ஸ்லோகம் 15
சரஜ்-ஜ்யோத்ஸ்னா-சுத்தாம் சசியுத-ஜடாஜுட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம்!
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரிணா: பணிதய:
தேவியின் சுத்த ஸத்வ வடிவம் (கவித்துவமும் பாண்டித்யமும்)
(சரத்-ஜயோத்ஸ்னா-சுத்தாம்) சரத்கால நிலவைப் போல் நிர்மல வடிவினரும் (சசியுத-ஜடாஜுட-மகுடாம்)
சந்திரனுடன் கூடிய சடைமுடியும் கிரீடமும் உடையவளும் (வர-) வரம் (த்ராஸ-த்ராண-) அபயமுத்திரை
(ஸ்படிக-குடிகா) ஸ்படிகமாலை (புஸ்தக.) புஸ்தகம் ஆகியவற்றை (கராம்) கையில் கொண்டவளுமான
(த்வா) உன்னை (ஸக்ருத்) ஒரு முறை (நத்வா) நமஸ்கரித்து விட்டால் (ஸதாம்) அப்படிப்பட்ட
நல்லவர்களுக்கு (மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா:) தேனும் பாலும் திராக்ஷையும் சேர்ந்தாற்
போன்ற இனிய (பணிதய:) சொற்றொடர்கள் (கதமிவ) எப்படித்தான் (ந ஸந்நிதததே) சித்திகாமற்
போகும்?
ஸரஸ்வதீ கடாக்ஷத்தால் வித்தையில் உயர்வடைய விரும்புவர் தேவியை தியானம் செய்ய
வேண்டிய முறை இங்கு கூறப்படுவதால் இது “ஸாரஸ்வதப் பிரயோகம்’ எனப்படும். இதையே அடுத்து
வரும் இரண்டு ஸ்லோகங்களும் கூடக் கூறுகின்றன.
சரஜ்-ஜ்யோத்ஸனாசரதி:_
சரத்காலே ஜ்யோத்ஸ்னா சந்த்ரிகா
தத்வத். ரஜோகுண தமோ குணமற்ற சுத்த ஸத்வத்தை வெண்மை குறிக்கிறது.
சசியுத ஜடாஜுட மகுடாம் :- சந்திரகலையை முடியில் தரித்திருப்பதால் பராசக்தியினுடைய
வடிவத்தின்று இது பிரிதன்று என்பதை உணரவேண்டும். இது ஆதி மஹா ஸரஸ்வதியின் வடிவம்; பிரம்மபத்னியான
ஸரஸ்வதி வடிவம் பின் தோன்றியது.
ஆதிசக்தியானவள் தன்னிடமிருந்து முக்குணங்களால் மஹாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வதீ,
மஹா காளீ என்று மூன்று வடிவங்களைத் தோற்றுவித்தாள். பின்னர் இவ்வடிவங்கள் ஒவ்வொன்றினின்றும்
இரட்டை வடிவங்கள் தோன்றின: - ஆதி லக்ஷ்மியான மஹா லக்ஷ்மியிடமிருந்து பிரம்மாவும் லக்ஷ்மியும்
(சிவப்பு வர்ணம்) மஹாஸரஸ்வதியிடமிருந்து விஷ்ணுவும் பார்வதியும் (நீல வர்ணம்) மஹா காளியிடமிருந்து
சிவனும் ஸரஸ்வதியும் (வெளுப்பு வர்ணம்) சகோதர சகோதரிகளாக.
-
ரஹஸ்யத்ரயம்- தேவீமஹாத்மியம்.

No comments:
Post a Comment