ஸ்லோகம் 64
அவிச்ராந்தம் பத்யுர்-குணகண-கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா |
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ தச்சச்சவி-மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா
நாவின் வர்ணனை (ஸரஸ்வதி கடாக்ஷம்)
(ஜனனி) தாயே (தவ) உன்னுடைய (ஸா) பிரசித்தமான (ஜிஹ்வா) நாக்கு (அவிச்ராந்தம்)
இடைவிடாமல் (பத்யு) பதியாகிய பரமசிவனுடைய (குண-கண-கதாம்ரேடன-ஜபா) பல குணங்களை விளக்கும்
கதைகளைப் பேசுவதையே ஜபமாய்க் கொண்டு (ஜபா-புஷ்பச்சாயா) செம்பருத்திப் புஷ்பம் போல சிவந்து
(ஜயதி) சிறப்புடன் விளங்குகிறது. (யத் அக்ரா ஸீனாயா:) அந்நாக்கின் நுனியில் இருக்கும்
(ஸரஸ்வத்யா:) ஸரஸ்வதியினுடைய (ஸ்படிகத்ருஷத்) படிகம் போன்ற (அச்ச-) தெளிவான (ச்சவிமயீ)
காந்தியுடன் கூடிய (மூர்த்தி:) வடிவம் (மாணிக்ய வபுஷா) மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக
(பரிணமதி) மாறுதல் அடைகிறது.
ஆம்ரேடனம் த்விஸ்த்ரி – ருக்தி: (இரண்டு மூன்று தடவை திருப்பிச் சொல்லுதல்).
அதையே திருப்பித் திருப்பிச் சிந்திப்பதால் மெய்மறந்து ஜடத்தைப் போன்று இருக்கும் நிலை.

No comments:
Post a Comment