Tuesday, September 1, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 7

 

ஸ்லோகம் ஏழு

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா

பரீக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா!

தனுர்-பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:

புரஸ்தா-தாஸ்தாந் த: புரமதிது-ராஹோ-புருஷிகா !!7!!

 

தேவியின் ஸ்வரூபம் (தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்)

க்வணத் சலங்கைகள் கிலு கிலுக்கின்ற காஞ்சீதாமா தங்க ஒட்டியாணம் பூண்டவளும் கரி-கலப-கும்ப-ஸ்தன-நதா) யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால் சற்று வணங்கிய வடிவை உடையவளும் (மத்யே) இடையில் (பரிஷீணா) மிக மெலிந்தவளும் (பரிணத-சரத்-சந்த்ரவதனா) சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவளும் (கரதலை:) கைகளால் (தனுர்-பாணான் பாசம்-ஸ்ருணிம் அபி) கரும்புவில், புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை (தநானா) தரிப்பவளும், (புரமதிது:) முப்புரத்தை அழித்த பரமசிவனுடைய (ஆஹோ-புருஷிகா) ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தி (ந:) எங்களுக்கு (புரஸ்தாத்) எதிரில் (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.

மணிபூரக சக்ரத்தில் தேவி எந்த ரூபத்துடன் பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.

மேருதண்டம் என்னும் முதுகெலும்பிற்குள் ஸூக்ஷ்மமாக ஸுஷும்னா என்ற நாடியிருக்கிறது. இதன் அடியில் மூலாதார சக்கரமும், அதற்கு நாலு விரற்கடைக்கு மேல் ஸ்வாதிஷ்டானமும் அதற்கு மேல் தொப்புளுக்கெதிரில் மணிபூரsமும், இருதயத்துக்கெதிரில் அநாஹதமும், கண்டத்துக்கு எதிரில் விசுத்தியும், புருவ மத்தியில் ஆஜ்ஞையும், சிரசின் மேல் ஸஹஸ்ரார சக்கரமும் உள்ளன. இவை யோகிகளுக்குப் புரியும்.

மணிபூரகத்தில் த்ரிபுராந்தகனான காமேசுவரனுடைய ஜீவநாடியாக தேவி விளங்குகிறாள்.

ஆஹோ புருஷிகா:- ‘அஹோ’ அல்லது “ஆஹோ’ என்பது சாதாரணமாக ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல். இங்கு அது ‘அஹம்’ என்ற தன்னுணர்வைக் குறிக்கும்; அதுவே தேவியின் ஸ்வரூபம்.




சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 6

 

ஸ்லோகம் ஆறு

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:

வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:!

ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்

அபாங்காத் தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே !!6!!


கடைக்கண் பார்வை ( புத்ர ஸந்தானம்)

(ஹிமகிரிஸுதே) பனிமலையரசன் பெண்ணே! – மன்மதனுடைய – (தனு) வில் (பௌஷ்பம்) மலர்களாலானது. (மௌர்வீ) நாண்கயிறு (மதுகரமயீ) தேனீக்களாலானது. (விசிகா:) பாணங்கள் (பஞ்ச) ஐந்தே – அதுவும் பூக்கள் – (ஸாமந்த:) மந்திரி (வஸந்த:) வஸந்தருது, (ஆயோதனரத:) போர் செய்ய ஏறி வரும் தேர் (மலயமருத்) மலயத்தில் இருந்து வீசும் தென்றல் காற்று (ததா அபி) அப்படியிருந்தும் (அனங்க:) உடலில்லாத மன்மதன் (ஏக) ஒருவனாகவே (தே) உன்னுடைய (அபாங்காத்) கடைக்கண் பார்வையால் (காம் அபி க்ருபாம்) எதோ ஒரு கிருபையை (லப்த்வா) அடைந்து (இதம்) இந்த (ஜகத்) உலகம் (ஸர்வம்) அனைத்தையும் (விஜயதே) ஜயிக்கிறான்.

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படும் உபாஸனைக்கு ‘அனங்க வித்யா’ என்று பெயர். இதற்கு மன்மதன் ரிஷி, அவ்யக்த காயத்ரீச்சந்தம், ராஜராஜேசுவரீ தேவதை. தேவியின் கருணைக்குப் பாத்திரமானவன் ஒரு ஸாதங்களும் இல்லாவிட்டாலும் உலகையெல்லாம் வெல்லக் கூடியவனாகலாம் என்பதற்கு மன்மதன் உதாரணம். உடலே இல்லாமல் புஷ்பத்தாலான வில்லையும், அம்புகளையும் கொண்டு தென்றல் காற்றையே தேராகக் கொண்டு வேறு உதவியில்லாமல் ஒருவனாகவே உலகத்தாருடன் போர் நிகழ்த்தி மஹாபுருஷர்களைக் கூட ஜயித்து விடுகிறான்.

(அசேதா யச்ச சேதன:! ஸதம் மணி-மவிந்தத்! ஸோSநங்குலி ராவயத்! ஸோSக்ரீவ: ப்ரத்யமுஞ்சத்! ஸோSஜிஹ்வோ அஸச்சத! தைதம் ருஷிம் விதித்வா நகரம் ப்ரவிசேத்).

அங்கின்மையால் உணர்ச்சியற்றவன் என்றாலும் எல்லா உயிர்களிலும் உள்ளுறைவதால் சேதனனாய் விளங்குகிறான் மன்மதன். அவன் பிரசித்தமான ஸ்ரீவித்யா ரத்னத்தை அடைந்தான். கையில்லாமல் சேர்த்துப் பிடிப்பவனானான். கழுத்தில்லாமல் மணியை அணிந்து கொண்டான். நாக்கில்லாமல் ருசி பார்த்தான். இப்படிப்பட்ட மந்த்ர த்ரஷ்டாவான ரிஷியை அறியாமல் ஸ்ரீசக்ர பூஜையில் பிரவேசிக்கலாகாது. (யஜுர்வேதம் – (ஆரூணம் அனு 50)




சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...