ஸ்லோகம் 44
தனோது க்ஷேமம் நஸ்தவ வதன-ஸௌந்தர்யலஹரீ
பரிவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த-ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ-பார-திமிர
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீக்ருதமிவ நவினார்க்க கிரணம்
வகுட்டின் வர்ணனை
(ஸர்வரோக நிவிருத்தி)
(தவ) உன்னுடைய (வதன-ஸௌந்தர்யலஹரீ) முகத்தின் அழகு வெள்ளத்தின் (பரிவாஹ:
ஸ்ரோத:-ஸரணி:இவ) பெருக்கானது வழிந்தோடும் வாய்க்கால் மாதிரி தோன்றுவதும் (ப்ரபல-) பலம்
மிகுந்த (கபரீ-பார-) கேச பாரத்தின் (திமிர:) இருளாகிய (த்விஷாம் ப்ருந்தை:) சத்துருக்கூட்டத்தால்
(பந்தீக்ருதம்) சிறை பிடிக்கப்பட்ட (நவீன – அர்க்க – கிரணம் இவ) உதயசூரியனுடைய ஒளி
போன்ற (ஸிந்தூரம்) குங்குமத்தை (வஹந்தீம்) தரிப்பதும் ஆகிய (ஸீமந்தஸரணி:) வகுட்டின்
ரேகை (ந:) எங்களுக்கு (க்ஷேமம்) க்ஷேமத்தை (தனோது) அளிக்கட்டும்.
இந்த ஸ்லோகம் ‘வஹந்தீ ஸிந்தூரம்’ என்ற இரண்டாவது அடியை முதலாகவும், ‘தநோது
க்ஷேமம் ந:’ என்பதை இரண்டாவது அடியாகவும் வைத்து அப்பய்ய தீக்ஷதரால் குவலயானந்தத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸீமந்த-ஸரணி:- வகுடு ஸீமந்தம் எனப்படும். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசம்
லக்ஷ்மியின் வாசஸ்தானம். அங்கு குங்குமம் அணிவது உத்தம ஸ்திரீகளின் வழக்கம்.

No comments:
Post a Comment