Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

 

ஸ்லோகம் 100

 

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி:

ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர்-வாக்பிஸ்-தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்

|| இதி ஸ்ரீ சங்கராசார்ய-விரசிதா ஸௌந்தர்யலஹரீ ஸமாப்தா||

 

தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது சூரியனுக்கு அவன் கிரணத்தக்கினியால் தீபாராதனை செய்தது போலாம் (ஸகலஸித்தி)

 

(வாசாம்) வாக்கிற்கு (ஜனனீ) பிறப்பிடமாகிய தாயே! (ப்ரதீப-ஜ்வாலாபி:) கற்பூரதீப ஜ்வாலையால் (திவஸகர-நீராஜன-விதி:) சூரியனுக்கு நீராஜனம் செய்தாற் போலும் (ஸுதா ஸூதே:) அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு (சந்த்ரோபல-ஜல-லவை:) சந்திர காந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் (அர்க்ய-ரசனா) அர்க்கியம் அளித்தாற்போலும், (ஸ்வகீயை: அம்போபி:) ஸமுத்திரத்திற்கு – சொந்தமான ஜலத்தாலேயே (ஸலில நிதி ஸௌஹித்யகரணம்) ஸமுத்திரத்திற்கு தர்ப்பணம் செய்தாற் போலும் இருக்கிறது. (த்வதீயாபி:) உன்னுடையதேயான (வாக்பி:) வாக்குகளால் அமைந்த (இயம்) இந்த (தவ) உனது (ஸ்துதி:) ஸ்தோத்திரம்.

 

ஸ்ரீ ஆசார்யர் எதற்கு மேலே நினைக்க முடியாதோ அந்த தத்துவத்தைச் சொன்னவர். அவரே இப்படி தாழ்மையோடு சொல்லியிருக்கிறார். இந்த ஒரு ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலம் உண்டாகும். எப்படி? எல்லா வித்தைகளுக்கும் பிரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. பூஜை செய்யும் போது ஈச்வரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும். இதில் நீராஜனம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்த ஸ்லோகம் சொல்லுவதற்கு இதுவும் ஒரு அடையாளம் போல இருக்கிறது. – காமகோடி சங்கரச்சாரியார்.

 


ஸௌந்தர்யலஹரீ பாஷ்யம் முற்றிற்று

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 99

 

ஸ்லோகம் 99

 

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவிரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பசுபாச-வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜநவான்

 

தேவியை வழிபடுபவன் கல்வி செல்வம் அழகு ஆயுள் இவையனைத்தும் நிரம்பியனாவான் (பேரின்பம்)

 

(த்வத் பஜனவான்) உன்னைப் பூஜிப்பவன் (விதி-ஹரி-ஸபத்ன) பிரம்மாவும் விஷ்ணுவுங்கூடப் பொறாமைப் படக் கூடியவனாய் (ஸரஸ்வ்த்யா) கல்வியுடனும் (லக்ஷ்ம்யா) செல்வத்துடனும் (விஹரதே) இன்பத்தை எய்துகிறான். (ரம்யேண வபுஷா) மன்மதன் போன்ற உடல் அழகால் (ரதே:) ரதி தேவியின் (பாதிவ்ரத்யம்) கற்பையும் (சிதிலயதி) கலங்கச் செய்கிறான். (க்ஷபித-பசு-பாச-வ்யதிகர:) பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாய் (பரானந்த-அபிக்யம்) பேரானந்தம் எனப் பிரசித்தி பெற்ற (ரஸம்) இன்பரஸத்தை (ஸிரம் ஜீவன்னேவ) சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டு (ரஸயதி) அனுபவிக்கிறான்.

 

அம்பாளுடைய பரிபூர்ண கடாக்ஷத்தால் ஒப்புயர்வற்ற கல்வி, செல்வம், அழகு ஆகிய மூன்றும் பக்தனுக்கு ஏற்படுவது இங்கு வர்ணிக்கப்படுவது.

 

முதலில் ஸரஸ்வதி என்று இந்த ஸ்லோகம் ஆரம்பித்து இருக்கிறது. அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. எதைக் கொடுத்துப் பின் பணத்தைக் கொடுத்தால் பணம் வீண் போகாதோ அதை முன்பு தேவி கொடுப்பாள். ஏகாந்த பக்தி அம்பிகையிடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும். நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு? பிரம்மா வீட்டில் அது ஸம்பூரணமாக இருக்கிறது. அம்பிகையின் உபாஸகனுக்கு அதை விட அதிகமாக உண்டாகும். அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும். இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும்.  – காமகோடி சங்கராச்சாரியார்.


