Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

 

ஸ்லோகம் 100

 

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி:

ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர்-வாக்பிஸ்-தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்

|| இதி ஸ்ரீ சங்கராசார்ய-விரசிதா ஸௌந்தர்யலஹரீ ஸமாப்தா||

 

தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது சூரியனுக்கு அவன் கிரணத்தக்கினியால் தீபாராதனை செய்தது போலாம் (ஸகலஸித்தி)

 

(வாசாம்) வாக்கிற்கு (ஜனனீ) பிறப்பிடமாகிய தாயே! (ப்ரதீப-ஜ்வாலாபி:) கற்பூரதீப ஜ்வாலையால் (திவஸகர-நீராஜன-விதி:) சூரியனுக்கு நீராஜனம் செய்தாற் போலும் (ஸுதா ஸூதே:) அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு (சந்த்ரோபல-ஜல-லவை:) சந்திர காந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் (அர்க்ய-ரசனா) அர்க்கியம் அளித்தாற்போலும், (ஸ்வகீயை: அம்போபி:) ஸமுத்திரத்திற்கு – சொந்தமான ஜலத்தாலேயே (ஸலில நிதி ஸௌஹித்யகரணம்) ஸமுத்திரத்திற்கு தர்ப்பணம் செய்தாற் போலும் இருக்கிறது. (த்வதீயாபி:) உன்னுடையதேயான (வாக்பி:) வாக்குகளால் அமைந்த (இயம்) இந்த (தவ) உனது (ஸ்துதி:) ஸ்தோத்திரம்.

 

ஸ்ரீ ஆசார்யர் எதற்கு மேலே நினைக்க முடியாதோ அந்த தத்துவத்தைச் சொன்னவர். அவரே இப்படி தாழ்மையோடு சொல்லியிருக்கிறார். இந்த ஒரு ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலம் உண்டாகும். எப்படி? எல்லா வித்தைகளுக்கும் பிரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. பூஜை செய்யும் போது ஈச்வரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும். இதில் நீராஜனம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்த ஸ்லோகம் சொல்லுவதற்கு இதுவும் ஒரு அடையாளம் போல இருக்கிறது. – காமகோடி சங்கரச்சாரியார்.

 


ஸௌந்தர்யலஹரீ பாஷ்யம் முற்றிற்று

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 99

 

ஸ்லோகம் 99

 

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவிரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பசுபாச-வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜநவான்

 

தேவியை வழிபடுபவன் கல்வி செல்வம் அழகு ஆயுள் இவையனைத்தும் நிரம்பியனாவான் (பேரின்பம்)

 

(த்வத் பஜனவான்) உன்னைப் பூஜிப்பவன் (விதி-ஹரி-ஸபத்ன) பிரம்மாவும் விஷ்ணுவுங்கூடப் பொறாமைப் படக் கூடியவனாய் (ஸரஸ்வ்த்யா) கல்வியுடனும் (லக்ஷ்ம்யா) செல்வத்துடனும் (விஹரதே) இன்பத்தை எய்துகிறான். (ரம்யேண வபுஷா) மன்மதன் போன்ற உடல் அழகால் (ரதே:) ரதி தேவியின் (பாதிவ்ரத்யம்) கற்பையும் (சிதிலயதி) கலங்கச் செய்கிறான். (க்ஷபித-பசு-பாச-வ்யதிகர:) பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாய் (பரானந்த-அபிக்யம்) பேரானந்தம் எனப் பிரசித்தி பெற்ற (ரஸம்) இன்பரஸத்தை (ஸிரம் ஜீவன்னேவ) சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டு (ரஸயதி) அனுபவிக்கிறான்.

 

அம்பாளுடைய பரிபூர்ண கடாக்ஷத்தால் ஒப்புயர்வற்ற கல்வி, செல்வம், அழகு ஆகிய மூன்றும் பக்தனுக்கு ஏற்படுவது இங்கு வர்ணிக்கப்படுவது.

 

முதலில் ஸரஸ்வதி என்று இந்த ஸ்லோகம் ஆரம்பித்து இருக்கிறது. அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. எதைக் கொடுத்துப் பின் பணத்தைக் கொடுத்தால் பணம் வீண் போகாதோ அதை முன்பு தேவி கொடுப்பாள். ஏகாந்த பக்தி அம்பிகையிடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும். நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு? பிரம்மா வீட்டில் அது ஸம்பூரணமாக இருக்கிறது. அம்பிகையின் உபாஸகனுக்கு அதை விட அதிகமாக உண்டாகும். அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும். இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும்.  – காமகோடி சங்கராச்சாரியார்.


 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 98

 

ஸ்லோகம் 98

 

கதா காலே மாதா: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன-ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாபி ச கவிதா-காரணதயா

கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-ரஸ்தாம்

 

பாததீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும் (வாக்ஸித்தி)

 

(மாத:) தாயே! (கலித-அலக்தக-ரஸம்) லாக்ஷாரஸப் பூச்சுடன் கலந்து வரும் (தவ) உன்னுடைய (சரண-நிர்ணே ஜன-ஜலம்) பாதப் பிரக்ஷாளன தீர்த்தத்தை (வித்யார்த்தீ) பிரம்ம வித்தையை நாடும் நான் (கதா காலே) எந்தக் காலத்தில் (பிபேயம்) பருகப் போகிறேன்? (கதய) கூறியருளுங்கள். (ப்ரக்ருத்யா) இயற்கையாகவே (மூகானாம் அபி) ஊமைகளுக்குங்கூட (கவிதா-காரணதயா) கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் (வாணீ-முக கமல-தாம்பூல ரஸதாம்) ஸரஸ்வதியின் வாயிலுள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை (கதா) எப்போது (தத்தே) என் வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது.



