ஸ்லோகம் 57
த்ருசா த்ராகீயஸ்யா தரதலித-நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமர-நிபாதோ ஹிமகர:
நாட்டிலும் காட்டிலும் சமமாய் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்
(ஸகல ஸௌபாக்கியம்)
(சிவே) மங்களஸ்வரூபியே ! (த்ராகீயஸ்யா) தீர்க்கமானதும் (தரதலித) சற்று மலர்ந்த
(நீலோத்பல-ருசா) கருநெய்தல் போன்று பிரகாசிப்பதுமான (த்ருசா) உனது பார்வையால் (தவீயாம்ஸம்)
உனக்கு வெகு தூரத்திலிருக்கும் (தீனம்) ஏழையாகிய (மாம் அபி) என்னையும் கூட (க்ருபயா)
கருணையால் (ஸ்நபய) நீராட்டி வை. (அநேன) அதனால் (அயம்) இவன் (தன்ய பவதி) செல்வவானாக
ஆகிவிடுவான். (இயதா) இதனால் (தே) உனக்கு (ந ச ஹானி) ஒரு நஷ்டமும் இல்லை. (ஹிமகர:) சந்திரன்
(வனே வா) காட்டிலாயினும் (ஹர்ம்யே வா) நாட்டிலுள்ள மாளிகையிலாயினும் (ஸமகர-நிபாத:)
தன் கிரணங்களைச் சமமாகவே பொழிகிறான். (அதனால் சந்திரனுக்கு என்ன நஷ்டம்?)
சிறு குழந்தையைப் போல் அம்மா அம்மா என்று அழமட்டுமே தெரிந்த என்னை ரக்ஷிக்கும்
அத்புதமான சுவபாவமே உன் புகழை நிலைநிறுத்துவது. குணமுள்ள குழந்தை தான் ரக்ஷித்தற்குரியவன்,
குணமில்லாதவன் தள்ளி விடத் தக்கவன் என்று நியமமில்லை. குழந்தைகளிடம் உள்ள குணதோஷங்களை
விசாரித்துத் தார தம்யத்தைப் பார்ப்பது உலகில் தாய்மார்களின் சுபாவம் அன்று. அப்படியிருக்கப்
பரதேவதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
அம்பாளுடைய கடாக்ஷமானது வெகுதூரம் விழக்கூடிய கடாக்ஷம். தாயாருடைய கடாக்ஷம்
குழந்தைகளிடத்தில் விழும். பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாப் பிராணிகளும் குழந்தைகள்.
எல்லாவற்றிற்கும் தாயாக இருப்பவள் ஜகன்மாதா தான். அவளுடைய கடாக்ஷத்திற்கு எல்லை இல்லை.

No comments:
Post a Comment