Monday, September 7, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் பதினைந்து

 

ஸ்லோகம் 15

 

சரஜ்-ஜ்யோத்ஸ்னா-சுத்தாம் சசியுத-ஜடாஜுட-மகுடாம்

வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம்!

ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே

மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரிணா: பணிதய:

 

தேவியின் சுத்த ஸத்வ வடிவம் (கவித்துவமும் பாண்டித்யமும்)

 

(சரத்-ஜயோத்ஸ்னா-சுத்தாம்) சரத்கால நிலவைப் போல் நிர்மல வடிவினரும் (சசியுத-ஜடாஜுட-மகுடாம்) சந்திரனுடன் கூடிய சடைமுடியும் கிரீடமும் உடையவளும் (வர-) வரம் (த்ராஸ-த்ராண-) அபயமுத்திரை (ஸ்படிக-குடிகா) ஸ்படிகமாலை (புஸ்தக.) புஸ்தகம் ஆகியவற்றை (கராம்) கையில் கொண்டவளுமான (த்வா) உன்னை (ஸக்ருத்) ஒரு முறை (நத்வா) நமஸ்கரித்து விட்டால் (ஸதாம்) அப்படிப்பட்ட நல்லவர்களுக்கு (மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா:) தேனும் பாலும் திராக்ஷையும் சேர்ந்தாற் போன்ற இனிய (பணிதய:) சொற்றொடர்கள் (கதமிவ) எப்படித்தான் (ந ஸந்நிதததே) சித்திகாமற் போகும்?

 

ஸரஸ்வதீ கடாக்ஷத்தால் வித்தையில் உயர்வடைய விரும்புவர் தேவியை தியானம் செய்ய வேண்டிய முறை இங்கு கூறப்படுவதால் இது “ஸாரஸ்வதப் பிரயோகம்’ எனப்படும். இதையே அடுத்து வரும் இரண்டு ஸ்லோகங்களும் கூடக் கூறுகின்றன.

 

சரஜ்-ஜ்யோத்ஸனாசரதி:_

 சரத்காலே ஜ்யோத்ஸ்னா சந்த்ரிகா தத்வத். ரஜோகுண தமோ குணமற்ற சுத்த ஸத்வத்தை வெண்மை குறிக்கிறது.

 

சசியுத ஜடாஜுட மகுடாம் :- சந்திரகலையை முடியில் தரித்திருப்பதால் பராசக்தியினுடைய வடிவத்தின்று இது பிரிதன்று என்பதை உணரவேண்டும். இது ஆதி மஹா ஸரஸ்வதியின் வடிவம்; பிரம்மபத்னியான ஸரஸ்வதி வடிவம் பின் தோன்றியது.

 

ஆதிசக்தியானவள் தன்னிடமிருந்து முக்குணங்களால் மஹாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வதீ, மஹா காளீ என்று மூன்று வடிவங்களைத் தோற்றுவித்தாள். பின்னர் இவ்வடிவங்கள் ஒவ்வொன்றினின்றும் இரட்டை வடிவங்கள் தோன்றின: - ஆதி லக்ஷ்மியான மஹா லக்ஷ்மியிடமிருந்து பிரம்மாவும் லக்ஷ்மியும் (சிவப்பு வர்ணம்) மஹாஸரஸ்வதியிடமிருந்து விஷ்ணுவும் பார்வதியும் (நீல வர்ணம்) மஹா காளியிடமிருந்து சிவனும் ஸரஸ்வதியும் (வெளுப்பு வர்ணம்) சகோதர சகோதரிகளாக.

 

-     ரஹஸ்யத்ரயம்- தேவீமஹாத்மியம்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் பதினான்கு

 

ஸ்லோகம் 14

க்ஷிதௌ ஷட்புஞ்சாசத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே

ஹுதாசே த்வாஷஷ்டிச் சதுரதிக-பஞ்சாச-தநிலே

திவி த்வி: ஷட்த்ரிம்சன்-மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே

மயூகாஸ்-தேஷா மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம்

ஆதாரச்சக்கரங்களின் கிரணங்களும் அப்பாலும் (பஞ்சம், கொள்ளை, யோய் நிவிருத்தி)

