ஸ்லோகம் 36
தவாஜ்ஞா-சக்ரஸ்தம் தபன-சசி-கோடி-த்யுதிதரம்
பரம் சம்பும் வந்தே பரிமிலித-பார்ச்வம் பரசிதா |
யமாராத்யன் பக்த்யா ரவி-சசி-சுசீனா-மவிஷயே
நிராலோகேSலோகே நிவஸதி ஹி பாலோக-புவனே ||
ஆஜ்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம் (ஸர்வ வியாதி நிவாரணம்)
(தவ) உன்னுடைய (ஆஜ்ஞா சக்ரஸ்தம்) ஆஜ்ஞா சக்கரத்தில் இருப்பவரும் (தபண-சசி-கோடி-த்யுதி-தரம்)
கோடி சூரிய சந்திரர்களின் பிரகாசத்தை உடையவரும் (பரசிதா) ஸகுண நிர்க்குண சக்திவடிவான
உன்னால் (பரிமிளித-பார்ச்வம்) இரு பக்கத்திலும் அணைக்கப் பெற்றவருமான (பரம் சம்பும்)
பரமசிவனை (வந்தே) சேவிக்கின்றேன். (யம்) அம்மாதிரி இருப்பவரை (பக்த்யா) பக்தியுடன்
(ஆராத்யன்) ஒருவன் ஆராதித்தால் (ரவி-சசி-சுசீனாம்) சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய மூவருடைய
ஒளியாலும் (அவிஷயே) விளங்க வைக்க முடியாததாயும் (நிராலோகே) கண்ணுக்கு எட்டாததாயும்
(அலோகே) கண்ணால் காணும் உலகத்தின்று வேறுபட்டதாகவும் உள்ள (பாலோக-புவனே) பரஞ்ஜோதி வடிவான
உனது ஸாயுஜ்யப் பதவியில் (நிவஸதி ஹி) வசிப்பான் என்பது நிச்சயம்.
ஆக்ஞாசக்கரம் ஏன் அப்பெயர் பெற்றது?
ஜீவனிடம் ஈஸ்வரனுடைய ஆக்ஞை அங்கே பிரகாசிப்பதால் அது ஆக்ஞாசக்கரம் எனப்படுகிறது.
அங்கே காமேசுவர மகாலிங்கம் இரு புறங்களிலும் ஸகுணசக்தியாலும் நிர்க்குண சக்தியாலும்
அலங்கரிக்கப் பெறுகிறது. பாரதபூமியில் காசி க்ஷேத்ரம் ஆக்ஞாசக்கர ஸ்தானமாகக் கருதப்படும்.
அங்கே துர்க்கையும் விசாலாக்ஷியும் பிரதான சக்திகள்.

No comments:
Post a Comment