 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 98

 

ஸ்லோகம் 98

 

கதா காலே மாதா: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன-ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாபி ச கவிதா-காரணதயா

கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-ரஸ்தாம்

 

பாததீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும் (வாக்ஸித்தி)

 

(மாத:) தாயே! (கலித-அலக்தக-ரஸம்) லாக்ஷாரஸப் பூச்சுடன் கலந்து வரும் (தவ) உன்னுடைய (சரண-நிர்ணே ஜன-ஜலம்) பாதப் பிரக்ஷாளன தீர்த்தத்தை (வித்யார்த்தீ) பிரம்ம வித்தையை நாடும் நான் (கதா காலே) எந்தக் காலத்தில் (பிபேயம்) பருகப் போகிறேன்? (கதய) கூறியருளுங்கள். (ப்ரக்ருத்யா) இயற்கையாகவே (மூகானாம் அபி) ஊமைகளுக்குங்கூட (கவிதா-காரணதயா) கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் (வாணீ-முக கமல-தாம்பூல ரஸதாம்) ஸரஸ்வதியின் வாயிலுள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை (கதா) எப்போது (தத்தே) என் வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது.



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 97

 

ஸ்லோகம் 97

 

கிராமாஹுர்-தேவிம் த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி

 

பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும் (ஜீவன்முக்தி)

 

(பரப்ரஹ்ம மஹிஷி!) பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே (ஆகம-வித:) வேதத்தை அறிந்தவர்கள் (த்வாம் ஏவ) உன்னையே (த்ருஹிண க்ருஹிணீம்) பிரம்மாவின் பத்தினியான (கிராம் தேவீம்) வாக் தேவதையாக (ஆஹு:) கூறுகிறார்கள். (த்வாம் ஏவ) உன்னையே (ஹரே:) ஹரியினுடைய (பத்னீம்) பத்தினியான (பத்மாம்) லக்ஷ்மியாகவும், (ஹர-ஸஹசரீம்) சிவனுடைய பத்தினியான (அத்ரி-தனயாம்) பார்வதியாகவும் – (ஆஹு:) கூறுகிறார்கள். (த்வம்) நீயே (துரீயா) இம் மூவருக்கும் அப்பாற்பட்டவனாய் (கா அபி) இத்தகையவள் என்று கூற முடியாதவளாய் (துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா) அடைதற்கரியதும் எல்லையில்லாததுமான மகிமையுடையவளாய் (மஹா மாயா) மகா மாயை எனப்பட்டவளாய் (விச்வம்) உலகனைத்தையும் (ப்ரமயஸி) ஆட்டி வைக்கிறாய்.

 

துரியா காபி த்வம்:-

 

உன்னுடைய மகிமையை மனதினால் யோசனை பண்ணுவதற்கு கூட முடியாது. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கிருத்தியத்திற்காக மும்மூர்த்திகளை உண்டு பண்ணி விட்டு இந்த காரியத்திற்கும் மேலாக, அதிதேவதையாக இருப்பது உன்னுடைய ஸ்வரூபம். மூன்றுக்கும் மேலாக நான்காவதாக இருக்கிறவள் நீ தான். கிட்டத்தட்ட நாமம் ரூபம் எல்லாம் மூன்றாவதற்கும் நான்காவதற்கும் ஒன்றாகவே சொல்கிறோம். காமேசுவரனுடைய சக்தியாகிய காமேஸ்வரிக்கும் தூக்கத்திற்கு அதிஷ்டானமான பார்வதிக்கும் பொருத்தம் அதிகம். – காமகோடி சங்கரசாரியார்.


சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 96

 

ஸ்லோகம் 96

 

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி ததை: |

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே

குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: ||

 

தேவியினுடைய பாதிவ்ரத்ய மகிமை (ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்)

 

(ஸதி) பதிவிரதைகளின் தெய்வமே! (வைதாத்ரம்) பிரம்மாவினுடைய (கலத்ரம்) மனைவியை (கதி கதி) எத்தனையோ (கவய:) கவிகள் (ந பஜந்தே) நாடி அடையவில்லையா? (கை: அபி தனை:) எதோ ஒரு வகையான செல்வத்தால் (கோ வா) எவனோ ஒருவன் (ச்ரிய: தேவ்யா: பதி:) லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக (ந பவதி) ஆகி விடவில்லையா? (ஸதீனாம்) பதிவிரதைகளுக்குள் (அசரமே) முதன்மையானவளே! (மஹா தேவம்) மகாதேவனை (ஹித்வா) விட்டு (தவ) உனது (குசாப்யாம் ஆஸங்க:) நகில்களுடைய ஸம்பந்தமோ (குரவகதரோ: அபி) குரவக மரத்திற்குக் கூட (அஸுலப) கிடைத்தற்கு அரிது.