(க்ஷிதௌ) பூமிதத்துவமாகிய மூலாதாரத்தில் (ஷட் பஞ்சாசத்) ஐம்பத்தாறு (உதகே) ஜலதத்துவமாகிய மணிபூரகத்தில் (த்விஸமதிக-பஞ்சாசத்) ஐம்பத்திரண்டு (ஹுதாசே) அக்னித்தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் (த்வாஷஷ்டி) அறுபத்திரண்டு, (அனிலே) வாயுதத்துவமாகிய அனாஹதத்தில் (ஸதுரதிக-பஞ்சாசத்) ஐம்பத்தி நான்கு, (திவி) ஆகாசதத்துவமாகிய விசுத்தியில் (த்விஷ்ஷட்த்ரிம்சத) எழுபத்திரண்டு, (மனஸி ச) மனஸ்தத்துவமாகிய ஆஜ்ஞையிலோ (சதுஷ் ஷஷ்டி) அறுபத்து நான்கு (இதி) என்று (மயூகா:) கிரணங்கள் (யே) எவை உண்டோ (தேஷாம் அபி) அவைகளுக்கு (உபரி) மேலாக (தவ) உன்னுடைய (பாதாம்புஜ-யுகம்) இரண்டு திருவடிகளும் விளங்குகின்றன.

ஆறு ஆதாரங்களும் காலகதிக்கு உட்பட்டவை என்றும், அவைகளுக்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் காலத்தைக் கடந்தவை என்றும் இங்கு குறிக்கப்படுகிறது. மூலாதாரம் 55 நாள் கொண்ட வஸந்த ருதுவிற்கு ஒப்பாகவும், மணிபூரகம் 52 நாள் கொண்ட க்ரீஷ்ம ருதுவிற்கு ஒப்பாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாள் கொண்ட வர்ஷருதுவிற்கு ஒப்பாகவும், அனாஹதம் 54 நாள் கொண்ட சரத் ருதுவிற்கு ஒப்பாகவும், விசுத்தி 72 நாள் கொண்ட ஹேமந்த ருதுவிற்கு ஒப்பாகவும், ஆஜ்ஞை 64 கொண்ட சிசிர ருதுவிற்கு ஒப்பாகவும் வர்ணிக்கப்படுகிறது. பிரம்மாண்டத்தில் நாட்களாயிருப்பவை பிண்டாண்டத்தில் கிரணங்களாய்க் கூறப்படுகின்றன. அக்னிகண்டத்தில் 108 கிரணங்களும் சூரிய கண்டத்தில் 116 கிரணங்களும், சந்திர கண்டத்தில் 136 கிரணங்களும் ஆக மொத்த கிரணங்கள் 360. காலாத்மகமான வருஷத்திலும் நாட்கள் அல்லது கலைகள் 360.

தேவியின் ஸ்தானம் அக்னிகலைக்கும், சூரியகலைக்கும் சந்திரகலைக்கும் அப்பாற்ப்பட்டு அவைகளை எல்லாம் விழுங்கும் ஸ்வரூபம் உடையதாய் விளங்குவது.

ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோSய மக்னி:! தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!


அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நக்ஷத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல் கொடிகளும் பிரகாசிப்பதில்லை. அக்கினி எங்ஙனம் பிரகாசிக்கும்? ஸ்வயம் பிரகாசமுள்ள அப் பரம்பொருளைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றது. அந்த ஒளியாலேயே இவையனைத்தும் விளங்குகிறது.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் பதிமூன்று

 

ஸ்லோகம் பதிமூன்று

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்

தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதிச:!

கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா

ஹடாத த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:

 

கடைக்கண்ணின் கிருபை (காமஜயம்)

(தவ) உன்னுடைய (அபாங்க-ஆலோகே) கடைக்கண் பார்வையில் (பதிதம்) விழுந்த (நரம்) மனிதனை (வர்ஷீயாம்ஸம்) அவன் வயது சென்றவனாயினும் (நயனவிரஸம்) கண்ணுக்குப் பிடிக்காதவனாயினும் (நர்மஸு) சிற்றின்ப விளையாட்டுக்களில் (ஜடம்) மூடனாயினும் (யுவதய:) யௌவனப் பெண்கள் (களத்-வேணீ-பந்தா:) கூந்தல் முடி கலைந்தவர்களாய், (குச-கலச-விஸ்ரஸ்த-ஸிசயா:) நகில்களின் மேலுள்ள ஆடைகள் நழுவியவர்களாய், (ஹடாத்-த்ருட்யத்-காஞ்ச்ய:) பரபரப்பால் ஒட்டியாணப் பூட்டு கழன்றவர்களாய் (விகிளித-துகூலா:) சேலைகள் நழுவியவர்களாய் (ஸதச:) நூற்றுக்கணக்கானவர்கள் (அனுதாவந்தி) பின் தொடர்கிறார்கள்.


