவித்தையை (க்ஷிதிதலம்) பூவுலகில் (அவாதிதரத்) அவதரிக்கச் செய்தார்.

 

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் :-  இது “ஸமயாசாரம்’ எனப்படுவது; வஸிஷ்டர், ஸநகர், சுகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐவர்கள் அருளிய “சுபாகம பஞ்சகம்’ எனப் பெயர் பெற்ற ஸம்ஹிதைகளில் போதிக்கப்பட்ட மார்க்கம். அறுபத்து நாலு தந்திரங்களில் சொல்லியிருப்பது ‘கௌல மார்க்கம்’. ‘சந்த்ரகலாவித்யாஷ்டகம்’ எனப்பட்ட எட்டுத் தந்திரங்களில் சொல்லியிருப்பது ‘மிச்ரமார்க்கம்’. ஸமய மார்க்கம் தான் வைதீகர்கள் அனுஷ்டிக்கத் தகுந்தது. இது தான் அடுத்த சுலோகத்தில் கூறப்படும் வித்தை. இது எல்லாப் புருஷார்த்தங்களையும் சாதிக்க வல்லது.

 

அறுபத்து நாலு தந்திரங்கள்

மஹாமாயா, சம்பரம், யோகீனி ஜால சம்பரம், பைரவதந்திரம் எட்டு, பஹுரூபதந்த்ரம் (எட்டு) யாமள தந்த்ரம் (எட்டு) சந்த்ரஞானம், மாலினி, மஹாஸம்மோஹனம் முதலியன. இவற்றில் ஒவ்வொன்றும் வச்யம், ஆகர்ஷணம்,மோஹனம், உச்சாடனம் போன்ற ஒவ்வொரு ஸித்தியைத் தருவது.



சௌந்தயலஹரி ஸ்லோகம் 30

 

ஸ்லோகம் முப்பது

 

ஸ்வதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய:

கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநபன-ஸம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸம்வர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம்

 

தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல் (பரகாயப்பிரவேசம்)

 

(நித்யே) ஆதியந்தமற்ற பரம்பொருளே! (ஸ்வதேஹ-உத்பூதாபி:) உனது உடலினின்று தோன்றிய (க்ருணிபி:) கிரணங்கள் போன்ற (அணிமாத்யாபி:) அணிமாசித்தி முதலிய தேவதைகளால் (அபித:) சூழப் பெற்றவளாக (நிஷேவ்யே) சேவிக்கத்தக்கவளே! (த்வாம்) உன்னை (அஹம் இதி) தனது ஆத்மா வென்று (ய:) எவன் (ஸதா) எப்போதும் (பாவயதி) சிந்திக்கின்றானோ (தஸ்ய) அவனுக்கு – (த்ரிநயன-ஸம்ருத்திம்) சிவஸாயுஜ்யச் செல்வத்தையும் (த்ருணயத:) துரும்பெனக் கருதும் அவனுக்கு – (மஹாஸம்வர்த்தாக்கினி:) ஊழித் தீயானது (நீராஜன-விதிம்) மங்கள ஆரத்தி காட்டிப் பூஜிக்கும் முறையை (விரசயதி) அனுஷ்டிக்கிறது. (கிம் ஆச்சர்யம்) இது ஆச்சரியமா?

 

அம்பிகையைத் தனது ஆத்மாவாகவே ஒருவன் பாவனை செய்தால் ஏற்படும் மகிமை ஒப்புயர்வற்றது. ஸதாசிவனைப் போல் கருதி உலகெல்லாம் அவனைப் பூஜை செய்யும்.

 

கர்த்தாபி ஸர்வலோகானா-மக்ஷய்யைச்வர்யவானபி

சிவ: சிவோSஹமஸ்மீதி வாதினம் யஞ்ச கஞ்சன

ஆத்மனா ஸஹ தாதாத்ம்ய-பாகினம் குருதே ப்ருசம்!!



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 29

 

ஸ்லோகம் இருபத்தொன்பது

 

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:

கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம்!

ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம்

பவஸ்யாப்புத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே!!