 

எவர்கள் மந்திரம், ஜபம் முதலியவைகளால் ஸரஸ்வதியை வசமாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் ஸரஸ்வதீ வல்லபர்கள் எனக் கூறப்படுகிறார்கள். எவர்கள் தனம், தானியம், குதிரை, யானை முதலிய செல்வத்தை வசமாக்கிக் கொண்டவர்களோ இவர்கள் லக்ஷ்மீபதிகள் எனக் கூறப்படுகிறார்கள். ஆனால் எவரையும் பார்வதீபதி எனக் கூறுவதில்லை. கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்லலாம். ஆனால் மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாத பரதேவதையை எங்கும் வசப்படுத்திக் கொள்ள இயலாது. அவள் பரமசிவன் ஒருவருக்கே வசப்பட்டவள்.

 

குரவகதரோ:- கர்ப்பிணீ ஸ்திரீகளுக்கு மசக்கை ஏற்படுவது போல் பூத்துக் காய்க்குமும் சில மரங்கள் அசேதனமாயினும் ஸ்திரீகளின் தழுவதலுக்கு ஏங்குவதாயும் அங்ஙனம் அவர்கள் தழுவுவதால் மகிழ்ந்து புஷ்பிப்பதாயும் கூறுவர். குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக் கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.

 

அம்பிகைக்கும், லக்ஷ்மிக்கும், ஸரஸ்வதிக்கும் எந்த ஒரு ஏற்றத் தாழ்வு கூறுவது போல் இங்கு கூறினாலும் உண்மையில் ஏற்றத் தாழ்வு இல்லை. “ஸ்ரீராமனும் பரசுராமனும் சண்டை போட்டுக் கொண்டால் வேறாகப் போய் விடுவார்களா? இரண்டு பேரும் மஹாவிஷ்ணுவின் அவதாரம் தானே? என்கிறார் காமகோடி சங்கராச்சாரியார்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 95

 

ஸ்லோகம் 95

 

புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ:

ஸபர்யா-மர்யாதா தரலகரணானா மஸுலபா

ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம்

தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமரா:

 

இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபட இயலாது (இஷ்டப்ராப்தி)

 

(த்வம்) நீ (புராராதே:) முப்புரங்களையும் எரித்த பரமசிவனுடைய (அந்த: புரம் அஸி) அந்தப்புரத்தில் உள்ள பட்டமகிஷியாக விளங்குகிறாய். (தத:) அதனால் (த்வத் சரணயோ:) உன்னுடைய பாதங்களில் (ஸபர்யா-மர்யாதா) நெருங்கிப் பூஜை செய்யும் முறை (தரல-கரணானாம்) அடங்காத சித்தமுடையவர்களுக்கு (அஸுலபா) அடையக் கூடியதன்று. (ததா ஹி) அதனால் தான் (ஏதே) இந்த (சதமக-முகா) இந்திரன் முதலான (அமரா:) தேவர்கள் (தவ) உன்னுடைய (த்வாரோபந்த-ஸ்திதிபி) வாயிற்புரத்தில் இருக்கும் (அணிமாத்யாபி:) அணிமா முதலிய தேவதைகளால் தடை செய்யப்பட்டவர்களாயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் (அதுலாம் ஸித்திம்) அணிமா முதலிய நிகரற்ற சித்திகளை (நீதா:) அடையும் படி செய்விக்கப்பட்டார்கள்.

 

இந்திரிய நிக்கிரம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் தேவியை நெருங்கிப் பூஜை செய்ய அதிகாரம் உண்டு. இந்திரன் முதலான தேவர்களும் தேவியின் சமீபம் சென்று பாதாரவிந்தங்களில் பூஜை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட போதிலும் அவ்வாசை பூர்த்தியடைவதில்லை. வெளிவாயிலில் நின்று சேவைபுரியும் அணிமாதி சித்திகளால் இந்திராதி தேவர்கள் அங்கேயே நிறுத்தப்படுகிறார்கள். சித்திகளை அடைந்து அதற்கு மேல் செல்லத் தகுதியற்றவர்களாகின்றனர்.

