Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 68

 

ஸ்லோகம் 68

 

புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ

தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்

ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா

ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா

 

முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து

(ராஜவச்யம்)

 

(தவ) உன்னுடைய (இயம்) இந்த (க்ரீவா) கழுத்து (புரதமயிது) முப்புரமெரித்த பரமசிவனுடைய (புஜாச்சேஷாத்)  புஜங்களின் தழுவுதலால் (நித்யம்) எப்போதும் (கண்டகவதீ) மயிர்க்கூச்சத்தால் முட்களுடன் கூடியிருப்பதால் (முக-கமல-நால-ச்ரியம்) முகத்தாமரைக்குக் காம்பு போன்ற பொலிவை (தத்தே) அடைகிறது. (யத் அக:) அதற்கும் கீழுள்ள (ஹார-லதிகா) முத்துமாலை (ஸ்வத:)  இயற்கையில் (ச்வேதா) வெண்மையாயினும் (காலாகரு-) கருப்பான அகிலுடன் கூடிய (பஹுல-ஜம்பால) சந்தனக்குழம்பின் மிகுதியால் (மலினா) சேற்றில் அழுக்கடைந்த (ம்ருணாலீ) தாமரைக் கொடியின் (லாலித்யம்) பொலிவை (வஹதி) உடையதாயிருக்கிறது.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...