ஸ்லோகம் 47
ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன-பய-பங்க-வ்யஸநிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருத-குணம்|
தனுர்-மன்யே ஸவ்யேதரகர-க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முகே||
புருவங்களின் அழகு
(எல்லாக் காரியங்களிலும் ஜயம்)
(உமே) உமாதேவியே ! (புவன-பய-பங்க-வ்யஸநிதி) உலக பயத்தைப் போக்குவதில் ஊக்கமுள்ளவளே!
(கிஞ்சித் புக்னே) சற்று வளைந்த (த்வதீயே) உன்னுடைய (ப்ருவௌ) புருவங்கள் (மதுகர-ருசிப்யாம்)
வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற (நேத்ராப்யாம்) கண்களால் (த்ருத-குணம்) நாண் பூட்டியதாகவும்,
(ஸவ்ய-இதரகர-க்ருஹீதம்) கையால் பிடிக்கப்பட்டு (ப்ரகோஷ்டே) முழங்கையாலும் (முஷ்டௌ ச)
விரல் முஷ்டியாலும் (ஸ்தகயதி) மறைக்கப்பட்டதால் (நிகூடாந்தரம்) மத்தியபாகம் தெரியாததாகவும்
உள்ள (ரதிபேத:) மன்மதனுடைய (தனு) வில் என்று (மன்யே) எண்ணுகிறேன்.
குறிப்பு:
ஸவ்யம் எனும் பதம் சில இடங்களில் இடது என்ற அர்த்தத்திலும் உபயோகிக்கப்படுகிறது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஸசாமர
ரமாவாணி ஸவ்யதக்ஷிணஸேவிதா – அதாவது வில்லாகிய புருவங்களுக்கு நடுவில் இடைவெளி
இருப்பதையும், நாண் கயிறாகிய கண்களுக்கு நடுவில் மூக்கு இருப்பதையும், மன்மதன் கைப்பிடியில்
வில்லின் மத்தியபாகமும், முழங்கையில் நாணின் மத்தியபாகமும் மறைந்திருப்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரி தேவியினுடைய புருவத்தை மன்மதனுடைய வில்லாகத் தியானிப்பதால் காமஜயம் ஏற்படும்.

No comments:
Post a Comment