Monday, August 31, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் ஐந்து

 

ஸ்லோகம் ஐந்து

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன-ஸௌபாக்ய-ஜனனீம்

புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்|

ஸ்மரோSபி த்வாம் நத்வா ரதி-நயன-லேஹ்யேன வபுஷா

முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்!!


தேவி பூஜையின் மகிமை (ஸ்த்ரீ புருஷ வசியம்)

(ப்ரணத-ஜன-ஸௌபாக்ய-ஜனனீம்) வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸௌபாக்கியத்தையும் தோற்றுவிக்கும் (த்வாம்) உன்னை (ஹரி:) விஷ்ணு (ஆராத்ய) பூஜித்து (புரா) முன்னொரு சமயம் (நாரீ பூத்வா) பெண் வடிவு கொண்டு (புரரிபும் அபி) முப்புரமெரித்த பரமசிவனையுங்கூட (க்ஷோபம்) மனது சலிக்கும்படி (அனயத்) கவர்ந்தார். (ஸ்மர: அபி ) மன்மதனும் (த்வாம்) உன்னை (நத்வா) வணங்கி (ரதி-நயன-லேஹ்யேன-வபுஷா) ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங்கொண்டு (மஹதாம்) மகான்களான (முனீனாம் அபி) முனிவர்களுக்குங்கூட (அந்த:) அந்தரங்கத்தில் (மோஹாய) மதிமயக்கம் உண்டாகும்படி (ப்ரபவதி ஹி) சக்தியுள்ளவனாகிறான் என்பது நிச்சயம்.

ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனனீம் – தேவியை ஆராதித்தவர்களில் தலை சிறந்தவர்களாக மகேஸ்வரர், மாதவர், பிரம்மா, மன்மதன், ஸ்கந்தர், நந்திகேசுவரர், இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாஸர் எனப் பன்னிருவர் கூறப்படுவர். தேவியை ஆராதித்த பெருமையால் தேவியே போன்று எல்லோருடைய மனதையும் கவரும் மோகினி வடிவத்தை விஷ்ணு எடுத்துக் கொண்டு பாற்கடல் கடைந்த பின் அமுதத்தைப் பங்கிடும் போது அசுரர்களை மயக்கினார். அந்த மோகினி வடிவத்தைக் காணப் பரமசிவன் விரும்பவே மீண்டும் ஒரு முறை அவருக்காக அந்த உருவத்தைக் காட்டினார். அப்போது தன்னையும் மறந்த பரமசிவன் மோகினியைத் தொடர்ந்தோடித் தழுவிக் கொண்டார் என்று பாகவத புராணமும் மற்ற புராணங்களும் கூறுகின்றன.


சௌந்தர்யலஹரி ஸ்லோகம் நான்கு

 

ஸ்லோகம் நான்கு

த்வ-தன்ய பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:

த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா!

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்

சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ!!

பாதகமலங்களின் நிகரற்ற சக்தி (ஸகல பய நிவருத்தி, ரோக நிவருத்தி)

(லோகானாம் சரண்யே) உலகத்திற்குப் புகலிடமே! (த்வ-தன்ய) உனக்கு வேறான (தைவதகண:) தேவக்கூட்டங்கள் (பாணிப்யாம்) கைகளால் (அபயவரத) அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாய்க் காட்டுகிறவர்கள் (த்வம் ஏகா) நீ ஒருத்தி மட்டும் (ப்ரகடித-வர-அபீதி-அபிநயா) அபிநயத்தால் வரத்தையும் அபயத்தையும் பிரகடனம் செய்பவளாக (ந ஏவ அஸி) இருப்பதே இல்லை. (ஹி) ஏனென்றால் (ப்யாத்) பயத்திலிருந்து (த்ராதும்) காப்பாற்றவும் (வாஞ்சா-ஸமதிகம்) வேண்டியதற்கு அதிகமாகவே (பலம்) பயனை (தாதும் அபி ச) அளிப்பதற்குங்கூட (தவ) உன்னுடைய (சரணௌ ஏவ) திருவடிகளே (நிபுணௌ ஹி) திறமையுடைவைகள் அன்றோ?

அபயவரத – ஸம்ஸார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையானது தூக்கிய வலது கையில் தேவதைகளின் பிம்பங்களில் ஸாதாரணமாய்க் காணப்படுவது. உலக இன்பங்களை வேண்டுபவர்களுக்கு அளிக்கும் வர முத்திரை திருவடிகளைக் காட்டித் தாழ்த்திய இடது கையில் காணப்படுகிறது. ஆனால் த்ரிபுரஸுந்தரி தனது கரங்களில் பாசம் அங்குசம் புஷ்பபாணம் கரும்புவில் ஆகியவற்றைத் தரிப்பதால் அபயவரத சக்திகள் அந்த வடிவில் அம்பாளுடைய கைகளால் பிரகடனப்படுத்தப்படாமல் பாதங்களில் அடங்கியிருப்பதாய் தியானிக்கப்படுகிறது. அபயவரமளிக்கும் பிற தெய்வங்களும் தேவியின் பாதகமலங்களைப் பூஜிக்கின்றனர்.

