ஸ்லோகம் ஏழு
க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரீக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா!
தனுர்-பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாந் த: புரமதிது-ராஹோ-புருஷிகா !!7!!
தேவியின் ஸ்வரூபம் (தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்)
க்வணத் சலங்கைகள் கிலு கிலுக்கின்ற காஞ்சீதாமா தங்க ஒட்டியாணம் பூண்டவளும்
கரி-கலப-கும்ப-ஸ்தன-நதா) யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால் சற்று வணங்கிய வடிவை உடையவளும்
(மத்யே) இடையில் (பரிஷீணா) மிக மெலிந்தவளும் (பரிணத-சரத்-சந்த்ரவதனா) சரத்காலத்துப்
பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவளும் (கரதலை:) கைகளால் (தனுர்-பாணான் பாசம்-ஸ்ருணிம்
அபி) கரும்புவில், புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை (தநானா) தரிப்பவளும், (புரமதிது:)
முப்புரத்தை அழித்த பரமசிவனுடைய (ஆஹோ-புருஷிகா) ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தி
(ந:) எங்களுக்கு (புரஸ்தாத்) எதிரில் (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.
மணிபூரக சக்ரத்தில் தேவி எந்த ரூபத்துடன் பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.
மேருதண்டம் என்னும் முதுகெலும்பிற்குள் ஸூக்ஷ்மமாக ஸுஷும்னா என்ற நாடியிருக்கிறது.
இதன் அடியில் மூலாதார சக்கரமும், அதற்கு நாலு விரற்கடைக்கு மேல் ஸ்வாதிஷ்டானமும் அதற்கு
மேல் தொப்புளுக்கெதிரில் மணிபூரsமும், இருதயத்துக்கெதிரில் அநாஹதமும், கண்டத்துக்கு
எதிரில் விசுத்தியும், புருவ மத்தியில் ஆஜ்ஞையும், சிரசின் மேல் ஸஹஸ்ரார சக்கரமும்
உள்ளன. இவை யோகிகளுக்குப் புரியும்.
மணிபூரகத்தில் த்ரிபுராந்தகனான காமேசுவரனுடைய ஜீவநாடியாக தேவி விளங்குகிறாள்.
ஆஹோ புருஷிகா:- ‘அஹோ’ அல்லது “ஆஹோ’ என்பது சாதாரணமாக ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல். இங்கு அது ‘அஹம்’ என்ற தன்னுணர்வைக் குறிக்கும்; அதுவே தேவியின் ஸ்வரூபம்.

No comments:
Post a Comment