Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 70

 

ஸ்லோகம் 70

 

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:

சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா

 

தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள்

(சிவ அபராதத்திற்குச் சாந்தி)

 

(ம்ருணானீ-ம்ருத்வீனாம்)  தாமரைத் தண்டுபோல் மெதுவாய்த் துவளும் (தவ) உன்னுடைய (சதஸ்ருணாம்) நான்கு (புஜலாதனாம்) கொடிபோன்ற கைகளின் (ஸௌந்தர்யம்) அழகை (ஸரஸிஜபவ:) தாமரையில் உதித்த பிரம்மா (ப்ரதம-மதனாத்)  முதலில் தனது தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்ட (அந்தகரிபோ:) காலகாலனான பரமசிவனுடைய (நகேப்ய) நகங்களினின்று (ஸந்த்ரஸ்யன்) பயந்து கொண்டு (ஸமம்) ஸமகாலத்தில் (சதுர்ணாம்) நான்கு (சீர்ஷாணாம்) தலைகளுக்கும்  (அபயஹஸ்த -  அர்ப்பண – தியா) நான்கு கைகளாலும் அபயமளிப்பாய் என்ற நோக்கத்துடன் (சதுர்ப்பிர் – வதனை)  நான்கு முகங்களாலும் (ஸ்தௌதி) துதிக்கிறார்.

 

பிரம்மாவும் விஷ்ணுவும் பரமசிவனுடைய முடியையும் அடியையும் பார்த்து வருவதாகச் சென்றார்கள் என்றும் விஷ்ணு வராஹ வடிவில் பாதாளம் வரை சென்று காண முடியவில்லை என்று கூறினதாகவும், பிரம்மா ஹம்ஸத்தில் ஏறி மேலே சென்று முடியைக் காணாத போதும் கண்டதாகத் திரும்பி வந்து பொய் சொன்னதாகவும் அந்தக் குற்றத்திற்காகப் பரமசிவன் புன்சிரிப்புடன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் பொய் சொன்ன தலையைத் தன் நகத்தால் கிள்ளிவிட்டார் என்பதும் புராணவரலாறு. தேவியின் அனுக்கிரஹமில்லாவிட்டால் தான் சிவ அபராதத்தால் மற்ற தலைகளையும் இழந்து விட நேரிடுமோ என்று பிரம்மா தேவியைத் துதிக்கிறார்.

 


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...