Wednesday, September 9, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 28

 

ஸ்லோகம் இருபத்தி எட்டு

 

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்

விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா

ந சம்போஸ்-தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா!!

 

தேவியின் தாடங்க மகிமை

(விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்)

 

(ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்) பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற (ஸுதாம்) அமிருதத்தை (ஆஸ்வாத்ய அபி) சாப்பிட்டுங் கூட (விதி-சதமக-ஆத்யா:) பிரம்மா, இந்திரன் முதலிய (விச்வே) எல்லா (த்விஷத்:) தேவர்களும் (விபத்யந்தே) – பிரளய காலத்தில் – அழிவுறுகிறார்கள். (கராலம்) கொடிய (க்ஷ்வேலம்) விஷத்தை (கபளிதவத:) சாப்பிட்ட(சம்போ) சிவனுக்கு (காலகலனா) காலத்தின் முடிவு (ந) இல்லை (யத்) என்றால் (தன் மூலம்) அதன் காரணம் (தவ) உன்னுடைய (தாடங்க மஹிமா) காதிலுள்ள தாடங்க மகிமை தான்.

 

ருத்ரத்தில் கூறப்பட்டுள்ளது:

(யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ! சிவா ருத்ரஸ்ய பேஷஜீ! தயா நோ ம்ருட ஜீவஸே!

 

பரமசிவனே, எந்த பராசக்தியானவள் உனது பாதிசாரம் உடையவளாகின்றாளோ, அவள் உலகம் அனைத்திற்கும் மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவள் தான் மருந்து. விஷத்தை உண்டும் அவள் அருளால் தான் எங்களுக்காக நீ பிழைத்திருக்கிறாய்.

 

ஸௌபாக்ய பாஸ்கரத்தில் இருந்து குறிப்பு

ஸூர்யசந்த்ரௌ ஸ்தனௌ சேவ்யாஸ் தாவேவ நயனே ஸ்ம்ருதௌ! உபௌ தாடங்கயுகளம் இத்யேஷா வைதிகீ ச்ருதி!!

 

காலஸ்வரூபிகளான சூரிய சந்திரர்கள் உலகில் உள்ளவர்களின் ஆயுளி நாள்தோறும் விழுங்குபவர்களாயினும் அவர்கள் தேவியினிடம் அடங்கி அவளுடைய அங்கங்களாகவும் ஆபரணங்களாகவும் ஆகிவிடுகின்றனர்.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...