Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 46

 

ஸ்லோகம் 46

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி தவ யத்

த்விதீயம் தன்மன்யே மகுட-கடிதம் சந்த்ரசகலம்

விபர்யாஸ-ந்யாஸா-துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:

 

பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை (புத்திரப் பிராப்தி)

 

(லாவண்ய-த்யுதி-விமலம்) வெண்ணிலவு போன்ற அழகுடன் (தவ) உன்னுடைய (யத்) (லலாடம்) எந்த நெற்றியானது (ஆபாதி) பிரகாசிக்கிறதோ (தத்) அதை (மகுடகடிதம்) கிரீடத்தில் சூடிக் கொண்டிருப்பதின் (த்விதீயம்) இரண்டாவது பாகமான (சந்த்ர சகலம்) சந்திரகலையோ என்று (மன்யே) எண்ணுகிறேன். (உபயம் அபி) இரண்டும் (விபர்யாஸ-ந்யாஸாத்) திரும்பிப் பொருத்தப்பட்டால் (மித:) ஒன்றுக்கொன்று (ஸம்பூய ச) நன்றாகச் சேர்ந்து (ஸுதாலேபஸ்யூதி:) அமிருதமொழுகும் (ராகா-ஹிமகர:) பூர்ணிமா சந்திரனாக (பரிணமதி) பரிணமிக்கும்.

 

லலிதா சஹஸ்ரநாமத்தில் (அஷ்டமி-சந்த்ர-விப்ராஜ-தளிக-ஸ்தல-சோபிதாயை நம:) அரைவட்ட வடிவான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியுடையவளுக்கு நமஸ்காரம்.

 

மனதிற்குச் சந்திரன் அதிஷ்டான தேவதையானதால் தேவியின் நெற்றியைச் சந்திரகலையாகத் தியானித்தால் மனோஜயம் ஏற்படும்.  இரண்டு சந்திரகலையையும் சேர்த்துப் பூர்ண சந்திரனாக தியானிப்பவர்களுக்கு என்றும் பௌர்ணமியாகவும் விளங்கும். அபிராமி பட்டர் ஒரு தை அமாவாசையன்று சரபோஜி மன்னனிடம் அன்றைய திதி “பூர்ணிமை” எனத் தியானப் பரவசத்தில் கூறிவிட்டார். அவர் வாக்குப் பொய்க்காமல் இருக்கும்படி அன்று மாலையில் அரசனுக்கு வானத்தில் பூர்ணசந்திரன் தோன்றும்படி தேவி அருள்புரிந்த லீலை நாம் அறிந்ததே.

 


 

 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...