ஸ்லோகம் 17
ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்-
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்-
வசோபிர்-வாக்தேவீ-வதன-கமலா மோத-மதுரை:
வாக் தேவதைகளால் சூழப்பெற்றவன் (வாக்விலாஸம், சாஸ்திரஞானம்)
(ஜனனி) தாயே! (வாசாம்) வாக்கின் (ஸவித்ரீபி:) பிரவர்த்தகர்களும் (சசி-மணி-சிலா-பங்க-ருசிபி:)
சந்திரகாந்தக் கல்லைப் பிளந்தால் தோன்றுவது போன்ற காந்தியுடையவர்களும் ஆகிய (வசின்யாத்யாபி:ஸஹ)
வசினீ முதலிய வாக்தேவதைகளுடன் கூடியிருப்பவளாக (த்வாம்) உன்னை (ய:) எவன் (ஸஞ்சிந்தயதி)
சிந்திக்கின்றானோ (ஸ:) அவன் (மஹதாம்) மகான்களுடைய (பங்கிருசிபி:) காவியங்களைப் போல்
பிரகாசிப்பவனாகவும் (வாக்தேவீ-வதன-கமலா மோத-மதுரை:) ஸரஸ்வதீ தேவியின் முக கமலத்தின்
பரிமளம் போன்ற மதுரமானதுமான (வசோபி:) வாக்குகளால் (காவ்யானாம்) காவியங்களுக்கு (கர்த்தா)
கர்த்தாவாக பவதி ஆகிறான்.
ஸவித்ரீபி:- ஜநயத்ரீபி:! அக்ஷரவர்க்கங்களைத் தோற்றுவிக்கும் தேவதைகளாகிய
வசினீ முதலியவர்களால், ஸர்வரோகஹர சக்ரம் என்னும் அஷ்டகோணத்தில் வசினீ தேவதைகள் பின்வரும்
மாத்ருகா மந்திரங்களால் பூஜிக்கப்படுகின்றனர்.
வசினீ வாக் தேவதாயை நம:
காமேச்வரீ வாக் தேவதாயை நம:
மோதினீ வாக் தேவதாயை நம:
விமலா வாக் தேவதாயை நம:
அருணா வாக் தேவதாயை நம:
ஜயினீ வாக் தேவதாயை நம:
ஸர்வேச்வரீ வாக் தேவதாயை நம:
கௌலினீ வாக் தேவதாயை நம:
இன்னொரு முறையிலும் பூஜிப்பதுண்டு. அது பின்வருமாறு:-
பிந்துவிலும் த்ரிகோணத்திலும் வசனீ, காமேச்வரீ, மோதினீ, விமலா ஆகியவர்களையும்
அஷ்டகோணம், உள்பத்துக் கோணம், வெளிப்பத்துக் கோணம், பதினான்கு கோணம் ஆகியவற்றில் அருணா,
ஜயினீ, ஸர்வேச்வரீ, கௌலினி ஆகியவர்களையும் புவனேச்வரீ என்ற ஜகன்மாதாவுடன் சேர்த்துக்
கிரமமாகப் பூஜித்தல்
மூன்றாவது முறை:-
(த்வாதச யோகினீபிஸ்-ஸார்த்தம் வசின்யாத்-யஷ்டகம் மிலித்வா விம்சதி கலா பவந்தி!
தா விம்சதி கலா: சுத்தஸ்படிக-ஸங்காசா தசாரயுக்ம-கோணேஷு ஸஞ்சிந் அம்ருதயா, தீபிகா, ஜஞ்பனா,
ஆப்யாயனீ, வ்யாபினீ, மேதா, வ்யோமரூபா, ஸித்தரூபா, லக்ஷ்மீ என்ற பன்னிரெண்டு யோகினிகளுடன்
வசினீ முதலிய எட்டு வாக் தேவதைகளும் சேர்த்தால் கலைகள் இருபது. அக்கலைகள் படிகம் போல்
பரிசுத்தமானவையாக உள்பத்து வெளிப்பத்து ஆகிய கோணங்களில் தியானிக்கப்படவேண்டும். இது
பூப்ரஸ்தார பேதம். இம் முறையில் கந்தாகர்ஷிணீ, ரஸாகர்ஷணீ, ரூபாகர்ஷணீ, ஸ்பர்சாகர்ஷிணீ
ஆகிய நாலு தேவதைகளையும் சதுரத்தின் நான்கு வாயில்களிலும் உள்ள துவார தேவதைகளாகவும்
வழிபட வேண்டும்.

No comments:
Post a Comment