Monday, August 31, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 2

 

ஸ்லோகம் இரண்டு

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்

விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்!

வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்

ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்!!

 

பாததூளி மகிமை (ஸர்வலோக வசியம்)

(விரிஞ்சி:) பிரம்மா (தவ) உன்னுடைய (சரண-பங்கேருஹ-பவம்) திருவடித்தாமரைகளிலுள்ள (தனீயாம்ஸம்) மிக நுட்பமான (பாம்ஸும்) தூளை (ஸஞ்சின்வன்) ஸம்பாதித்து (லோகான்) உலகங்களை (அவிகலம்) முட்டின்றி (விரசயதி) சிருஷ்டிக்கிறார். (சௌரி:) ஆதிசேஷன் (ஸிரஸாம் ஸஹரேண) ஆயிரம் தலைகளால் (ஏனம்) இவ்வுலகவடிவான பாததூளியை (கதம்பி) எப்படியோ (வஹதி) தாங்குகிறார். (ஹர:) ருத்திரன் (ஏனம்) இதை (ஸம்க்ஷுத்ய) நன்றாக பொடியாக்கி (பஸித-உத்தூளன-விதிம்) விபூதி பூசிக்கொள்ளும் முறையை (பஜதி) அனுஷ்டிக்கிறார்.

பாததூளி பூஜை – ஒரு பௌர்ணமியில் ஸுவாஸினியைப் பூஜைக்கு அழைக்கும் போது நதிமணலை வஸ்த்ரகாயம் செய்து வழியில் இறைத்து அதன்மேல் அடிவைத்து வரச்செய்து பூஜை முடிந்தபின் அம்மணலை தேவியின் பாததூளியாகக் கருதி ஒரு சிறு பெட்டியில் சேகரித்து வைத்துக் கொண்டு காலை மாலைகளில் பூஜிக்க வேண்டும். காலை பூஜைக்குப் பின் “தநீயாம்ஸம் பாம்ஸும்” என்ற ஸ்லோகத்தை ஆயிரம் முறை ஜபம் செய்ய வேண்டும். மாலை பூஜைக்குப் பின் ‘அவித்யானாம் அந்தஸ்திமிர மிஹிர த்வீபநபகரீ” (மூன்றாவது ஸ்லோகம்) ஸ்லோகத்தை ஆயிரம் முறை ஜபம் செய்ய வேண்டும். இவ்விதம் வஸந்த ருதுவிலோ சரத் ருதுவிலோ ஒரு மண்டலம் நியமத்துடன் பூஜையும் ஜபமும் செய்து முடிவில் ஒன்பது ஸுவாஸினிகளை அழைத்து போஜனம், வஸ்திரம், ஆபரணம், தக்ஷிணை முதலியவை அளித்து விரதத்தைப் பூர்த்தி செய்தால், அப்படி செய்பவர் அஷ்ட ஐஸ்வர்ய ஸம்பன்னராவார்.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...