ஸ்லோகம் 79
நிஸர்க்க-க்ஷீணஸ்ய ஸ்தன-தட-பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர்-நாரீதிலக சனகைஸ்-த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருஷ்டித-தடினீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குசலம் சைலதனயே
மெல்லிய இடையின் அழகு
(ஸர்வஜன மோஹனம், இந்திரஜால வித்தை)
(நாரீதிலக சைல தனயே) பெண்குலத்தின் திலகமான பார்வதியே! (நிஸர்க்க-க்ஷீணஸ்ய)
இயற்கையாகவே மெல்லியதும் (ஸ்தன தட-பரேண) நகில்களின் பாரத்தினால் (க்லமஜுஷ:) வருந்துவதும்
(நமன்-மூர்த்தோ) அதனால் வளைந்த வடிவுடையதும் (சனகை) மெல்ல மெல்ல (த்ருட்யத இவ) ஒடிந்து
போவது போலிருப்பதும் (த்ருடி-த) இடிந்து போன (தடினீ-தீர) நதியின் கரையில் இருக்கும்
(தருணா) மரத்திற்கு (ஸமாவஸ்தா-) சமமான நிலையில் (ஸ்தேம்ன) நிற்பதுமான (தே) உன்னுடைய
(மத்யஸ்ய) இடைக்கு (சிரம்) நீண்டகாலம் (குசலம்) க்ஷேமம் (பவது) உண்டாகட்டும்.

No comments:
Post a Comment