ஸ்லோகம் 100
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி:
ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ்-தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்
|| இதி ஸ்ரீ சங்கராசார்ய-விரசிதா ஸௌந்தர்யலஹரீ ஸமாப்தா||
தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது சூரியனுக்கு அவன் கிரணத்தக்கினியால்
தீபாராதனை செய்தது போலாம் (ஸகலஸித்தி)
(வாசாம்) வாக்கிற்கு (ஜனனீ) பிறப்பிடமாகிய தாயே! (ப்ரதீப-ஜ்வாலாபி:) கற்பூரதீப
ஜ்வாலையால் (திவஸகர-நீராஜன-விதி:) சூரியனுக்கு நீராஜனம் செய்தாற் போலும் (ஸுதா ஸூதே:)
அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு (சந்த்ரோபல-ஜல-லவை:) சந்திர காந்தக் கல்லில்
கசியும் நீர்த்துளிகளால் (அர்க்ய-ரசனா) அர்க்கியம் அளித்தாற்போலும், (ஸ்வகீயை: அம்போபி:)
ஸமுத்திரத்திற்கு – சொந்தமான ஜலத்தாலேயே (ஸலில நிதி ஸௌஹித்யகரணம்) ஸமுத்திரத்திற்கு
தர்ப்பணம் செய்தாற் போலும் இருக்கிறது. (த்வதீயாபி:) உன்னுடையதேயான (வாக்பி:) வாக்குகளால்
அமைந்த (இயம்) இந்த (தவ) உனது (ஸ்துதி:) ஸ்தோத்திரம்.
ஸ்ரீ ஆசார்யர் எதற்கு மேலே நினைக்க முடியாதோ அந்த தத்துவத்தைச் சொன்னவர்.
அவரே இப்படி தாழ்மையோடு சொல்லியிருக்கிறார். இந்த ஒரு ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணினால்
ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலம் உண்டாகும். எப்படி? எல்லா வித்தைகளுக்கும்
பிரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. பூஜை செய்யும்
போது ஈச்வரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும்.
இதில் நீராஜனம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்த ஸ்லோகம் சொல்லுவதற்கு
இதுவும் ஒரு அடையாளம் போல இருக்கிறது. – காமகோடி சங்கரச்சாரியார்.
ஸௌந்தர்யலஹரீ
பாஷ்யம் முற்றிற்று


















