ஸ்லோகம் 81
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே|
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய-மசேஷாம் வஸுமதீம்
நிதம்ப-ப்ராக்பார:ஸ்தகயதி லகுத்வம் நயதி ச ||
மலைபோன்ற நிதம்பம் (அக்னீ ஸ்தம்பம்)
(பார்வதி) பார்வதியே! (க்ஷிதிதரபதி:) மலையரசன் (குருத்வம்) கனத்தையும்
(விஸ்தாரம்) விஸ்தாரத்தையும் (நிஜாத்) தன்னுடைய (நிதம்பாத்) அடிவாரத்தினின்றும் (ஆச்சித்ய)
எடுத்து (த்வயி) உன்னிடத்தில் (ஹரண-ரூபேண) சீராக (நிததே) கொடுத்து விட்டார் போலும். (அத:) அதனால் தான் (குரு:) பருத்தும் (விஸ்தீர்ண:)
விசாலமாயும் இருக்கிற (தே) உன்னுடைய (அயம்) இந்த (நிதம்ப-ப்ராக்பார:) நிதம்பத்தின்
பின்புறம் (அசேஷாம் வஸுமதீம்) பூமிமுழுவதையும் (ஸ்தகயதி) மறைக்கிறது. (லகுத்லஞ்ச) அதை
இலேசாகவும் (நயதி) செய்து விடுகிறது.

No comments:
Post a Comment