Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 96

 

ஸ்லோகம் 96

 

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி ததை: |

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே

குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: ||

 

தேவியினுடைய பாதிவ்ரத்ய மகிமை (ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்)

 

(ஸதி) பதிவிரதைகளின் தெய்வமே! (வைதாத்ரம்) பிரம்மாவினுடைய (கலத்ரம்) மனைவியை (கதி கதி) எத்தனையோ (கவய:) கவிகள் (ந பஜந்தே) நாடி அடையவில்லையா? (கை: அபி தனை:) எதோ ஒரு வகையான செல்வத்தால் (கோ வா) எவனோ ஒருவன் (ச்ரிய: தேவ்யா: பதி:) லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக (ந பவதி) ஆகி விடவில்லையா? (ஸதீனாம்) பதிவிரதைகளுக்குள் (அசரமே) முதன்மையானவளே! (மஹா தேவம்) மகாதேவனை (ஹித்வா) விட்டு (தவ) உனது (குசாப்யாம் ஆஸங்க:) நகில்களுடைய ஸம்பந்தமோ (குரவகதரோ: அபி) குரவக மரத்திற்குக் கூட (அஸுலப) கிடைத்தற்கு அரிது.

 

எவர்கள் மந்திரம், ஜபம் முதலியவைகளால் ஸரஸ்வதியை வசமாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் ஸரஸ்வதீ வல்லபர்கள் எனக் கூறப்படுகிறார்கள். எவர்கள் தனம், தானியம், குதிரை, யானை முதலிய செல்வத்தை வசமாக்கிக் கொண்டவர்களோ இவர்கள் லக்ஷ்மீபதிகள் எனக் கூறப்படுகிறார்கள். ஆனால் எவரையும் பார்வதீபதி எனக் கூறுவதில்லை. கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்லலாம். ஆனால் மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாத பரதேவதையை எங்கும் வசப்படுத்திக் கொள்ள இயலாது. அவள் பரமசிவன் ஒருவருக்கே வசப்பட்டவள்.

 

குரவகதரோ:- கர்ப்பிணீ ஸ்திரீகளுக்கு மசக்கை ஏற்படுவது போல் பூத்துக் காய்க்குமும் சில மரங்கள் அசேதனமாயினும் ஸ்திரீகளின் தழுவதலுக்கு ஏங்குவதாயும் அங்ஙனம் அவர்கள் தழுவுவதால் மகிழ்ந்து புஷ்பிப்பதாயும் கூறுவர். குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக் கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.

 

அம்பிகைக்கும், லக்ஷ்மிக்கும், ஸரஸ்வதிக்கும் எந்த ஒரு ஏற்றத் தாழ்வு கூறுவது போல் இங்கு கூறினாலும் உண்மையில் ஏற்றத் தாழ்வு இல்லை. “ஸ்ரீராமனும் பரசுராமனும் சண்டை போட்டுக் கொண்டால் வேறாகப் போய் விடுவார்களா? இரண்டு பேரும் மஹாவிஷ்ணுவின் அவதாரம் தானே? என்கிறார் காமகோடி சங்கராச்சாரியார்.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...