ஸ்லோகம் 69
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக-நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே
கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள் (ஸங்கீத ஞானம்)
(கதி-கமக-கீத-ஏக-நிபுணே) ஸங்கீத கதி கமகம் கீதம் ஆகியவற்றில் ஒப்புயர்வற்ற
திறமை வாய்ந்தவளே! (தே) உன்னுடைய (கலே) கழுத்தில்
உள்ள (திஸ்ர:) மூன்று (ரேகா) பாக்கிய ரேகைகள் (விவாஹ-) விவாக காலத்தில் (வ்யாநத்த) நன்றாய் கட்டப்பட்ட (ப்ரகுண-) பல நூல்கள் கொண்ட
(குண-ஸங்க்யா) சரட்டின் எண்ணிக்கையை (ப்ரதிபுவ:)
ஞாபகப்படுத்துவது போலும், (நானாவித) பலவிதமான (மதுர-ராக-ஆகர-புவாம்) இனிய ராகங்களுக்குத்
தோற்றுவாயாக உள்ள (த்ரயாணாம் க்ராமாணாம்) ஷட்ஜம்
மத்யமம் காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் (ஸ்திதி-நியம-ஸீமான இவ) இடத்தையும்
எல்லையையும் பிரித்துக் காட்டுவது போலும் (விராஜந்தே) விளங்குகின்றன.
பின் குறிப்பு
உத்தம ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கும் நெற்றி கழுத்து, வயிறு ஆகிய மூன்றிடங்களில்
மூன்று கோடுகள் இருக்குமென்று ஸாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. விவாக காலத்தில் மாங்கல்ய
தாரணத்திற்குப் பிறகு இடது கையில் ஒரு ஸரமும், கழுத்தில் மூன்று ஸரமுமாகச் சரடு கட்டுவது
சில நேரங்களில் வழக்கம் என்று கிருஹ்ய ஸூத்ரம் கூறுகிறது. கழுத்திலுள்ள ரேகை விவாக
காலத்தில் கட்டின சரட்டை ஞாபகப்படுத்துவது போலிருக்கிறது.

No comments:
Post a Comment