Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 85

 

ஸ்லோகம் 85

 

நமோ வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ:

தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே |

அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே

பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே

 

பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்

(பிசாச பய நிவிருத்தி)

 

(நயன-ரமணீயாய) கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாயும்(ஸ்புட-ருசி) பிரகாசம் மிக்கதாயும் (ரஸாலக்தகவதே) உலராத செம்பஞ்சுக் குழம்புடன் கூடியதாயும் உள்ள (தவ பதயோ:) உன்னுடைய பாதங்கள் (அஸ்மை த்வந்த்வாய) இவ்விரண்டிற்கும் (நமோ வாகம்) நமஸ்கார வார்த்தையை (ப்ரூம்) சொல்லுகிறோம். (யத் அபிஹனனாய) அந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதை (ஸ்ப்ருஹயதே) விரும்புகிற (ப்ரமதவன) நந்தவனத்தில் உள்ள (கங்கேலி தரவே) அசோக மரத்தினிடம் (பசூனாம் ஈசான)பசுபதியானவர் (அத்யந்தம்) மிகவும் (அஸூயதி) பொறாமைப்படுகிறார்.

 

கங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிகப்புப் புஷ்பங்களை உடையது. அது புஷ்பிக்காதபோது உத்தம ஸ்திரீகளின் பாதஸ்பர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை.

 

தேவி உத்யான வனத்தில் உலவும் போது அவளுடைய பாதம்படுவதற்கு அசோகமரம் ஆசை கொண்டிருப்பதாகவும் அதை எண்ணிப் பரமசிவன் பொறாமைப்படுவதாயும் இந்த ஸ்லோகம் கூறுகிறது. தேவியின் பாத ஸ்பர்சத்தால் அசோக மரம் மலர்வது போல் தானும் மகிழ்ச்சி பொங்கப் பரமசிவன் விரும்புகிறார். அப்பேர்ப்பட்ட பாதங்களை அணுகி வணங்குவது அரிதினும் அரிதாகையால் அவைகட்கு வாக்கினால் நமஸ்கார கூறுவதே பெரும் பாக்கியம்.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...