ஸ்லோகம் 49
விசாலா கல்யாணீ ஸ்புடருசி-ரயோத்யா குவலைய:
க்ருபாதாராதாரா கிமபி மதுராSSபோக-வதிகா |
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹூநகர-விஸ்தார-விஜயா
த்ருவம் தத்தந்நாம-வ்யவஹரண-யோக்யா விஜயதே ||
எட்டுவிதமான கண்ணோட்டம்
(ஸர்வ ஜயம், நிதிதர்சனம்)
(தே) உன்னுடைய (த்ருஷ்டி:) கண்ணோட்டம் (விசாலா) விசாலமாயும் (கல்யாணீ) மங்களகரமாயும்(ஸ்புடருசி:) மலர்ந்து பிரகாசிப்பதாயும் (குவலயை:) கருநெய்தல்களால்
(அயோத்யா) வெல்லமுடியாத அழகு வாய்ந்ததாயும் (க்ருபாதாராதாரா) கருணைப் பெருக்கிற்கு
ஆதாரமாயும் (கிமபி மதுரா) வர்ணிக்க முடியாத இனிமையுடன் கூடியதாயும் (ஆபோகவதிகா) ஆழங்காண முடியாததாயும்(அவந்தீ) ரக்ஷிப்பதாயும் (பஹுநகர
விஸ்தார-விஜயா) பல நகரங்களில் அதன் வெற்றியின் சீர்மை விளங்குவதாயும் (தத்-தத் நாம
வ்யவஹரண-யோக்யா) அதனால் அந்தந்த நகரங்களின் பெயர்களால் குறிப்பிடத்தக்கதாயும் (த்ருவம்)
நிச்சயமாக(விஜயதே) அனைத்துயும் வெல்லுவதாக விளங்குகிறது.
எட்டுவிதமான த்ருஷ்டி – விசாலா என்பது உள்ளாக மலர்ந்த பார்வை; கல்யாணீ ஆச்சர்யத்தைக்
காட்டுவது; அயோத்யா என்பது காமத்தை உண்டாக்குவது; தாரா என்பது ஆலஸ்யத்தைக் காட்டுவது;
மதுரா என்பது சஞ்சலமானது; போகவதி பிரியத்தோடு கூடியது; அவந்தீ மயங்கியது; விஜயா பாதி
மூடினது, அம்பாளிடத்தில் இவை முறையே ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடண,
வித்வேஷண, மாரண சக்திகளுடன் கூடியவை. விசாலா முதலிய பெயர்களைக் கொண்ட நகரங்களில் அம்பாளுடைய
பார்வையின் அந்தந்தப் பிரபாவம் வெளியாகியுள்ளது.
இவ்விதம் தேவியை உபாசிக்கிறவர்கள் ஸம்க்ஷோபணம் ஆகர்ஷணம் முதலிய சக்திகளைப்
பெறுவார்கள்.

No comments:
Post a Comment