 

தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்

(ப்ரஸவாரிஷ்ட நிவிருத்தி, மூர்க்கரை வசப்படுத்தல்)

 

(புர:) எதிரில் உள்ள (வைரிஞ்சம்) பிரம்மாவினுடைய (கிரீடம்) கிரீடத்தை (பரிஹர) விட்டு விலகி வாருங்கள். (கைடபபித:) கைடபாசுரனைக் கொன்ற விஷ்ணுவினுடைய (கடோரே) கடினமான (கோடீரே) கிரீடத்தில் (ஸ்கலஸி) இடறிக் கொள்ளப் போகிறீர்கள்; (ஜம்பாரி) இந்திரனுடைய (மகுடம்) கிரீடத்தை (ஜஹி) ஒதுக்கி விட்டு வாருங்கள்; என்று இவ்வாறாக – (ஏதேஷு) பிரம்மா முதலியவர்கள் (ப்ரணம்ரேஷு) நமஸ்காரம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் (பவனம்) உனது இருப்பிடத்திற்கு (உபயாதஸ்ய) வந்து கொண்டிருக்கும் (பவஸ்ய) பரமசிவனை நோக்கி (ப்ரஸபம்) பரபரப்புடன் (அப்யுத்தானே) நீ எழுந்து எதிர்கொண்டு செல்லும் போது (தவ) உன்னுடைய (பரிஜன-உக்தி) சேடிகள் சொல்லும் வார்த்தை (விஜயதே) சிறப்பாக ஒலிக்கின்றது.

 



 

 

 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 28

 

ஸ்லோகம் இருபத்தி எட்டு

 

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்

விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா

ந சம்போஸ்-தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா!!

 

தேவியின் தாடங்க மகிமை

(விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்)

 

(ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்) பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற (ஸுதாம்) அமிருதத்தை (ஆஸ்வாத்ய அபி) சாப்பிட்டுங் கூட (விதி-சதமக-ஆத்யா:) பிரம்மா, இந்திரன் முதலிய (விச்வே) எல்லா (த்விஷத்:) தேவர்களும் (விபத்யந்தே) – பிரளய காலத்தில் – அழிவுறுகிறார்கள். (கராலம்) கொடிய (க்ஷ்வேலம்) விஷத்தை (கபளிதவத:) சாப்பிட்ட(சம்போ) சிவனுக்கு (காலகலனா) காலத்தின் முடிவு (ந) இல்லை (யத்) என்றால் (தன் மூலம்) அதன் காரணம் (தவ) உன்னுடைய (தாடங்க மஹிமா) காதிலுள்ள தாடங்க மகிமை தான்.

 

ருத்ரத்தில் கூறப்பட்டுள்ளது:

(யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ! சிவா ருத்ரஸ்ய பேஷஜீ! தயா நோ ம்ருட ஜீவஸே!

 

பரமசிவனே, எந்த பராசக்தியானவள் உனது பாதிசாரம் உடையவளாகின்றாளோ, அவள் உலகம் அனைத்திற்கும் மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவள் தான் மருந்து. விஷத்தை உண்டும் அவள் அருளால் தான் எங்களுக்காக நீ பிழைத்திருக்கிறாய்.

 

ஸௌபாக்ய பாஸ்கரத்தில் இருந்து குறிப்பு

ஸூர்யசந்த்ரௌ ஸ்தனௌ சேவ்யாஸ் தாவேவ நயனே ஸ்ம்ருதௌ! உபௌ தாடங்கயுகளம் இத்யேஷா வைதிகீ ச்ருதி!!

 

காலஸ்வரூபிகளான சூரிய சந்திரர்கள் உலகில் உள்ளவர்களின் ஆயுளி நாள்தோறும் விழுங்குபவர்களாயினும் அவர்கள் தேவியினிடம் அடங்கி அவளுடைய அங்கங்களாகவும் ஆபரணங்களாகவும் ஆகிவிடுகின்றனர்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 27

 

ஸ்லோகம் இருபத்தேழு

 

ஜபோ ஜல்ப : சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஜுதி-விதி:!

ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா

ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம்

 

ஸ்மயாசார மானஸிக பூஜை

(ஆத்மஞான சித்தி)

 

(ஆத்மார்ப்பண-த்ருசா) ஆத்மஸமர்ப்பண பாவனையால் (ஜல்ப:) வெறும் பேச்சு (ஜப:) ஜபமாகவும், (ஸகலம் சில்பம் அபி) கைத்தொழிலனைத்தும் (முத்ரா-விரசனா) முத்திரைகளின் விளக்கமாகவும் (கதி:) நடை (ப்ராதக்ஷிண்ய-க்ரமணம்) பிரதக்ஷிணம் செய்வதாகவும் (அசனாதி) உண்டி முதலியன (ஆஹுதி விதி:) ஹோமமாகவும் (ஸம்வோ:) படுத்துக் கொள்ளுதல் (ப்ரணாம:) நமஸ்காரமாகவும் – இன்னும் (ஸுகம்) சுகமாக முயற்சியின்றி (மே) எனது (யத் விலஸிதம்) செயல் எது உண்டோ (அகிலம் அபி) அது எல்லாம் (தவ) உன்னுடைய (ஸபர்யா-பர்யாய:) பூஜை முறையாகவும் (பவது) ஆகட்டும்.