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 97

 

ஸ்லோகம் 97

 

கிராமாஹுர்-தேவிம் த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி

 

பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும் (ஜீவன்முக்தி)

 

(பரப்ரஹ்ம மஹிஷி!) பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே (ஆகம-வித:) வேதத்தை அறிந்தவர்கள் (த்வாம் ஏவ) உன்னையே (த்ருஹிண க்ருஹிணீம்) பிரம்மாவின் பத்தினியான (கிராம் தேவீம்) வாக் தேவதையாக (ஆஹு:) கூறுகிறார்கள். (த்வாம் ஏவ) உன்னையே (ஹரே:) ஹரியினுடைய (பத்னீம்) பத்தினியான (பத்மாம்) லக்ஷ்மியாகவும், (ஹர-ஸஹசரீம்) சிவனுடைய பத்தினியான (அத்ரி-தனயாம்) பார்வதியாகவும் – (ஆஹு:) கூறுகிறார்கள். (த்வம்) நீயே (துரீயா) இம் மூவருக்கும் அப்பாற்பட்டவனாய் (கா அபி) இத்தகையவள் என்று கூற முடியாதவளாய் (துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா) அடைதற்கரியதும் எல்லையில்லாததுமான மகிமையுடையவளாய் (மஹா மாயா) மகா மாயை எனப்பட்டவளாய் (விச்வம்) உலகனைத்தையும் (ப்ரமயஸி) ஆட்டி வைக்கிறாய்.

 

துரியா காபி த்வம்:-

 

உன்னுடைய மகிமையை மனதினால் யோசனை பண்ணுவதற்கு கூட முடியாது. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கிருத்தியத்திற்காக மும்மூர்த்திகளை உண்டு பண்ணி விட்டு இந்த காரியத்திற்கும் மேலாக, அதிதேவதையாக இருப்பது உன்னுடைய ஸ்வரூபம். மூன்றுக்கும் மேலாக நான்காவதாக இருக்கிறவள் நீ தான். கிட்டத்தட்ட நாமம் ரூபம் எல்லாம் மூன்றாவதற்கும் நான்காவதற்கும் ஒன்றாகவே சொல்கிறோம். காமேசுவரனுடைய சக்தியாகிய காமேஸ்வரிக்கும் தூக்கத்திற்கு அதிஷ்டானமான பார்வதிக்கும் பொருத்தம் அதிகம். – காமகோடி சங்கரசாரியார்.


சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 96

 

ஸ்லோகம் 96

 

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி ததை: |

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே

குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: ||

 

தேவியினுடைய பாதிவ்ரத்ய மகிமை (ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்)

 

(ஸதி) பதிவிரதைகளின் தெய்வமே! (வைதாத்ரம்) பிரம்மாவினுடைய (கலத்ரம்) மனைவியை (கதி கதி) எத்தனையோ (கவய:) கவிகள் (ந பஜந்தே) நாடி அடையவில்லையா? (கை: அபி தனை:) எதோ ஒரு வகையான செல்வத்தால் (கோ வா) எவனோ ஒருவன் (ச்ரிய: தேவ்யா: பதி:) லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக (ந பவதி) ஆகி விடவில்லையா? (ஸதீனாம்) பதிவிரதைகளுக்குள் (அசரமே) முதன்மையானவளே! (மஹா தேவம்) மகாதேவனை (ஹித்வா) விட்டு (தவ) உனது (குசாப்யாம் ஆஸங்க:) நகில்களுடைய ஸம்பந்தமோ (குரவகதரோ: அபி) குரவக மரத்திற்குக் கூட (அஸுலப) கிடைத்தற்கு அரிது.

 

எவர்கள் மந்திரம், ஜபம் முதலியவைகளால் ஸரஸ்வதியை வசமாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் ஸரஸ்வதீ வல்லபர்கள் எனக் கூறப்படுகிறார்கள். எவர்கள் தனம், தானியம், குதிரை, யானை முதலிய செல்வத்தை வசமாக்கிக் கொண்டவர்களோ இவர்கள் லக்ஷ்மீபதிகள் எனக் கூறப்படுகிறார்கள். ஆனால் எவரையும் பார்வதீபதி எனக் கூறுவதில்லை. கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்லலாம். ஆனால் மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாத பரதேவதையை எங்கும் வசப்படுத்திக் கொள்ள இயலாது. அவள் பரமசிவன் ஒருவருக்கே வசப்பட்டவள்.

 

குரவகதரோ:- கர்ப்பிணீ ஸ்திரீகளுக்கு மசக்கை ஏற்படுவது போல் பூத்துக் காய்க்குமும் சில மரங்கள் அசேதனமாயினும் ஸ்திரீகளின் தழுவதலுக்கு ஏங்குவதாயும் அங்ஙனம் அவர்கள் தழுவுவதால் மகிழ்ந்து புஷ்பிப்பதாயும் கூறுவர். குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக் கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.

 

அம்பிகைக்கும், லக்ஷ்மிக்கும், ஸரஸ்வதிக்கும் எந்த ஒரு ஏற்றத் தாழ்வு கூறுவது போல் இங்கு கூறினாலும் உண்மையில் ஏற்றத் தாழ்வு இல்லை. “ஸ்ரீராமனும் பரசுராமனும் சண்டை போட்டுக் கொண்டால் வேறாகப் போய் விடுவார்களா? இரண்டு பேரும் மஹாவிஷ்ணுவின் அவதாரம் தானே? என்கிறார் காமகோடி சங்கராச்சாரியார்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...