Saturday, August 29, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் ஒன்று

 


முதல் ஸ்லோகம்

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி |

அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய: ப்ரபவதி ||

 

பராசக்தியின் ஏற்றம், அவளை வழிபடப் பூர்வ புண்ணியம் வேண்டும். (ஸர்வ விக்ன நாசமும், ஸகல கார்ய ஸித்தியும் இந்த ஸ்லோகத்தை மந்திரமாக ஜபிப்பதால் ஏற்படும்)

 (சிவ:) மங்களமூர்த்தியான (தேவ:) மகாதேவன் (சக்த்யா) பராசக்தியாகிய உன்னுடன் (யுக்த:) கூடியவராக (பவதி யதி) இருந்தால் மட்டும் (ப்ரபவிதும்) பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு (சக்த:) திறமையுடையவர். (ஏவம்) அவ்வாறு (ந சேத்) கூடியில்லாவிட்டால் (ஸ்பந்திதும் அபி) அசைவதற்குக் கூட (குசல:) திறமையுடையவராக (ந கலு) ஆவதில்லையன்றோ? (அத:) ஆகையால் (ஹரி-ஹர-விரிஞ்சாதிபி: அபி) விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் (ஆராத்யம்) பூஜித்தற்குரிய (த்வாம்) உன்னை (அக்ருத புண்ய:) புண்ணியம் செய்யாதவன் (ப்ரணந்தும்) வணங்குவதற்கோ (ஸ்தோதும் வா)  அல்லது துதிப்பதற்கோ எங்ஙனம் தகுதியுடையவனாவான்?

 ஸாக்ஷியான இந்த சக்தி சங்கரனுக்கும் மங்களத்தை செய்பவள். சிவனை விட்டுப் பிரியாதவள். அவளைப் பிரிந்தால் சிவன் பயனற்றவனாவான்.

 பராசக்தியை வழிபடவேண்டுமென்றோ சௌந்தர்யலஹரீ போன்ற ஸ்தோத்திரங்களால் அவளைத் துதிக்க வேண்டுமென்றோ ஆசை ஏற்படுவதே பூர்வ புண்ணியத்தின் பயன் என்று அறிய வேண்டும்.




No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...