 

முத்திரைகள்: ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா எனும் பத்து முத்திரைகள் தேவி ஆராதனையில் முக்கியமானவை. “தசமுத்ராஸமாராத்யா” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. கைவிரல்களின் இயக்கம் எப்படியிருந்தாலும் அது  எல்லாம் ஞானிகள் விஷயத்தில் முத்திரைகளைக் காட்டினதாக ஆகிறது. ஸமயாசாரத்தைக் கொண்ட ஞானிகள் வெளிப்படையாக ஸ்ரீசக்கரத்திலோ பிம்பத்திலோ குறிப்பிட்ட முறைப்படி பூஜையைச் செய்வதில்லை. அவர்கள் இயற்கையாகச் செய்யும் செயல்கள் எல்லாம் பூஜையாகவும், பேசும் பேச்செல்லாம் துதியாகவும் ஆகின்றன.




 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 26

 

ஸ்லோகம் இருபத்தாறு

 


விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிரார்னோதி விரதிம்

விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்!

விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா

மஹா-ஸம்ஹாரேSஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி-ரஸௌ

 

பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை

(அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு)

 

(விரிஞ்சி:) பிரம்மா (பஞ்சத்வம்) அழிவை (வ்ரஜதி) அடைகிறார்; (ஹரி:) விஷ்ணு (விரதிம்)முடிவை (ஆப்னோதி) அடைகிறார். (கீனாச:) யமன் (விநாசம்) நாசத்தை (பஜதி:) அடைகிறான். (தனத:) குபேரன் (நிதனம்) மரணத்தை (யாதி) அடைகிறான். (மாஹேந்த்ரீ விததி: அபி) ஒருவர் பின் ஒருவராக வரும் இந்திரர்களின் கூட்டமும் (ஸம்மீலித-த்ருசா) கண்ணை மூடி (விதந்த்ரீ) பெருந்தூக்கத்தில் ஆழ்கிறது. (அஸ்மின்) அப்படிப்பட்ட (மஹா-ஸம்ஹாரே) மகாப்பிரளய காலத்தில், (ஸதி) பதிவிரதையான தாயே! (அஸௌ) இந்த (த்வத்பதி) உனது பதியான ஸதாசிவன் (விஹரதி) உன்னுடன் விளையாடுகிறார்.

 

பஞ்சத்வம் – (பஞ்சபூதானாம் வ்யஷ்டி ரூபதாம் மரணமிதி யாவத்) ஐந்து பூதங்களும் தனித்தனியே பிரிந்து போகும் மரணநிலை.

 

விரதிம் – உபரதிம் மரணமிதி யாவத்!!

 

விதந்த்ரீ – விசேக்ஷேண தந்த்ரீ ப்ரமீலனம் ஜாட்யம் யஸ்யா: ஸா-நித்ராந்தேத்யர்த்த:!

 

மாஹேந்த்ரீவிததி: மஹேந்த்ரஸ்யேயம் மாஹேந்த்ரீ சதுர் – தசானாம் மனூனாம் இந்த்ராணாம் விததி: அபி ஸங்கோபி ஸம்மீலதி, ஸம்யங்மீலிதா த்ருசா த்ருஷ்டிர்-யஸ்யாஸ்ஸா!

 

த்வத்பதி – ஸதாசிவ:ஹர: அஸௌ ஹஸஸ்ரதல-கமலே பரித்ருச்யமான:!

 

மஹாப்ரளய காலத்தில் பிருதிவி முதல் எல்லாத் தத்துவங்களும் அதற்கு மேலுள்ள தத்துவங்களில் லயமாகிக் கடைசியில் சக்தியும் சிவமும் ஆகிய இரண்டுமே எஞ்சி நிற்கும். அப்போது சிவன் ஸம்ஹார தாண்டவம் செய்து கொண்டிருப்பதைப் பராசக்தி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

 

 

 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...