ஸ்லோகம் 50
கவினாம் ஸந்தர்ப்ப-ஸ்தபக-மகரந்தை க-ரஸிகம்
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமர-கலபௌ கர்ணயுகலம் |
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ
அஸூயா-ஸம்ஸர்க்கா-தலிகநயனம் கிஞ்சிதருணம் ||
மூன்றாவது கண்
(தூரதர்சனம், வைசூரி நோய் நிவாரணம்)
(கவினாம்)கவிகளுடைய (ஸந்தர்ப்ப-ஸ்தபக) பாடல்களாகிய பூங்கொத்தின் (மகரந்த-ஏக-ரஸிகம்)
மகரந்தத்தைப் பருகுவதிலேயே முக்கியமாக ஆசைவைத்த (தவ) உன்னுடைய(கர்ண-யுகலம்) இரண்டு
காதுகளையும்(அமுஞ்சந்தௌ) விடாமலிருக்கும்(ஆஸ்வாத-தரலௌ) நவரஸங்களையும் அனுபவிக்க ஆசைகொண்ட
(கடாக்ஷவ்யாக்ஷேப-ப்ரமர-கலபௌ) குட்டி வண்டுகள்
போன்ற கடைக்கண்களை (த்ருஷ்ட்வா) பார்த்து (அஸுயா-ஸம்ஸர்க்காத்) பொறாமையினால் (அலிக
நயனம்) உன்னுடைய நெற்றிக் கண்ணானது (கிஞ்சித்) சிறிது (அருணம்) சிவந்திருக்கிறது போலும்.
காதுகளின் வழியாகத் துதிவடிவான கவிதைகளின் நவரஸமும் தேன்போல் பாய்வதால்
அதை பருக விரும்பிய வண்டுகளைப் போல் தேவியின் இருகண்கள் காதுவரை அகன்று காணப்படுகின்றன.
அவற்றினிடம் பொறாமையால் சிவந்தாற்போலுள்ளது நெற்றிக்கண். இவ்வாறு தேவியை தியானிப்பதால்
தூரதர்சன சித்தி ஏற்படும்.

No comments:
Post a Comment