Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 52

 

ஸ்லோகம் 52

 

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ

புராம் பேத்துச்-சித்தப்ரசம-ரஸ-வித்ராவண-பலே

இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே

தவாகர்ணாக்ருஷ்ட-ஸமரசர-சிலாஸம் கலயத:

 

மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்

(காமஜயம்; காது, கண்களின், ரோக நிவாரணம்)

 

(கோத்ராதரபதி) மலையரசனான இமவானுடைய (குலோத்தம்ஸ-கலிகே) குலக்கொழுந்தே! (தவ) உன்னுடைய (இமேநேத்ரே) இக்கண்கள் இரண்டும் (கர்ணாப்யர்ணம் கதே) காதுகள் வரை நீண்டிருப்பதாலும் (கருத இவ) பாணங்களில் கட்டிய இறகுகளைப் போன்ற (பக்ஷ்மாணி) இமை மயிர்களை (தததீ) தரிக்கும் காரணத்தாலும் (புராம் பேத்து:)  முப்புரமெரித்த சிவனுடைய (சித்த-ப்ரசம-ரஸ வித்ராவணபலே) மனதின் சாந்தி ரஸத்தை கலைப்பதை நோக்கமாகக் கொண்டு (ஆகர்ண-ஆக்ருஷ்ட) காதுவரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தின் திறமையை (கலயத:) நடித்துக் காட்டுகின்றன.

 

சித்தப்ரசமரஸ – வித்ராவண – பலே – பரமசிவனுடைய சித்தத்தில் குடிகொண்டிருக்கும் சாந்திரஸத்தைக் கலைத்து சிருங்கார ரஸத்தைத் தோற்றுவிப்பதையே பயனாகக் கொண்ட இரு கண்கள். இங்கு ‘பலே’ எனும் பதம் சிலேடையாக உபயோகிக்கப்பட்டிருகின்றது. (ஆத்ர பல சப்தேன அயோமயோ பாணாக்ரம் ஸூசிதம்) அம்பின்முக்கிய பாகமான எஃகு முனை ‘பலம்’ எனப்படும். அப்படிக் கூரான பார்வையுடைய கண்கள்.

கதே கர்ணாப்யர்ணம் – கண்கள் காதுவரை நீண்டிருப்பது காதுவரை இழுத்துவிடும் மன்மத பாணங்களைப் போல் தோன்றுகிறது.

 

இவ்வாறு தேவியினுடைய கண்ணழைத் தியானம் செய்வதால் இருதயத்தில் உள்ள காமச் சிக்கல் அறுபட்டு ஒழியும்



 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...