யுவதய: ஓ (கீர்த்தி: ஸ்ரீர்-வாக் ச நாரீணாம்ஸம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா) ஸ்த்ரீகளுள் நான் கீர்த்தி, செல்வம், வாக்தேவதையான ஸரஸ்வதி, ஞாபகசக்தி, புத்திசக்தி, திடச்சித்தம், பொறுமை ஆகிய தெய்வீக சக்திகளாக இருக்கின்றேன்.  (பகவத் கீதை 10.34)

 

தேவியினுடைய கடாக்ஷம் எவனிடத்தில் விழுந்தாலும் அவன் காமேசுவரனுடைய அம்சமுடையவனாய் விடுவதால் முன் ஸ்லோகத்தில் தேவஸ்திரீகளும் அப்படிப்பட்ட பக்தனிடம் ஆசை கொள்கிறார்கள் என்று கூறியது போல், ஸ்திரீகளாக வர்ணிக்கப்படும் சக்திகள் எல்லாம் அவனைத் தாமே நாடி அடைகின்றன என்னும் கருத்துக் கவிகளின் பரிபாஷையில் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது என்றும் ஸாதாரண ஸ்த்ரீகள் இவனுக்கு காமவசமாகிறார்கள் எனும் வெளிப்படையான சொல்லர்த்தம் இதில் அடங்கியிருந்தாலும் இதின் உண்மையான நோக்கம் அதுவல்ல என்றும் காணவேண்டும். கீதை கூறும் இன்னொரு கருத்தையும் இத்துடன் ஒப்பிட்டுச் சிந்திக்கலாம்.

எங்கும் நிரம்பியதும் நிலைகுலையாததும் ஆகிய ஸமுத்திரத்தை நதிகள் எவ்வாறு வந்தடைகின்றனவோ அவ்வாறு ஆசைகள் எல்லாம் எவனை அடைகின்றனவோ அவன் அமைதியை எய்துகிறான். ஆசைகளைத் தொடர்பவன் எய்தான். (கீதை 2:70)



சௌந்தயலஹரி ஸ்லோகம் பன்னிரெண்டு

 

ஸ்லோகம் பன்னிரெண்டு



த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்

கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய:

யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யாந்தி மனஸா

தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிச-ஸாயுஜ்ய-பதவீம்



உவமையற்ற ஸௌந்தர்யம் (சிவ சாயுஜ்யம், ஊமையும் பேச)



(துஹினகிரிகன்யே) பனிமலையரசன் பெண்ணே! (கவீந்த்ரா:) கவிசிரேஷ்டர்கள் (விரிஞ்சி-ப்ரப்ருதய:) ஸரஸ்வதீ வல்லபரான பிரம்மா போன்றவர்கள் கூட (த்வதீயம்) உன்னுடைய (ஸௌந்தர்யம்) அழகுக்கு (துலயிதும்) உவமை கூறுவதற்கு (கதமபி) எப்படி எப்படியோ (கல்பந்தே) கற்பனை செய்து பார்க்கிறார்கள் - அவர்களால் முடியவில்லை. (யத்- ஆலோக -ஔத்ஸுக்யாத்) அந்த அழகை அனுபவிக்க ஆசை கொண்டதால் (அமரலலனா) அழகிற்சிறந்த தேவஸ்த்ரீகளும் – பரமசிவனுடைய கண்ணைக் கொண்டு அதைக் காண விரும்பி (தபோபி:) தவமுயற்சிகளால் (துஷ்ப்ராபாம் அபி) அது அடைவதற்கு அரிதாயினும் (கிரிச-ஸாயுஜ்ய பதவீம்) பரமசிவ ஸாயுஜ்ய பதவியை மனஸா மானசீகமாக (யாந்தி) அடைகிறார்கள்.


பரமசிவனுடைய கண்களைத் தவிர வேறு கண்களால் பரதேவதையின் அழகை முழுவதும் அனுபவிக்க இயலாததால் தேவஸ்திரீகள் பரமசிவனுடன் ஒன்றுபட்டு நிற்கும் ஸாயுஜ்யப் பதவியை விரும்புகிறார்கள் எனக் கூறப்பட்டது. சிவ ஸாயுஜ்யத்தின் பெருமையும் இதனால் நிருபிக்கப்படுகிறது.





சௌந்தர்யலஹரி ஸ்லோகம் பதினொன்று

 

ஸ்லோகம் பதினொன்று

 

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி

ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:

சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய

த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: !!11!!

