ஸ்லோகம் 75
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத-மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா-மஜனி மகனீய:கவயிதா
முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம் (கவிபாடும் திறமை)
(தரணிதர-கன்யே) மலையரசன் பெண்ணே (தவ) உன்னுடைய (ஸ்தன்யம்) முலைப்பால் (ஹிருதயத:)
இருதயத்தில் இருந்து உதித்த (பய:பாராவார:) அமிருதப் பிரவாகம் போலும் (ஸாரஸ்வதம் இவ)
வாக்தேவதையான ஸரஸ்வதியே அந்த உருவம் கொண்டு வந்தாற் போலும் (ப்ரவஹதி) பெருகுகிறது என்று
(மன்யே) கருதுகிறேன். (யத்) ஏனென்றால் (தயாவத்யா) கருணை ததும்பும் உன்னால் (தத்தம்)
அளிக்கப்பட்ட (தவ) உன்னுடைய (ஸ்தன்யம்) பாலை(ஆஸ்வாத்ய) அருந்தி (த்ராவிட சிசு) திராவிடக்
குழந்தை (ப்ரௌடானாம் கவீனாம்) தலை சிறந்த கவிகளுக்குள் (கமனீயா) மனதைக் கவரும் (கவயிதா)
கவிஞனாக (அஜனி) ஆகிவிட்டான் அன்றோ!
பய: பாராவார – க்ஷீரஸமுத்ர:
ஸாரஸ்வதம்: ஸரஸ்வதி: மயமிவ| ஸ்தன்யஸ்ய ஸ்வேதவர்ணத்வாத் ஸரஸ்வதீ-மயத்வேன
உத்ப்ரேக்ஷணம்| மாதுர்யாத் ஸுதா ரூபத்வேன ச|
த்ரவிட சிசு – (த்ரவிடஜாதி) ஸமுத்பவ: பால: ஏதத் ஸ்தோத்ர-கர்த்தா|) திரவிட
ஜாதியில் பிறந்த பாலனாகிய இந்த ஸ்தோத்திர கர்த்தா அதாவது சங்கராசாரியர்.
விந்தியமலைக்கு வடக்கே பஞ்ச கௌடர்கள்; தெற்கே பஞ்ச திராவிடர்கள். அது புராதன
விபாகம். (1) காஷ்மீரில் ஸாரஸ்வதர் (2) பஞ்சாபில் கான்யகுப்ஜர் (3) வங்காளத்தில் முக்ய
கௌடர் (4) ஒரிஸ்ஸாவில் உத்கலர் (5) நேபாளத்திலும் பீஹாரிலும் மைதிலர் (மிச்ரர் என பட்டமுள்ளவர்கள்)
ஆகப் பஞ்ச கௌடர்கள்.
தெற்கே (1) ஆந்திரர் (2) கர்நாடகர் (3) மஹாராஷ்டிரர் (4) கூர்ஜரர் (5) தமிழர்
(முக்யதிராவிடர்) ஆகப் பஞ்ச திராவிடர்கள்.
ஸ்ரீசங்கரருடைய பரமகுரு கௌடர், சங்கரர் திராவிடர். சங்கரர் சிறு குழந்தையாயிருக்கையில்
ஒரு சமயம் தாயும் தந்தையும் வீட்டில் இல்லாதபொழுது அழுது கொண்டிருந்ததால் பார்வதியே
வந்து பால் கொடுத்து தேற்றியதாக ஒரு வரலாறு உண்டு. ஆனால் சங்கரர் தன்னைப் பற்றியே
‘தலை சிறந்த கவிகளுக்குள் மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான்’ என்று கூறிக் கொள்வாரா
என்பது சந்தேகம். ‘திரவிட சிசு’ என்பது திருஞான சம்பந்தரைக் குறிக்கும் என்று காமகோடி
ஆசாரியாரும் பிறரும் கூறுகிறார்கள். பார்வதி அவருக்கு பால் கொடுத்து மறைந்தபின் வாயில்
பாலின் அடையாளத்தைப் பார்த்துத் தாய் தந்தையர் யார் பால் கொடுத்தார்கள் என்று கேட்க
‘தோடுடைய செவியன்’ என்று அவர் பாடிய வரலாறு இதற்கு ஆதாரம். இது பொருத்தமாய்த் தோன்றுகிறது.
அப்போது ஞானசம்பந்தர் காலம் சங்கரர் காலத்திற்கு முந்தியதாகும். சௌந்தர்யலஹரியைத் தமிழில்
பாடிய வரப்பிரஸாதியான கவிராஜ பண்டிதரும் ‘வருண நன்குறு கவுணியன் சிறுமதலை யம்புயல்
பருகியே’ என்று பிராம்மண வருணத்தில் கவுணிய அல்லது கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த
ஞானசம்பந்தர் எனத்தான் பொருள் கொண்டு பாடுகிறார்.

No comments:
Post a Comment