 

 


 

 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 94

 

ஸ்லோகம் 94

 

கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம் நிபிடிதம் |

ஆதஸ்-த்வத்போகேன ப்ரதிதின-மிதம் ரிக்தகுஹரம்

விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே ||

 

தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப் பெற்ற ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம் (இஷ்டப்பிராப்தி)

 

(இதம்) இந்த (ரஜநிகர-பிம்பம்) வானில் சந்திரமண்டலமாய்த் தோன்றுவது (ஜலமயம்) பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த (மரகதகரண்டம்) மரகதப்பாண்டம்; (கலாபி:) கிரணங்களாகிய (கர்ப்பூரை:) பச்சைக் கற்பூரத்தால் (நிபிடிதம்) நிறைவு செய்யப்பட்டது. (களங்கா:)களங்கமாய்த் தோன்றுவது (கஸ்தூரி). (அத:) ஆகையால் (ப்ரதிதினம்) தினந்தோறும் (த்வத் போகேன) உனது உபயோகத்தால் (ரிக்த-குஹரம்) காலியாகும் அப்பாண்டத்தை (விதி:) பிரம்மா (பூய: பூய) மீண்டும் மீண்டும் (தவ க்ருதே) உனக்காக (நூநம்) நிச்சயம் (நிபிடயதி) நிரப்பி வைக்கிறார் என்று தான் நான் கருதுகிறேன்.

 

தேவியை உலகுக்கெல்லாம் காரணமாய் வர்ணிக்கும் ஆசாரியர் பிரம்மாண்டத்தை தேவியின் கிருகமாகவும் ஆகாயத்தை விதானமாகவும், மேரு முதலிய ஸ்தானங்களை விளையாட்டு இடங்களாகவும், நக்ஷத்திரங்களை ஹாரமாகவும், கோத்ரப் பிரவர்த்தகர்களைப் பேரன்மார்களாகவும், பிரும்மா முதலியவர்களைப் புத்திரர்களாகவும், சூரியனை வீட்டு விளக்காகவும் வர்ணிக்கையில் குளிர்ந்த ஒளி தரும் சந்திரன் தேவிக்கு வாசனைத் திரவியங்கள் வைக்கும் சிமிழாகிறான்.

 


 

 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 93

 

ஸ்லோகம் 93

 

அராலா கேசேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே

சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே

ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே

ஜகத்த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசிதருணா

 

சிவனுடைய கருணையின் உருவே தேவி (மனோரத ஸித்தி)

 

(சம்போ:) பரமசிவனுடைய (காசித்) மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாத ஏதோ ஒரு (கருணா) கருணையானது (ஜகத்) உலகை (த்ராதும்) இரக்ஷிப்பதற்காக (அருணா) அருணா என்ற பராசக்தி வடிவில் (விஜயதே) வெற்றியுடன் விளங்குகிறது. அந்தக் கருணாசக்தி(கேசேஷு) தேவியின் கூந்தலில் (அராலா) சுருளும் தன்மையாகவும், (மந்தஹஸிதே) புன்சிரிப்பில் (ப்ரக்ருதிஸரலா) இயற்கையான இனிமையாகவும் (சித்தே) மனதில் (சிரீஷாபா) வாகைப்பூவினது போன்ற மிருதுத் தன்மையாயும் (குசதடே) நகில்களில் (த்ருஷதுபல-சோபா) கல்லினுள் இருக்கும் இரத்தினத்தினது போன்ற காந்தியாயும் (மத்யே) இடையில் (ப்ருசம் தன்வீ) மிகுந்த மெலிவாயும் (ஊரஸிஜ) மார்பிலும் (ஆரோஹ-விஷயே) நிதம்பத்திலும் (ப்ருது:) பருமனாகவும் (ஜயதி) விளங்குகிறது.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 92

 

ஸ்லோகம் 92

 

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத:

ஸிவ: ஸ்வாச்ச-ச்சாயா-கடித-கபட-பரச்சதபட: |

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா

சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் ||

 

தேவியின் இருக்கை (ஆளுந்திறமை)

(த்ருஹிண-) ப்ரம்மா, (ஹரி-) விஷ்ணு, (ருத்ர-)ருத்திரன், (ஈச்வர-) ஈச்வரன் ஆகிய (ப்ருத:)அதிகார புருஷர்கள் (தே) உன்னுடைய (மஞ்சத்வம்)வேத ஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்குந்தன்மையை (கதா:) அடைந்திருக்கிறார்கள். (சிவ:) ஸதாசிவன் (ஸ்வச்சச்சாயா-கடித) வெண்மையான காந்தியோடு கூடிய (கபட-பரச்சத-பட) மேல் விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார். (த்வதீயானாம்)உன்னுடைய (பாஸாம்) காந்தியின் (ப்ரதிபலன-ராகாருணதயா) பிரதிபலனத்தால் அவர் சிகப்பாகத் தோன்றுவதால் (ச்ருங்கார ரஸ:) சிருங்கார ரஸமே (சரீரீ இவ) சரீரம் படைத்து வந்தது போல் உன்னுடைய கண்களுக்கு (குதுகம்) ஆனந்தத்தை (தோக்தி) அளிப்பவராகிறார்.

