Wednesday, September 9, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 25

 

ஸ்லோகம் இருபத்தைந்து

 

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே

பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா

ததா ஹி த்வத்-பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே

ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா

 

தேவி பூஜையில் மும்மூர்த்தி பூஜை அடக்கம் (உன்னதப் பதவியும் அதிகாரமும்)

 

(சிவே) சிவபத்தினியே! (தவ) உன்னுடைய (சரணயோ:) திருவடிகளில் (யா) எந்த (பூஜா) பூஜை (விரசிதா) செய்யப்படுகிறதோ-அது, (தவ) உன்னுடைய (த்ரிகுண-ஜனிதானாம்) முக்குணங்களை அனுசரித்துத் தோன்றிய (த்ரயாணாம் தேவானாம்) மும்மூர்த்திகளுக்கும் (பூஜா) பூஜையாக (பவேத்) ஆகும். (ததா ஹி) அது பொருத்தமே. (ஏதே) இவர்கள் (த்வத்-பாதோத்வஹன-மணிபீடஸ்ய) உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்னப் பலகையின் (நிகடே) சமீபத்தில் (சச்வத்) எப்போதும் (முகுவித-கரோத்தம்ஸ-மகுடா) குவித்த கைகளைக் கிரீடத்தில் வைத்துக் கொண்டு (ஸ்திதா: ஹி) நிற்கின்றார்களன்றோ?

 

த்ரிகுணஜனிதானாம் – மூன்று குணங்களுடன் கூடின மாயை ரஜோகுணம் மேலிட்டிருக்கும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட சைதன்னியம் பிரம்மா; மாயை ஸத்துவ குணம் மேலிட்டிருக்கும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட சைதன்னியம் விஷ்ணு; மாயை தமோ குணம் மேலிட்டிருக்கும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட சைதன்னியம் ருத்ரன்.

மணிபீடஸ்ய நிகடே – சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரசக்கரங்களும் மணிபீடங்கள். அவை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அக்னி கண்டத்தில் உள்ள பிரம்மக்கிரந்தி பிரம்மாவின் இருப்பிடம்; சூரியகண்டத்தில் உள்ள விஷ்ணுக் கிரந்தி விஷ்ணுவின் இருப்பிடம். ஸோம கண்டத்தில் உள்ள ருத்ரக்ரந்தி ருத்திரரின் இருப்பிடம். ஆறு சக்கரங்களிலும் அந்தர்யாக முறையில் தேவி பூஜிக்கப்படும் போது மும்மூர்த்திகளும் பூஜிக்கப்பட்டவர்களாகிறார்கள்.




 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...