Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 55

 

ஸ்லோகம் 55

 

நிமேஷோன்மேஷாப்யாம் ப்ரலய-முதயம் யாதி ஜகதீ

தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே

த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரலயத

பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச:

 

கண்கள் மூடாமல் இருக்கும் காரணம்

(இரட்சிக்கும் சக்தி: அண்டரோக நிவாரணம்)

 

(தரணிதர-ராஜன்யதனயே) பர்வதராஜ குமாரியே! (தவ) உன்னுடைய(நிமேஷ உன் மேஷாப்யாம்) கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் (ஜகதீ) உலகம் (ப்ரலயம்) பிரளயத்தையும் (உதயம்) சிருஷ்டியையும் (யாதி) அடைகிறது (இதி) என்று (ஸந்த:) சான்றோர் (ஆஹு:) கூறுகின்றனர். (த்வத்) உனது (உன்மேஷாத்) கண்கள் திறப்பதால் (ஜாதம்) உண்டான  (இதம்) இந்த(ஜகத்) உலகம் (அசேஷம்) முழுவதையும் (ப்ரலயத) பிரளயத்தில் இருந்து (பரித்ராதும்) அழியாமல் காப்பதற்காக (தவ) உன்னுடைய (த்ருச:) கண்கள் (பரிஹ்ருத நிமேஷா) மூடுதல் இல்லாமல் இருக்கின்றன (இதி) என்று நான் ஊகிக்கிறேன்.

 

தேவதைகள் கண் கொட்டுவதில்லை. அதனால் பரதேவத இயற்கையாகவே கண் கொட்டாமலிருந்த போதிலும் அது உலக ரக்ஷணத்திற்காக என்று இங்கு உபசரித்துக் கூறப்படுகிறது.

 

உன்மேஷ – நிமிஷோத்பன்ன – விபன்ன – புவனாவலீ அதாவது கண்களைத் திறப்பதாலும் மூடுவதாலும் புவனங்களை ஆக்கி அழிப்பவள். (லலிதா சஹஸ்ரநாமம்)




 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...