ஸ்லோகம் 89
நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-ஸங்கோச-சசிபி
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலானி ஸ்வ: ஸ்தேப்ய: கிஸலய-காராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ
சந்திர கிரகணம் போன்ற கால் நகங்களின் ஒளி
(ஸகல ரோக நிவ்ருத்தி)
(சண்டி) சும்ப நிசும்பர்களை ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகிய சண்டிகையே! (கிஸலய)
துளிர்களாகிற (கரோக்ரேண) கை நுனிகளால் (ஸ்வ: ஸ்தேப்ய:) ஸ்வர்க்க வாசிகளுக்கு (பலானி)
விரும்பிய பயன்களை (தததாம்) அளிக்கின்ற (திவ்யானாம்) தேவ லோகத்தில் உள்ள (தரூணாம்)
கல்பகம் முதலிய விருக்ஷங்களை (தரித்ரேப்யச்ச) ஏழை எளியவர்களுக்கும் (பத்ராம்) பரமமங்களமான
(ச்ரியம்) செல்வத்தை (அனிசம்) எந்த சமயத்திலும் (அஹ்னாய) விரைவில் (தததௌ) அளிக்கின்ற
(தே) உனது (சரணௌ) பாதங்கள் (நகை:) நகங்களால் (ஹஸத: இவ) பரிகசப்பவை போலிருக்கின்றன
– எப்படிப்பட்ட நகங்களால் என்றால் (நாக-ஸ்திரீணாம்) தேவ ஸ்திரீகளின் (கர-கமல) கைகளாகிற
தாமரைகளை (ஸங்கோச) மூடிக் கொள்ளச் செய்யும் (சசிபி:) சந்திரர்களைப் போன்ற (நகை:) நகங்களால்.
கரகமல-ஸங்கோச-சசிபி:- தேவஸ்திரீகள் தாமரை போன்ற கைகளைக் கூப்பிக் கொள்வது
சந்திரனைக் கண்டு தாமரை இதழ்கள் கூம்புவது போல் இருக்கின்றது. தேவியின் கால் நகங்களின்
ஒளி சந்திரனுடைய பிரகாசம் போலுள்ளது.

No comments:
Post a Comment