Wednesday, September 9, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 23

 

ஸ்லோகம் இருபத்தி மூன்று

 

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா

சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்

யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயனம்

குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்

 

சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம் (ஸர்வ ஸம்பத்து)

 

(யத்) எக்காரணத்தால் (ஏதத்) என்னுடைய இருதயத்தில் பிரகாசிக்கும் இந்த (த்வத்-ரூபம்) உன்னுடைய ரூபம் (ஸகலம் அருணாபம்) முழுவதும் சிவப்பான காந்தியுடனும் (த்ரிநயனம்) மூன்று கண்களுடனும் (குசாப்யாம்) இரண்டு ஸ்தனங்களால் (ஆநம்ரம்) சற்று வளைந்தும் (குடில-சசி-சூடால-மகுடம்) பிறைச்சந்திரனைச் சூடிய மகுடத்துடனும் விளங்குகிறதோ, அதனால் (ஸம்போ:) சம்புவினுடைய (வாமம் வபு:) சரீரத்தின் இடதுபாகம் (த்வயா) உன்னால் (ஹ்ருத்வா) எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பும் (அபரித்ருப்தேன) முழுத்திருப்தியில்லாத (மனஸா) மனதால் (அபரம் சரீரார்த்தம் அபி) சரீரத்தின் மற்றொரு பாதியும் (ஹ்ருதம் அபூத்) கவர்ந்து கொள்ளப்பட்டது என்று (சங்கே) சந்தேகமடைகிறேன்.

 

சிவனும் சக்தியும் ஒரே உடலின் வலது பாகமும் இடது பாகமும். சிவனுடைய பாகம் வெளுப்பு. சக்தியின் பாகம் சிவப்பு. ஆனால் தேவியின் உடல் முழுதும் சிவப்பாகவே காணப்படுவதாலும் மூன்று கண்களும் கிரீடத்தில் சந்திரகலையும் தோன்றுவதாலும், பாதி உடலைக் கொண்டதில் திருப்தியடையாமல் முழுவதையும் தன்மயமாகவே தேவி ஆக்கிக் கொண்டு விட்டாள் என்று இங்கு கூறப்படுகிறது. முக்கண்ணன், சந்திரசேகரன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட சிவன் சக்தியின் வடிவத்தில் மறைந்து போகிறான். இதனால் சக்தியைப் பூஜை செய்தால் சிவபூஜை செய்ததாகிறது. ‘உத்தரகௌலம்’ எனும் மதத்தில் தனியாகச் சிவபூஜை கிடையாது. சக்தியிலேயே சிவன் ஐக்கியம் அவனுக்குத் தனி வடிவமும் இல்லை. தொழிலும் இல்லை.






 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...