 

சில பாடங்களில் இது 94வது ஸ்லோகமாகவும், அடுத்து வரும் “ஆராலா கேசேஷ” என்பது 92வது ஸ்லோகமாகவும் காணப்படுகின்றன.

ப்ரஹ்மா முதலிய நால்வரும் லோகத்தின் அதிகார புருஷர்களாக இருந்தும் அம்பாளுடைய ஸமீபத்தில் இருந்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையால் கட்டில் கால்களாகவாவது இருப்போம் என்று அப்படியிருக்கிறார்கள்.

 

சிவ:- ஸதாசிவ:  சக்தி தத்துவமானது இருபத்தைந்தாவது தத்துவமான ஸதாசிவ தத்துவத்துடன் இரண்டறக் கலந்து இருபத்தாறாவது தத்துவமான சிவசக்தி ஸாமரஸ்ய “ஸாதாக்ய” தத்துவமாக இருப்பதை (ச்ருங்காரோ ரஸ இவ) சிருங்கார ரஸம் உருவெடுத்தாற்போல் வெண்மையான ஸதாசிவனும் தேவியின் சாயையால் சிவப்பாகத் தோன்றுபவராய் தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார் என்று இங்கே கூறப்படுகிறது. இதற்கு முன் ஸ்லோகங்களில் தேவியின் கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கப்பட்டது. இங்கு ‘சிவசக்தி ஐக்ய ரூபம்’ கூறப்படுகிறது.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 91

 

ஸ்லோகம் 91

 

பதந்யாஸ-க்ரீடாபரிசய-மிவாரப்து-மனஸ:

ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன கலஹம்ஸா ந ஜஹதி |

அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித

ச்சலாதாசக்ஷாணாம் சரணகமலம் சாருசரிதே

 

தேவியின் நடையழகு (பூமிலாபம், தனலாபம்)

 

(சாருசரிதே) புண்ணிய சரித்திரமுடையவளே! (தே) உன்னுடைய (பவன-கலஹம்ஸா:) வீட்டிலுள்ள அன்னப்பறவைகள் (பதந்யாஸ-க்ரீடா) உனது நடை அழகை (பரிசயம்) கற்றுக் கொள்ள (ஆரப்து-மனசஸ:இவ) ஆரம்பிக்க எண்ணம் கொண்டவை போல் (ஸ்கலந்தா:) துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டு (தே) உன்னுடைய அழகிய நடையை (ந ஜஹதி) தொடர்வதை விடுவதில்லை. (அத:)ஆகையினால் (சரணகமலம்) உன்னுடைய திருவடி(ஸுபக-) மங்களகரமான (மணி-மஞ்ஜீர) இரத்தினமிழைத்த சிலம்புகளின்(ரணித-) ஒலியின் மூலம் (ச்சலாத்) மறைமுகமாக (தேஷாம்) அப்பறவைகளுக்கு (சிக்ஷாம்) நடைப்பழக்கத்தை (ஆசக்ஷாணம் இவ) கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது.

 


சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 90

 

ஸ்லோகம் 90

 

ததானே தீனேப்ய: ச்ரியமனிச-மாசானுஸத்ருசீம்

அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர-மகரந்தம் விகிரதி|

தவாஸ்மின் மந்தார-ஸ்தபக-ஸுபகே யாது சரேண

நிமஜ்ஜன்-மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

 

இந்திரியங்களையும் மனதையும் கால்களாகக் கொண்ட வண்டு போன்ற ஜீவன் நாடும் கற்பகப் பூங்கொத்தாகிய பாதம் (துர்மந்த்ரச் சேதனம்)

(தீனேப்ய:) ஏழை எளியவர்கட்கு (ஆசானு ஸத்ருசீம்) அவரவர்கள் விருப்பத்திற்கு இணங்க (ச்ரியம்) செல்வத்தை (அனிசம்) எப்போதும் (ததானே) அளிப்பதும் (அமந்தம்) குறைவின்றி (ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம்) அளவு கடந்த அழகாகிய மகரந்தத்தை (விகிரதி) இறைப்பதும் (மந்தார-) கற்பகத்தின் (ஸ்தபக) பூங்கொத்தைப் போல் (ஸுபகே) மங்கள வடிவாகியதுமான (அஸ்மின் தவ சரணே) உன்னுடைய இப்பாத கமலங்களில் (நிமஜ்ஜன்) புகுந்துறைவதும் (கரண-சரண:) மனதுடன் கூட இந்திரியங்களாகிற கால்களை உடையதுமான (ஷட்சரணதாம்) ஆறுகால் வண்டாக இருக்கும் தன்மையை (மஜ்ஜீவ) என்னுடைய ஜீவன் (யாது) அடையட்டும்)