 

ஸ்ரீசக்ரவர்ணனை

(ஸத்ஸந்தானம், ஜன்ம சாபல்யம்)

(சதுர்ப்பி:) நான்கு (ஸ்ரீகண்டை:) சிவ சக்கரங்களாலும் (சம்போ: ப்ரபின்னாபி:) சிவ சக்கரங்களிலிருந்து வேறான (பஞ்சபி:) ஐந்து (ஸிவயுவதிபி:) சக்தி சக்கரங்களாலும் (நவபி:) ஒன்பதாக உள்ளதும் (மூலப்க்ருதிபி: அபி) பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடியதுமான (தவ) உன்னுடைய (சரண கோணா:) இருப்பிடமாகிய ஸ்ரீசக்ரத்தின் கோணங்கள் (வஸுதல) எட்டு தளம் (கலாச்ர) பதினாறு தளம் (த்ரிவலய) மூன்று வட்டங்கள் (த்ரி-ரேகாபி:) மூன்று கோடுகள் ஆகியவற்றுடன் (ஸார்த்தம்) கூடி (பரிணதா:) பரிணமிக்கும் (சது: சத்வாரிம்சத்) நாற்பத்து நான்காக உள்ளன.

 

பராசக்தியின் யந்த்ரரூபம் ஸ்ரீசக்ரம். அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.

ஸ்ரீகண்டை:- (ச்ரிணாதி ஹிநஸ்தீதி ஸ்ரீ: விஷம் கண்டே யஸ்ய அஸௌ ஸ்ரீகண்ட: ஆர: தே கோணோ அபி ஸ்ரீகண்டா:) ஸ்ரீ என்றால் கொல்லும் குணமுடைய விஷம். அதை கழுத்தில் கொண்டவர் ஸ்ரீகண்டராகிய பரமசிவன். அவரைக் குறிக்கும் கோணங்களும் ஸ்ரீகண்டங்கள் எனப்படுகின்றன.


சிவயுவதிபி:- இப்பெயர் பரமசிவபத்னியான பராசக்தியைக் குறிக்கும். அவ்வாறே சக்தி கோணங்களையும் குறிக்கும்.

நான்கு சிவ சக்கரங்கள், ஐந்து சக்தி சக்கரங்கள்

(த்ரிகோண–மஷ்டகோணஞ்ச தசகோணத்வயம் ததா!

சதுர்தசாரஞ்சைதானி சக்தி-சக்ராணி பஞ்ச ச!!

பிந்துச் சாஷ்டதளம் பத்மம் பத்மம் ஷோடாச-பத்ரகம்!

சதுரச்ரஞ்ச சத்வாரி சிவ-சக்ராண்யனுக்ரமாத்!!)

முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினான்கு கோணம் ஆகிய ஐந்தும் சக்தி சக்கரங்கள். பிந்து எட்டு இதழ்கமலம், பதினாறு இதழ் கமலம், நாற்கோணம் ஆகிய நான்கும் சிவசக்கரங்கள் – லலிதா த்ரிசதீ.

ஸ்ரீ சக்ரம் ஒன்பது முக்கோணங்களால் ஆகியது. ஆகையால் கீழ் நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் சக்தி சக்கரங்கள் என்றும் மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சிவ சக்கரங்கள் என்றும் இன்னொருவகையில் கொள்ளப்படும்.


ஸமயாசரப்படி வரையப்படும் சிருஷ்டிக்கிரம சக்கரத்தில் நடு முக்கோணம் மேல் நோக்கியது. கௌலாசாரப்படி வரையும் ஸம்ஹாரசக்கரத்தில் நடு முக்கோணம் கீழ் நோக்கியது.


மூலப்ரக்ருதிபி: - ஒன்பது சக்கரங்களும் அண்டமாகிய உலகிற்கும் பிண்டமாகிய உடலுக்கும் மூலகாரணங்களால் ஆன தத்துவங்களைக் குறிப்பவையாதலால் அவை மூலப்பிரகிருதிகள் என்றும், யோனிகள் என்றும் கூறப்படுகின்றன. உடலிலுள்ள மூலப்பொருள்களில் மஜ்ஜை, சுக்லம், பிராணன், ஜீவன் என்ற நான்கும் சிவாம்சம். த்வக்(தோல்,) அஸ்ருக்( இரத்தம்) மாம்ஸம் மேதை(மூளை) அஸ்தி(எலும்பு) என்ற ஐந்தும் சக்தி அம்சம். அண்டத்திலுள்ள மூலக்காரணங்களில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்தும் சக்தி அம்சம். மாயை, சுத்த வித்தை, மகேசுவரன், ஸதாசிவன் என்ற நான்கும் சிவாம்சம்.

 









சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...