ஸ்லோகம் மூன்று
அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ!
த்ரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜனமஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி!!
பாததூளி முக்தியளிப்பது (ஸர்வ-வித்யா-ப்ராப்தி)
உன்னுடைய பாததூளி - (அவித்யானாம்)
அவித்தை குடிகொண்ட உள்ளத்தினர்க்கு (அந்தஸ்-திமிர-மிஹிர-த்வீப-நகரீ) அகத்தினுடைய இருளைப்
போக்கும் சூரியனுடைய உதயத்தீவின் நகரம் போலும் (ஜடானாம்) அவிவேகிகளுக்கு (சைதன்ய-ஸ்தப-மகரந்த-ஸ்ருதீஜரீ)
ஆத்மஞானமாகிய கற்பக விருக்ஷத்தின் பூங்கொத்திலிருந்து பரவிச்செல்லும் மகரந்தம் போலும்
(தரித்ராணாம்) ஏழைகளுக்கு (சிந்தாமணி-குணநிகா) நினைத்ததை அளிக்கக் கூடிய சிந்தாமணிக்
குவியலாயும், (ஜன்ம-ஜலதௌ) பிறவிக்கடலில் (நிமக்னானாம்) மூழ்கியவர்களுக்கு (முரரிபு-வராஹஸ்ய)
ஆதிவராகமாக அவதரித்து பூதேவியைத் தூக்கிய முராரியின் தம்ஷ்ட்ரா கோரைப் பற்கள் போலும்
(பவதி) விளங்குகிறது.
சிந்தாமணி – சிந்தாமணி என்னும் ரத்னம் சிந்தித்ததையெல்லாம் அளிக்க வல்லது.
அம்பாளுடைய வாசஸ்தானத்திற்குச் சிந்தாமணி க்ருஹம் என்று பெயர். அம்பாளுடைய (ஹ்ரீம்)
மாயா பீஜத்திற்கு சிந்தாமணிபீஜம் என்று பெயர்.

No comments:
Post a Comment