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 89

 

ஸ்லோகம் 89

 

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல-ஸங்கோச-சசிபி

தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ

பலானி ஸ்வ: ஸ்தேப்ய: கிஸலய-காராக்ரேண தததாம்

தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமனிச மஹ்னாய தததௌ

 

சந்திர கிரகணம் போன்ற கால் நகங்களின் ஒளி

(ஸகல ரோக நிவ்ருத்தி)

 

(சண்டி) சும்ப நிசும்பர்களை ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகிய சண்டிகையே! (கிஸலய) துளிர்களாகிற (கரோக்ரேண) கை நுனிகளால் (ஸ்வ: ஸ்தேப்ய:) ஸ்வர்க்க வாசிகளுக்கு (பலானி) விரும்பிய பயன்களை (தததாம்) அளிக்கின்ற (திவ்யானாம்) தேவ லோகத்தில் உள்ள (தரூணாம்) கல்பகம் முதலிய விருக்ஷங்களை (தரித்ரேப்யச்ச) ஏழை எளியவர்களுக்கும் (பத்ராம்) பரமமங்களமான (ச்ரியம்) செல்வத்தை (அனிசம்) எந்த சமயத்திலும் (அஹ்னாய) விரைவில் (தததௌ) அளிக்கின்ற (தே) உனது (சரணௌ) பாதங்கள் (நகை:) நகங்களால் (ஹஸத: இவ) பரிகசப்பவை போலிருக்கின்றன – எப்படிப்பட்ட நகங்களால் என்றால் (நாக-ஸ்திரீணாம்) தேவ ஸ்திரீகளின் (கர-கமல) கைகளாகிற தாமரைகளை (ஸங்கோச) மூடிக் கொள்ளச் செய்யும் (சசிபி:) சந்திரர்களைப் போன்ற (நகை:) நகங்களால்.

 

கரகமல-ஸங்கோச-சசிபி:- தேவஸ்திரீகள் தாமரை போன்ற கைகளைக் கூப்பிக் கொள்வது சந்திரனைக் கண்டு தாமரை இதழ்கள் கூம்புவது போல் இருக்கின்றது. தேவியின் கால் நகங்களின் ஒளி சந்திரனுடைய பிரகாசம் போலுள்ளது.

 


 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 88

 

ஸ்லோகம் 88

 

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம்

கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் |

கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா

யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ||

 

மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர் போலும் (துஷ்டமிருகங்களின் வச்யம்)

 

(தேவி) தேவியே! (தே) உன்னுடைய (ப்ரபதம்) பாதங்களின் முன்பாகம் (கீர்த்தீனாம்) நீ அடியார்களை காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு (பதம்) உறைவிடம். (விபதாம்)அடியார்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு (அபதம்)  இடம் அளிக்காமல் இருப்பது - கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு – (ஸத்பி:) ஸாதுக்களாகிய கவிகளால் (கடின-கமடீ-கர்ப்பர-துலாம்) கடினமான ஆமையோட்டின் உவமை (கதம்) எப்படி (நீதம்) கற்பிக்கப்பட்டதோ? (தயமானேன மனஸா)  தயை நிறைந்த மனதுடைய (புரபிதா) பரமசிவனால் (உபயமன காலே) விவாக காலத்தில் (யத்பாஹுப்யாம் ஆதாய) அப்பாதங்கள் கைகளால் எடுத்து (த்ருஷ்தி) அம்மிக் கல்லின் மேல் (கதம் வா) எப்படித்தான் வைக்கப்பட்டதோ?



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 87

 

ஸ்லோகம் 87

 

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ

நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதௌ |

வரம் லக்ஷ்மீபாத்ரம் சிரிய மதிஸருஜந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத்பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம்

 

இமயத்தின் பனியிலும் இரவு நேரத்திலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்

 

(ஜனனி) தாயே! (ஹிமானீ-ஹந்தவ்யம்) தாமரையோ பனியில் கருகிப் போவது (ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ) உனது திருவடித் தாமரைகளோ- பனிமலையில் இருப்பதில் தேர்ச்சி பெற்றவை. (நிசாயாம் நித்ராணம்) தாமரை இரவில் இதழ்களை மூடிக் கொண்டு உறங்குவது, (நிசி சரமபாகே ச விசதௌ) உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்த போதும் எப்போதும் பிரசன்னமாயிருப்பவை. (வரம் லக்ஷ்மீ-பாத்ரம்) தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது, (ச்ரியம் அதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்) உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை. ஆகையால் (ஸரோஜம்)  தாமரையை (த்வத்பாதௌ) உனது பாத கமலங்கள் (ஜயத:) ஜயிக்கின்றன. (இஹ) இதில் (சித்ரம்) அதிசயம் (கிம்) என்ன இருக்கிறது.