அம்பிகையின் கடாக்ஷத்தைப் பெற்றுவிட்டவர்களுக்கு வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத நிலை கிட்டுகிறது. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்ப்பார்கள்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் மூன்று

 

ஸ்லோகம் மூன்று

அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ

ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ!

த்ரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜனமஜலதௌ

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி!!

பாததூளி முக்தியளிப்பது (ஸர்வ-வித்யா-ப்ராப்தி)

உன்னுடைய பாததூளி -  (அவித்யானாம்) அவித்தை குடிகொண்ட உள்ளத்தினர்க்கு (அந்தஸ்-திமிர-மிஹிர-த்வீப-நகரீ) அகத்தினுடைய இருளைப் போக்கும் சூரியனுடைய உதயத்தீவின் நகரம் போலும் (ஜடானாம்) அவிவேகிகளுக்கு (சைதன்ய-ஸ்தப-மகரந்த-ஸ்ருதீஜரீ) ஆத்மஞானமாகிய கற்பக விருக்ஷத்தின் பூங்கொத்திலிருந்து பரவிச்செல்லும் மகரந்தம் போலும் (தரித்ராணாம்) ஏழைகளுக்கு (சிந்தாமணி-குணநிகா) நினைத்ததை அளிக்கக் கூடிய சிந்தாமணிக் குவியலாயும், (ஜன்ம-ஜலதௌ) பிறவிக்கடலில் (நிமக்னானாம்) மூழ்கியவர்களுக்கு (முரரிபு-வராஹஸ்ய) ஆதிவராகமாக அவதரித்து பூதேவியைத் தூக்கிய முராரியின் தம்ஷ்ட்ரா கோரைப் பற்கள் போலும் (பவதி) விளங்குகிறது.

சிந்தாமணி – சிந்தாமணி என்னும் ரத்னம் சிந்தித்ததையெல்லாம் அளிக்க வல்லது. அம்பாளுடைய வாசஸ்தானத்திற்குச் சிந்தாமணி க்ருஹம் என்று பெயர். அம்பாளுடைய (ஹ்ரீம்) மாயா பீஜத்திற்கு சிந்தாமணிபீஜம் என்று பெயர்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 2

 

ஸ்லோகம் இரண்டு

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்

விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்!

வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்

ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்!!

 

பாததூளி மகிமை (ஸர்வலோக வசியம்)

(விரிஞ்சி:) பிரம்மா (தவ) உன்னுடைய (சரண-பங்கேருஹ-பவம்) திருவடித்தாமரைகளிலுள்ள (தனீயாம்ஸம்) மிக நுட்பமான (பாம்ஸும்) தூளை (ஸஞ்சின்வன்) ஸம்பாதித்து (லோகான்) உலகங்களை (அவிகலம்) முட்டின்றி (விரசயதி) சிருஷ்டிக்கிறார். (சௌரி:) ஆதிசேஷன் (ஸிரஸாம் ஸஹரேண) ஆயிரம் தலைகளால் (ஏனம்) இவ்வுலகவடிவான பாததூளியை (கதம்பி) எப்படியோ (வஹதி) தாங்குகிறார். (ஹர:) ருத்திரன் (ஏனம்) இதை (ஸம்க்ஷுத்ய) நன்றாக பொடியாக்கி (பஸித-உத்தூளன-விதிம்) விபூதி பூசிக்கொள்ளும் முறையை (பஜதி) அனுஷ்டிக்கிறார்.

பாததூளி பூஜை – ஒரு பௌர்ணமியில் ஸுவாஸினியைப் பூஜைக்கு அழைக்கும் போது நதிமணலை வஸ்த்ரகாயம் செய்து வழியில் இறைத்து அதன்மேல் அடிவைத்து வரச்செய்து பூஜை முடிந்தபின் அம்மணலை தேவியின் பாததூளியாகக் கருதி ஒரு சிறு பெட்டியில் சேகரித்து வைத்துக் கொண்டு காலை மாலைகளில் பூஜிக்க வேண்டும். காலை பூஜைக்குப் பின் “தநீயாம்ஸம் பாம்ஸும்” என்ற ஸ்லோகத்தை ஆயிரம் முறை ஜபம் செய்ய வேண்டும். மாலை பூஜைக்குப் பின் ‘அவித்யானாம் அந்தஸ்திமிர மிஹிர த்வீபநபகரீ” (மூன்றாவது ஸ்லோகம்) ஸ்லோகத்தை ஆயிரம் முறை ஜபம் செய்ய வேண்டும். இவ்விதம் வஸந்த ருதுவிலோ சரத் ருதுவிலோ ஒரு மண்டலம் நியமத்துடன் பூஜையும் ஜபமும் செய்து முடிவில் ஒன்பது ஸுவாஸினிகளை அழைத்து போஜனம், வஸ்திரம், ஆபரணம், தக்ஷிணை முதலியவை அளித்து விரதத்தைப் பூர்த்தி செய்தால், அப்படி செய்பவர் அஷ்ட ஐஸ்வர்ய ஸம்பன்னராவார்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...