ஸ்லோகம் நான்கு
த்வ-தன்ய பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா!
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ!!
பாதகமலங்களின் நிகரற்ற சக்தி (ஸகல பய நிவருத்தி, ரோக நிவருத்தி)
(லோகானாம் சரண்யே) உலகத்திற்குப் புகலிடமே! (த்வ-தன்ய) உனக்கு வேறான (தைவதகண:)
தேவக்கூட்டங்கள் (பாணிப்யாம்) கைகளால் (அபயவரத) அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாய்க்
காட்டுகிறவர்கள் (த்வம் ஏகா) நீ ஒருத்தி மட்டும் (ப்ரகடித-வர-அபீதி-அபிநயா) அபிநயத்தால்
வரத்தையும் அபயத்தையும் பிரகடனம் செய்பவளாக (ந ஏவ அஸி) இருப்பதே இல்லை. (ஹி) ஏனென்றால்
(ப்யாத்) பயத்திலிருந்து (த்ராதும்) காப்பாற்றவும் (வாஞ்சா-ஸமதிகம்) வேண்டியதற்கு அதிகமாகவே
(பலம்) பயனை (தாதும் அபி ச) அளிப்பதற்குங்கூட (தவ) உன்னுடைய (சரணௌ ஏவ) திருவடிகளே
(நிபுணௌ ஹி) திறமையுடைவைகள் அன்றோ?
அபயவரத – ஸம்ஸார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையானது
தூக்கிய வலது கையில் தேவதைகளின் பிம்பங்களில் ஸாதாரணமாய்க் காணப்படுவது. உலக இன்பங்களை
வேண்டுபவர்களுக்கு அளிக்கும் வர முத்திரை திருவடிகளைக் காட்டித் தாழ்த்திய இடது கையில்
காணப்படுகிறது. ஆனால் த்ரிபுரஸுந்தரி தனது கரங்களில் பாசம் அங்குசம் புஷ்பபாணம் கரும்புவில்
ஆகியவற்றைத் தரிப்பதால் அபயவரத சக்திகள் அந்த வடிவில் அம்பாளுடைய கைகளால் பிரகடனப்படுத்தப்படாமல்
பாதங்களில் அடங்கியிருப்பதாய் தியானிக்கப்படுகிறது. அபயவரமளிக்கும் பிற தெய்வங்களும்
தேவியின் பாதகமலங்களைப் பூஜிக்கின்றனர்.
அம்பிகையின் கடாக்ஷத்தைப் பெற்றுவிட்டவர்களுக்கு வேண்டுதலும் வேண்டாமையும்
இல்லாத நிலை கிட்டுகிறது. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்ப்பார்கள்.

No comments:
Post a Comment