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 86

 

ஸ்லோகம் 86

 

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்யநமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே |

ஸிராதந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா

துலாகோடிக்வாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா ||

 

ஊடலில் பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி (பிசாசபய நிவிருத்தி, சத்துரு ஜயம்)

 

(கோத்ரஸ்கலனம்) உன் பிறந்த வீட்டைப் பற்றிய ஏளனத்தை (ம்ருஷா) விளையாட்டுக்காக (க்ருத்வா) செய்து விட்டு (அத) பிறகு உன் ப்ரணய கோபத்தைக் கண்டு (வைலக்ஷ்ய) இன்னது செய்வதென்று தெரியாமல் (நமிதம்) வணங்கின (பர்த்தாரம்) பர்த்தாவின் (லலாடே) நெற்றியில் (தே) உன்னுடைய (சரணகமலே) பாதகமலங்கள் (தாடயதி) தட்டுப்படும் போது, (தஹனக்ருதம்) நெற்றிக்கண் நெருப்பால் இழைக்கப்பட்டு (சிராத் அந்த: சல்யம்) நெடுநாளாக நெஞ்சில் தைத்து உறுத்திக் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை (உன்மூலிதவதா) அடியோடு தீர்த்துக் கொள்பவனும் (ஈசான-ரிபுணா) சிவனுடைய பகைவனுமாகிய மன்மதனால் (துலா-கோடி-க்வாணை) உன் பாதச் சிலம்புகளின் ஒலிகளின் மூலம் (கிலிகிலிதம்) ‘கிலி கிலி’ என்ற ஜயகோஷம் எழுப்பப்படுவதாயிற்று.

 




சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 85

 

ஸ்லோகம் 85

 

நமோ வாகம் ப்ரூமோ நயன-ரமணீயாய பதயோ:

தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே |

அஸூயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே

பசூனா-மீசான: ப்ரமதவன-கங்கேலி-தரவே

 

பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்

(பிசாச பய நிவிருத்தி)

 

(நயன-ரமணீயாய) கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாயும்(ஸ்புட-ருசி) பிரகாசம் மிக்கதாயும் (ரஸாலக்தகவதே) உலராத செம்பஞ்சுக் குழம்புடன் கூடியதாயும் உள்ள (தவ பதயோ:) உன்னுடைய பாதங்கள் (அஸ்மை த்வந்த்வாய) இவ்விரண்டிற்கும் (நமோ வாகம்) நமஸ்கார வார்த்தையை (ப்ரூம்) சொல்லுகிறோம். (யத் அபிஹனனாய) அந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதை (ஸ்ப்ருஹயதே) விரும்புகிற (ப்ரமதவன) நந்தவனத்தில் உள்ள (கங்கேலி தரவே) அசோக மரத்தினிடம் (பசூனாம் ஈசான)பசுபதியானவர் (அத்யந்தம்) மிகவும் (அஸூயதி) பொறாமைப்படுகிறார்.

 

கங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிகப்புப் புஷ்பங்களை உடையது. அது புஷ்பிக்காதபோது உத்தம ஸ்திரீகளின் பாதஸ்பர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை.

 

தேவி உத்யான வனத்தில் உலவும் போது அவளுடைய பாதம்படுவதற்கு அசோகமரம் ஆசை கொண்டிருப்பதாகவும் அதை எண்ணிப் பரமசிவன் பொறாமைப்படுவதாயும் இந்த ஸ்லோகம் கூறுகிறது. தேவியின் பாத ஸ்பர்சத்தால் அசோக மரம் மலர்வது போல் தானும் மகிழ்ச்சி பொங்கப் பரமசிவன் விரும்புகிறார். அப்பேர்ப்பட்ட பாதங்களை அணுகி வணங்குவது அரிதினும் அரிதாகையால் அவைகட்கு வாக்கினால் நமஸ்கார கூறுவதே பெரும் பாக்கியம்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 84

 

ஸ்லோகம் 84

 

ச்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா

மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ |

யயோ: பாத்யம் பாத: பசுபதி-ஜடாஜுட-தடினீ

யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி

 

உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்

(பரகாயப் பிரவேசம், ஜீவன் முக்தி)

 

(மாத:) தாயே (தவ) உன்னுடைய (யௌ) எந்த (சரணௌ) பாதங்களை (ச்ருதீனாம் மூர்த்தான:)  வேதங்களின் தலை போன்ற உபநிஷதங்கள் (சேகரதயா) சிரோ பூஷணங்களாக (தததி) தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களை (மம) என்னுடைய (சிரஸி அபி) தலையிலும் கூட (தயயா) தயை கூர்ந்து (தேஹி) வைத்தருள்வாயாக. (யயோ:) அவற்றிற்கு (பாத்யம் பாத:) பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் (பசுபதி-) பரமசிவனுடைய (ஜடாஜூட) ஜடையில் இருக்கும் (தடினீ) கங்கையாகிறது. (யயோ:)அவற்றிற்கு (லாக்ஷாலக்ஷ்மீம்:) பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு (அருண-ஹரி-சூடாமணி-ருசி:) சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கிறது.

