ஸ்லோகம் 76
ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீ-ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி
மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு (பரம வைராக்கியம், காமஜயம்)
(அசல தனயே) மலையரசன் பெண்ணே! (மனஸிஜ:) மன்மதன் (ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி:) பரமசிவனுடைய
கோபத்தினின்று தோன்றிய அக்கினி ஜ்வாலைகளால் (ஆவலீடேன) சூழப்பெற்ற (வபுஷா) சரீரமுடையவனாய்
(தே) உன்னுடைய (கபீரே) ஆழமான (நாபீஸரஸி) நாபியெனும் மடுவில் (க்ருதஸங்க:) நாட்டமுடையவனானான்
– அதில் முழுகினான். (தஸ்மாத்) அதிலிருந்து (தூமலதிகா) கொடி போன்ற புகை (ஸமுத்தஸ்தௌ)
கிளம்பிற்று. (ஜனனி) தாயே! (தாம்) அதை (ஜன:) ஜனங்கள் (தவ) உன்னுடைய (ரோமாவளி:) நாபியில்
இருந்து மெல்லிதாய் மேலே படரும் – ரோமவரிசை (இதி) என்று (ஜானீதே) கருதுகிறார்கள்.
மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்குக் காம விகாரத்தை உண்டு பண்ணக் கூடிய அழகுடன்
கூடியது தேவியின் நாபி என்பது கருத்து.

No comments:
Post a Comment