 

இங்கு ஆச்சார்யாள் கேனோபநிஷத்தை மனசில் வைத்துக் கொண்டு சொல்வதாகத் தெரிகிறது. தேவர்களுடைய அகம்பாவத்தைப் போக்கி அனுக்கிரகம் செய்தது போல, என்னிடம் உள்ள சகல துரிதங்களையும் நிவிருத்தி செய்வாயாக என்கிறார்.

 

அம்பாளுடைய ஊடலைத் தணிக்கப் பரமசிவன் அம்பாளுடைய பாதத்தில் வணங்கும் போது அவருடைய ஜடையில் இருக்கும் கங்கை கீழே பெருகி அம்பாளுக்குப் பாத்யம் மாதிரி ஆகிறது.



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 83

 

ஸ்லோகம் 83

 

பராஜேதும் ருத்ரம் த்விகுணசரகர்ப்பௌ கிரிஸுதே

நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிசிகோ பாட-மக்ருத |

யதக்ரே த்ருச்யந்தே தசசர-பலா: பாதயுகலீ

நகாக்ரச்சத்மான: ஸுர-மகுட-சாணைக-நிசிதா:

 

மன்மதனுடைய அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்

(சதுரங்க சைனிய ஸ்தம்பனம்)

 

(கிரிஸுதே) பார்வதீ! (விஷம-விசிக:) பஞ்சபாணனாகிய மன்மதன் (ருத்ரம்) ருத்திரனை (பராஜேதும்) ஜயிப்பதற்கு (தே) உன்னுடைய (ஜங்கே) முழந்தாள்களை (த்விகுண-சர-கர்ப்பௌ) இருமடங்கு பாணங்கள் நிறைந்த (நிஷங்கௌ) அம்பறாத் தூணிகளாகளாக (அக்ருத) செய்திருக்கிறான். (பாடம்) ஆம்; நிச்சயம், (யத் அக்ரே) அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் (பாதயுகளீ) இரண்டு பாதங்களுடைய (நகாக்ரச்சத்மான) நகங்களின்

 

நுனிகள் எனப் புனைப்பெயர் கொண்டவையும் (ஸுரமகுட) தேவர்களுடைய கிரீடங்களாகிய (சாணைக்கற்காள் தீட்டப் பெற்றவையுமான (தசசரபலா:) பத்து பாணங்களின் இரும்பு முனைகள் தான் (த்ருச்யந்தே) காணப்படுகின்றன.

 

மன்மதனுடைய பஞ்சபாணங்களால் ஜயிக்கப்படாத சிவன் தேவியின் கால் அழகினால் ஜெயிக்கப்படுகிறார் என்பது கருத்து.



 

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 82

 

ஸ்லோகம் 82

 

கரீந்த்ராணாம் கண்டான் கனககதலீ-காண்டபடலீம்

உபாப்யாமுரூப்யா-முபயமபி நிர்ஜித்ய பவதி |

ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி-கடினாப்யாம் கிரிஸுதே

விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி

 

யானையின் துதிக்கை போன்ற துடை

(ஜலஸ்தம்பம், இந்திரப்பதவியை ஒத்த பதவி)

 

(பவதி) பகவதி!  (கிரிஸுதே) பார்வதி (கரீந்த்ராணாம்) சிறந்த யானைகளின் (கண்டான்) துதிக்கைகள் (கனக-கதலீ-காண்டபடலீம்) பொன்வாழை மரங்கள் (உபயம் அபி)  ஆகிய இவ்விரண்டையும் (உபாப்யாம் ஊருப்யாம்) இரண்டு துடைகளால் (நிர்ஜித்ய)  ஜயித்தும் (விதிஜ்ஞே)  சாஸ்திரத்தை அறிந்தவளே! (பத்யு:) பதியாகிய பரமசிவனுக்கு (ப்ரணதி-கடினாப்யாம்)  நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் (ஜானுப்யாம்) முழங்கால் முட்டிகளால் (விபுத-கரி-கும்ப-த்வயம்) இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டு கும்பங்களையும் (நிர்ஜித்ய) ஜயித்தும் (அஸி) இருக்கிறாய்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...